தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த படம்

சிறந்தத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்றாகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகளில் தங்கத்தாமரை விருது (சுவர்ண கமல்) வழங்கப்படும் வகைகளில் ஒன்றாகும். இது நாடு முழுமைக்குமான அனைத்து இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

சிறந்தத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது
விருது குறித்தத் தகவல்
வகை நாட்டளவில்
பகுப்பு திரைப்படங்கள்
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2011
மொத்தம் வழங்கப்பட்டவை 57
வழங்கப்பட்டது திரைப்பட விழாக்கள் இயக்குனரகம், இந்தியா
நிதிப் பரிசு 2,50,000/-
பதக்கம் தங்கத் தாமரை (சுவர்ண கமல்)
முதல் வெற்றியாளர்(கள்) சியாம்ச்சி ஆய்
கடைசி வெற்றியாளர்(கள்) பியாரி மற்றும் தியோல்

சிறந்த திரைப்படத்திற்கான விருது 1979ஆம் ஆண்டில் மட்டும் வழங்கப்படவில்லை.

தேசிய திரைப்பட விருதுகள் (தங்கத்தாமரை விருது) சிறந்த திரைப்படங்களுக்கான வெற்றியாளர்கள்:

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குனர்
2013 பான் சிங் தோமர் இந்தி டிக்மான்சு துலியா
2012[1] பியாரி
தியோல்
பியரி பாஷே
மராத்தி
சுவீரன்
உமேஷ் குல்கர்ணி
2011[2] ஆதாமின்டே மகன் அபு மலையாளம் சலீம் அகமது
2010[3] குட்டி சிரான்க் மலையாளம் ஷாஜி என். கருண்
2009[4] அந்தஹீன் வங்காளி அனிருத்த ராய் சௌத்திரி
2008 காஞ்சிவரம் தமிழ் பிரியதர்சன் [5][6]
2007 புலிஞ்ஞானம் மலையாளம் பிரியநந்தன் [5]
2006 கால்புருஷ் – பனிப்புகையில் நினைவுகள் வங்காளம் புத்ததேவ் தாஸ்குப்தா [7]
2005 பேஜ் 3 இந்தி/ஆங்கிலம் மதுர் பந்தார்கர்
2004 ஷ்வாஸ் மராத்தி சந்தீப் சாவந்த்
2003 மொண்டோ மேயேர் உபக்யான் வங்காளம் புத்ததேவ் தாஸ்குப்தா [8]
2002 த்வீபா கன்னடம் கிரீஷ் காசரவல்லி
2001 சாந்தம் மலையாளம் ஜெயராஜ்
2000 வானப்பிரஸ்தம் மலையாளம் (பிரான்ஸ்/இந்தியா/செர்மனி) சாஜி என். கருண்
1999 சமர் இந்தி சியாம் பெனகல்
1998 தாயி சாகெபா கன்னடம் கிரீஷ் காசரவல்லி
1997 லால் தர்ஜா வங்காளம் புத்ததேவ் தாஸ்குப்தா
1996 கதாபுருசன் மலையாளம் (இந்தியா/சப்பான்) அடூர் கோபாலகிருஷ்ணன்
1995 உனிசே ஏப்ரல் வங்காளம் ரிதுபர்னோ கோஷ்
1994 சராச்சர் வங்காளம் புத்ததேவ் தாஸ்குப்தா
1993 பக்வத் கீதா சமசுகிருதம் ஜி வி அய்யர்
1992 அகான்துக் வங்காளம் (பிரான்ஸ்/இந்தியா) சத்யஜித் ரே
1991 மறுபக்கம் தமிழ் கே.எசு. சேதுமாதவன்
1990 பாக் பகதூர் இந்தி/வங்காளம் புத்ததேவ் தாஸ்குப்தா
1989 பிறவி மலையாளம் ஷாஜி என். கருண்
1988 ஹலோதியா சோரயே பௌதான் காய் அசாமி ஜானு பரூவா
1987 தபரானா கதே கன்னடம் கிரீஷ் காசரவல்லி
1986 சிதம்பரம் மலையாளம் கோவிந்தன் அரவிந்தன்
1985 தாமுல் இந்தி பிரகாஷ் ஜா
1984 ஆதி சங்கராச்சார்யா சமசுகிருதம் ஜி வி அய்யர்
1983 சோக் வங்காளம் உத்பலேந்து சக்ரவர்த்தி
1982 தகால் வங்காளம் கௌதம் கோஸ்
1981 அகேலேர் சந்தானே வங்காளம் மிருனாள் சென்
1980 சோத் இந்தி பிப்லாப் ராய்சௌத்திரி
1979 விருது ஏதுமில்லை -
1978 கடஷ்ரத்தா கன்னடம் கிரீஷ் காசரவல்லி
1977 மிருகயா இந்தி மிருனாள் சென்
1976 சோமன துடி கன்னடம் பி.வி.கரந்த்
1975 கோரஸ் இந்தி/வங்காளம் மிருனாள் சென்
1974 நிர்மால்யம் மலையாளம் எம். டி. வாசுதேவன் நாயர்
1973 சுயம்வரம் மலையாளம் அடூர் கோபாலகிருஷ்ணன்
1972 சீமாபத்தா வங்காளம் சத்யஜித் ரே
1971 சம்ஸ்காரா கன்னடம் பட்டாபி ராமா ரெட்டி
1970 புவன் சோம் இந்தி மிருனாள் சென்
1969 கூப்பி கைனே பாகா பைனே வங்காளம் சத்யஜித் ரே
1968 ஹதே பசாரே வங்காளம்/இந்தி தபன் சின்கா
1967 தீஸ்ரி கசம் இந்தி பாசு பட்டாச்சார்யா
1966 செம்மீன் மலையாளம் ராமு காரியத்
1965 சாருலதா வங்காளம் சத்யஜித் ரே
1964 சேகார் ஔர் சப்னா இந்தி இக்வாஜா அகமது அப்பாஸ்
1963 தாதா தாக்கூர் வங்காளம் சுதீர் முகர்ஜி
1962 பாகினி நிவேதிதா வங்காளம் பிஜோய் போஸ்
1961 அனுராதா இந்தி ரிசிகேஷ் முகர்ஜி
1960 அப்பூர் சன்சார் வங்காளம் சத்யஜித் ரே
1959 சாகர் சங்கமே வங்காளம் தேபகி போஸ்
1958 தோ அங்கேன் பாரா ஹாத் இந்தி வி.சாந்தாராம்
1957 காபூலிவாலா வங்காளம் தபன் சின்கா
1956 பதேர் பாஞ்சாலி (சிறுவழியின் பாடல்) வங்காளம் சத்யஜித் ரே
1955 மிர்சா கலீப் இந்தி சோரப் மோடி
1954 சியாம்ச்சி ஆய் மராத்தி பி.கே.அத்ரே

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.