நவதிருப்பதி

நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவ தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.

நவக்கிரங்கள்

நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.[1][2]

சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்‌களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.

நவதிருப்பதி கோவில்கள்

நவதிருப்பதி கோயில்களின் பட்டியல்[3] [4]:

கோயில் பெயர் இறைவன் கோள் சிறப்பு நாள் அமைவிடம் படிமம் திறந்திருக்கும் காலம்
வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம் சூரியன் சூரியன் ஞாயிற்றுக்கிழமை
திருவைகுண்டம் காலை 7 - 12 , மாலை 5 - 8
விஜயாசனப் பெருமாள் கோயில் சந்திரன் நிலா திங்கட்கிழமை
நத்தம் காலை 8 - 12 ; மாலை 1 - 6
வைத்தமாநிதி பெருமாள் கோயில் அங்காரகன் செவ்வாய் செவ்வாய் கிழமை
திருக்கோளூர் காலை 7:30 - 12 ; மாலை 1 - 8
திருப்புளியங்குடி பெருமாள் கோயில் புதன் புதன் புதன்கிழமை
திருப்புளியங்குடி காலை 8 - 12; மாலை 1 - 6
ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் குரு வியாழன் வியாழக்கிழமை
ஆழ்வார்திருநகரி காலை 6 - 12; மாலை 5 - 8:45
திருப்பேரை சுக்ரன் வெள்ளி வெள்ளிக்கிழமை
தென்திருப்பேரை காலை 7 - 12 ; மாலை 5 - 8:30 pm
பெருங்குளம் பெருமாள் கோவில் சனீசுவரன் சனி சனிக்கிழமை
பெருங்குளம் காலை 7:30 - 12:30; மாலை 4:30 - 7:30
இரட்டைத் திருப்பதி தேவப்பிரான் கோயில் இராகு
தொலைவில்லிமங்கலம் காலை 8 - 1; மாலை 2 - 6
இரட்டைத் திருப்பதி
அரவிந்தலோசனர் திருக்கோயில்
கேது
தொலைவில்லிமங்கலம் காலை 8 - 1; மாலை 2 - 6

நவதிருப்பதி கோயில்கள் செல்லும் வழி

மேற்கோள்கள்

  1. http://www.dinamani.com/edition/print.aspx?artid=533824 தினமணி
  2. http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm
  3. M., Rajagopalan (1993). 15 Vaishnava Temples of Tamil Nadu. Chennai, India: Govindaswamy Printers. பக். 155–159.
  4. "Navatirupathi". The Hindu. 25 October 2002. http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm. பார்த்த நாள்: 25 October 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.