தென்றல் (தொலைக்காட்சித் தொடர்)

தென்றல் என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2009 முதல் சனவரி 17, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படி கோலங்கள் தொடருக்கு பதிலாக இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி 1,340 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற காதல் மற்றும் குடும்ப சூழ்நிலை பற்றிய தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை விகடன் ஒளித்திரை என்ற நிறுவனம் தயாரிக்க இயக்குனர் எஸ்.குமரன் இயக்கியுள்ளார்.[1][2]

தென்றல்
வகை
எழுத்து கதை:
ஆனந்த விகடன் கதை குழு
திரைக்கதை:
குரு. சம்பத்குமார்
சி. யு . முத்துச்செல்வன்
வசனம்:
குரு. சம்பத்குமார் எழில்வரதன்
இயக்கம் எஸ்.குமரன்
நடிப்பு
முகப்பிசைஞர் கிரண்
முகப்பிசை "போராடவே" பாடகர்
கார்த்திக்
பாடலாசிரியர் யுகபாரதி
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 6
இயல்கள் 1,340
தயாரிப்பு
தயாரிப்பு விகடன் ஒளித்திரை
தொகுப்பு
  • சசி கே.பசந்த்
  • ஜி.வி.ராஜன்
  • பி.சந்திரு
  • எஸ். நீல்ஸ்டன்
  • பழனிசாமி
நிகழ்விடங்கள் சென்னை
ஒளிப்பதிவு எஸ். டி. மார்ட்ஸ்
ஓட்டம்  தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
விகடன் ஒளித்திரை
ஒளிபரப்பு
அலைவரிசை சன் தொலைக்காட்சி
பட வடிவம் 576i (SDTV)
1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு 7 திசம்பர் 2009 (2009-12-07)
இறுதி ஒளிபரப்பு 17 சனவரி 2015 (2015-01-17)
காலவரிசை
முன் கோலங்கள்
பின் பிரியமானவள்
தொடர்பு

இந்த தொடரில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ராஜ் நடிக்க இவருக்கு ஜோடியா பிரபல சின்னத்திரை நடிகர் தீபக் டிங்கர் என்பவர் தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சேர்ந்து ஹேமலதா, சுசேன் ஜார்ஜ், சுபாலேகா சுதாகர், சாதனா, சுதா சந்திரன், நீலிமா ராணி, நிழல்கள் ரவி, ஐசுவரியா போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த தொடரின் கதை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை விளக்குகின்றது. பிசினஸ் ஸ்டாண்டர்ட் என்ற இந்திய செய்தித்தாள் தமிழில் முதல் இளமை காதல் தொடர் என்று விமர்சித்து செய்தி வெளியிட்டது.[3][4] இணையத்தில் மிகவும் வைரலாகிய முதல் தமிழ் தொடர் என்ற பெயரும் மற்றும் அதிக மக்களால் அதிகளவு பார்க்கப்பட்ட தொடரில் இதுவும் ஒன்றாகும். தென்றல் தொடருக்காக விகடன் விருதுகள் 2010, தமிழ்நாடு தேசிய விருது 2010, மைலாப்பூர் அகாடமி விருதுகள் 2011 மற்றும் சன் குடும்பம் விருதுகள்[5][6] போன்ற பல விருது நிகழ்வுகளில் சிறந்த தொடர், சிறந்த கதாநாயகி, சிறந்த ஜோடி, சிறந்த வில்லன் போன்ற 35 பிரிவுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு 25 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் 10 வருடம் கழித்து நவம்பர் 26, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை விகடன் தொலைக்காட்சி யூடியூப் என்ற இணைய அலைவரிசையில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறது.[7]

கதை சுருக்கம்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த துளசி (ஸ்ருதி ராஜ்) என்ற இளம் பெண் படிப்பில் சிறந்து விளங்குகின்றாள். பள்ளி படிப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரி படிப்பு படிக்க ஆசைப்படுகிறாள். இவளை வெறுக்கும் தந்தை முத்துமாணிக்கம் (சுபாலேகா சுதாகர்) காரணம் துளசியின் தாய் புவனா (ஐசுவரியா/சுதா சந்திரன்) இன்னொருவருடன் சென்று விட்டார். சித்தி பத்மா (சாதனா) கொடுமையிலிருந்து அவளை அரவணைத்து வளர்த்து வரும் பாட்டி (எஸ். என். லட்சுமி) மற்றும் இவளுக்கு ஆதரவாக இருக்கும் சிறந்த இரண்டு நான்பிகளான தீபா (ஹேமலதா) மற்றும் கல்யாணி (சுசேன் ஜார்ஜ்/காவ்யாவர்ஷினி). இதன் நடுவில் பணத்திற்காக இவளை வேலாயுதம் (நிழல்கள் ரவி) என்ற வயதான பணக்காரருக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கும் சித்தி பத்மா இந்த சூழ்நிலையில் இருந்து எதிர் பாரதசார்ந்தர்ப்பதில் இவளை காப்பாற்றும் தமிழரசன். காலப்போக்கில் இருவரும் காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்கின்றனர். இருவரையும் பிரிக்க நினைக்கும் தமிழின் தாய் ருக்குமணி (சாந்தி வில்லியம்ஸ்/கே.எஸ்.ஜெயலட்சுமி) மற்றும் தமிழுக்கு நிஞ்சாயம் செய்த பெண் சாருலதா (ஸ்ரீவித்யா). இவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து எப்படி இருவரும் மீண்டு துளசி தனது படிப்பிலும் வாழ்வில் வெற்றி பெறுகிறாள் என்பதுதான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஸ்ருதி ராஜ் - துளசி தமிழரசன் தமிழ்
  • தீபக் டிங்கர் - தமிழரசன்
  • ஹேமலதா - தீபா பிரபாகர்
  • சுசேன் ஜார்ஜ் → காவ்யாவர்ஷினி - கல்யாணி மோகன்

துளசி குடும்பத்தினர்

  • சுபாலேகா சுதாகர் - முத்துமாணிக்கம் (தந்தை)
  • சாதனா - பத்மா முத்துமாணிக்கம் (சித்தி)
  • ஐயப்பன் - மோகன் முத்துமாணிக்கம் (சகோதரன், கல்யாணியின் கணவன்)
  • சுஜிதா → சத்யா சாய் - பவித்ரா முத்துமாணிக்கம் (சகோதரி)
  • எஸ். என். லட்சுமி - பாட்டி

தமிழரசன் குடும்பத்தினர்

  • சாந்தி வில்லியம்ஸ் → கே.எஸ்.ஜெயலட்சுமி - ருக்குமணி (தாய்)
  • நீலிமா ராணி → ஷாலு குரியன் → பாக்யலட்சுமி - லாவண்யா நிதிஷ் (தங்கை, சதீஷின் மனைவி)
  • ஷியாம் சுந்தர் - நிதிஷ் கிரிபிரகாஷ் (லாவண்யாவின் கணவன்)
  • ஆண்டனி ராஜ் - புவியரசு (அண்ணன்)
  • லட்சுமி → பவ்ய கலா - சுதா பூவியரசு (அண்ணி)

பிரபாகர் குடும்பத்தினர்

  • ஆடம்ஸ் - பிரபாகர் லக்ஷ்மன்
  • யுவராணி - திருப்பரா சுந்தரி லக்ஷ்மன் (தாய், லக்ஷ்மணின் முதல் மனைவி)
  • ஐசுவரியாசுதா சந்திரன் - புவனா லக்ஷ்மன் (துளசியின் தாய், லக்ஷ்மணின் இரண்டாவது மனைவி )
  • ஏ. சி. முரளி மோகன் - லக்ஷ்மன்

தீபா குடும்பத்தினர்

  • ராஜசேகர் - வரதராஜன்
  • ஏகவல்லி - அமிர்தா வரதராஜன் (சகோதரி)
  • கிரண் மாய் - பானு வரதராஜன் (சகோதரி)

துணை கதாபாத்திரம்

  • நிழல்கள் ரவி - வேலாயுதம்
  • ஸ்ரீவித்யா - சாருலதா
  • மோகன பிரியா - காயத்ரி
  • ஆர்த்தி - சியாமளா
  • ஷியாம் - ஆனந்த்
  • ராஜா - கனகசவாதி
  • சுந்தர் - ஜோசப்
  • அகிலா - ரோஜா
  • காயத்ரி - நிலா
  • வீனா நாயர் - மாயா
  • ஐஸ்வர்யா மேனோன் - சுருதி
  • சுவாமிநாதன் - வெங்கடாசலம்
  • வத்சலா - திலகா
  • தளபதி தினேஷ் -

மறு தயாரிப்பு

மேற்கோள்கள்

  1. "Thendral video goes viral on Youtube, watch video". India Today. 27 March 2012. Retrieved 8 December 2014.
  2. "Drama awards". The Hindu. 12 August 2011. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/drama-awards/article2348475.ece. பார்த்த நாள்: 8 December 2014.
  3. Vanita Kohli-Khandekar (6 February 2012). "From content shop to media major". Business Standard. http://www.business-standard.com/article/management/from-content-shop-to-media-major-112020600007_1.html. பார்த்த நாள்: 14 March 2014.
  4. Gupta, Rinku (11 May 2011). "Young, bold and daring: Srividya". Indian Express. http://www.newindianexpress.com/entertainment/television/article468822.ece#.UyKHrD-SzTo. பார்த்த நாள்: 14 March 2014.
  5. "பிரமாண்டமான முறையில் நடந்த சன் குடும்பம் விருதுகள் வழங்கும் விழா". Dinakaran (29 December 2012). பார்த்த நாள் 15 December 2014.
  6. "Director KB honoured". Ibnlive.com (21 August 2011). பார்த்த நாள் 19 February 2015.
  7. "மீண்டும் தென்றல் தொடர்" (Nov 4, 2018).

வெளி இணைப்புகள்

சன் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 9 மணி தொடர்கள்
Previous program தென்றல்
(07 டிசம்பர் 2009 - 17 ஜனவரி 2015)
Next program
கோலங்கள்
(26 மே 2003 – 4 திசம்பர் 2009)
பிரியமானவள்
(19 சனவரி 2015 – 11 மே 2019)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.