தமிழர் சமையல் கருவிகள்
சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் மறைந்து கொண்டு வருகின்றன. சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் சாதனங்கள், பரிமாறுவதற்கான சாதனங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நகரங்களில் வாழ்பவர்களால் அறியப் படாதவையாகிவிட்டன. தமிழர்கள் மட்பாண்டங்களையும், செம்பு, பித்தளை, வெள்ளியானல் செய்யப்பெற்ற பாத்திரங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அத்தகைய சாதனங்களில் சில பின்வருமாறு:
கருவி | படிமம் | செயற்பாடு | உணவு |
அம்மி, குழவி | ![]() |
அரைத்தல் | சம்பல் |
உரல், உலக்கை | இடித்தல் | நெற் சோறு | |
ஆட்டுக்கல், குழவி | அரைத்தல் | தோசை, இட்லி | |
திருகைக்கல்லு | உடைத்தல் | பயறு | |
சின்ன உரல், உலக்கை | ![]() |
இடித்தல் | இஞ்சி பூண்டு மிளகாய்ப் பொடி |
துருவுபலகை | ![]() |
துருவுதல் | தேங்காய் |
அரிவாள்மணை | ![]() |
அரிதல், வெட்டுதல் | காய்கறி |
மாப்பலகை, உருளை | ![]() |
(மா) குழைத்தல், | ரொட்டி |
இடியப்ப உரல்/முறுக்கு உரல், சில்லு | இடியப்பம், முறுக்கு, சிற்பி பிழிதல் | இடியப்பம், முறுக்கு, சிற்பி | |
இடியப்ப இயந்திரம் | ![]() |
இடியப்பம் பிழிதல் | இடியப்பம் |
முறம்/சுளகு | ![]() |
புடைத்தல், தானியங்களின் கோதை பிரிக்க | சோறு, உழுந்து |
அகப்பை/மர அகப்பை, தட்டகப்பை | கலத்தல், ஆற்றுதல் | கறி, வறை, பல | |
அரிதட்டு | அரித்தல் | மா, அரிசி போன்றவற்றை தூய்மையாக அரித்தெடுக்க | |
மத்து | ![]() |
கடைதல் | மோர், பருப்பு, கீரை |
வடிகட்டி | ![]() |
வடித்தல் | தேனீர், கோப்பி |
பிட்டுக் குழல் | அவித்தல் | பிட்டு | |
இடியப்பச் சட்டி, இடியப்பத் தட்டு | ![]() |
அவித்தல் | இடியப்பம் |
இட்டலிச் சட்டி | ![]() |
அவித்தல் | இட்டலி |
தோசைக்கல் | ![]() |
சுடுதல் | தோசை |
அடுப்பு, மண் அடுப்பு | ![]() |
சமைத்தல் | பல வகை உணவுகள் |
உறி | சேமித்தல் | பல வகை உணவுகள் | |
மண்சாடி, மண்பானை | ![]() |
குளிர்வித்தல் | தண்ணீர் |
குடம், செம்பு | நீர் சேமித்தல் | தண்ணீர் | |
கல்லரிக்கும் சட்டி | கற்களைப் பிரித்தெடுத்தல். இதற்காக வரிசையாகப் படிகளைக் கொண்டிருக்கும் |
அரிசி, பிற தானியங்கள் | |
சட்டி, மண்சட்டி | அடுதல்/சமைத்தல் | கறி, பல வகை உணவுகள் | |
பானை | வேக வைத்தல் | சோறு | |
கரண்டி, தேக்கரண்டி, முள்ளுக்கரண்டி, மேசைக்கரண்டி | ![]() |
எடுத்தல், அளத்தல், உண்ணல் | பல வகை உணவுகள் |
பேணி | பரிமாறல் | குடிபானம் | |
தட்டு/கோப்பை | பரிமாறல் | பல வகை உணவுகள் | |
நீத்துப்பெட்டி | உணவை இட்டு வேக வைத்தல், அவித்தல் | புட்டு | |
புனல் | ![]() |
வாய் குறுகிய பாத்திரங்களில் எண்ணெய் ஊற்றல் | எண்ணெய் |
பிரமனை | சமையல் கலங்களை தரையில் வைக்க | பல வகைப்பாத்திரங்கள் | |
குழிப்பணியாரக்கல் | குழிப்பணியாரம் செய்ய | குழிப்பணியாரம் | |
மூங்கில் தட்டு | ![]() |
பொருட்களை வைக்க | தட்டு |
- கூர்க்கத்தி
- கொடுவாக் கத்தி
- கலசம், குவளை; filtering; தண்ணீர்
- பெட்டிகள், குட்டான்
- திருகணி
- சுண்டு
- குடம்
- குவளை
- தாச்சி, அப்பதாச்சி, தட்டை தாச்சி
- குழியப்பச் சட்டி
- ஆவிச்சட்டி
- அடைக்கல்லு
- குட்டான் (பனங்கட்டிக் குட்டான்)
- மூக்குப் பேணி
பழம்பொருட்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.