தமிழர் ஆடற்கலை

தமிழ்நாட்டின் கேளிக்கைக் கலைகளின் வரலாறு என்பது மிகத் தொன்மையானது ஆகும். இங்கு கேளிக்கைகள் என்பது மூன்று வடிவங்களில் இருந்தது. அவையாவன இயல் (இலக்கியம்), இசை, நாடகம். இவைகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது தெருக்கூத்து ஆகும். சில நடன வடிவங்கள் பழங்குடி மக்களால் நிகழ்த்தப்பட்டன.[1] பெரும்பாலான தொன்மையான நடன வடிவங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

நடனம் அல்லது ஆடல் மனிதனுக்கு இயல்பான வெளிப்பாடுகளில் ஒன்று. ஆடலை கூத்து என்றும் நாடகத்தை கதை தழுவி வரும் கூத்து என்றும் கூறுவர்.[2] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உண்டு. தமிழர் மரபில், சூழமவைவில் சிறப்புற்ற ஆடல்கலை வடிவங்களையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் தமிழர் ஆடற்கலை எனலாம்.

பரதநாட்டியம்

ரத நாட்டியம்் [

பரதநாட்டியம் என்பது இந்தியாவின் தொன்மையான நடன வடிவங்களில் மிகவும் முக்கியமான நடன வடிவமாகும். இது தமிழ்நாட்டில் தோன்றியது .[3][4][5] இந்த நடன வடிவம் தனிநபராக ஆடக்கூடியது. பெரும்பாலும் இவ்வகை நடனங்களை பெண்களே ஆடுவர்.[6][7] சில சமயங்களில் ஆண்களும் இந்த நடனங்களை ஆடுவர். மேலும் இந்த நடனம் தென் தமிழகத்தின் சமயக் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்தம் போன்ற மத கருத்துக்களை இது வெளிப்படுத்தும்..[3][8][9] இந்தியாவில் உள்ள நடன வடிவங்களிலேயே மிகத் தொன்மையானது பரதநாட்டியம் ஆகும். [10]

பாம்பர் நடனம்

இந்த வகையான நடனமானது கோயில்களுக்குள்ளே விளக்குகளின் நடுவில் ஆடக்கூடியது. இதன் முக்கிய நோக்கம் கிருட்டிணனை வழிபாடு செய்வது ஆகும். இந்த வகையான நடனங்கள் பெரும்பாலும் இராம நவமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தி போன்ற தினங்களில் நடைபெறுகிறது.

பொம்மலாட்டம்

பொம்மலாட்ட நடனம் ஒவ்வொரு ஊரில் நடைபெறும் திருவிழாக்களின் போது நிகழ்த்தக்கூடிய ஒரு நடன வடிவம் ஆகும். பல வகையான பொம்மைகள் இவ்வகையான நடனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக துணி, மரம் (மூலப்பொருள்),பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல் ஆகியவை ஆகும். பொம்மலாட்டக்காரர்கள் திரைக்குப் பின்னால் இருந்து பொம்மைகளைப் பிடித்துக் கொள்வர். புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள் போன்றவற்றை பொம்ம்மலாட்டக் கதைகளாக காட்சிப்படுத்துவார்கள். இந்தக் கதைகளை விடலைப் பருவத்தினர் மற்றும் சிறுவர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கேளிக்கைசெய்யும் வகையில் அமிந்திருக்கும். [11]

சக்கை ஆட்டம்

7 X 3/ 4 அடி (அளவை) அளவு உள்ள குச்சிகளை விரல்களுக்கு இடையில் வைத்து ஒலி எழுப்புவர். பெரும்பாலும் இவ்வகையான நடனங்கள் எட்டு முதல் பத்து நபர்கள் வீதம் வட்டமாகவோ அல்லது நேரெதிர் வரிசையில் இருந்தோ ஆடுவர். இவ்வகையான நடனங்களின் போது பாடப்படும் பாடல்களானது ஆண் அல்லது பெண் தெய்வங்களைப் போற்றும் விதத்தில் அமைந்திருக்கும்.

மயிலாட்டம்

மயிலாட்டம் என்பது பெரும்பாலாக பெண்கள் மயில் போன்று ஆடை அணிந்துகொண்டு ஆடப்படும் நடனம் ஆகும். இதில் மயில் போன்ற இறகுகள், அலகு ஆகியவை இருக்கும். இந்த அலகானது திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அதனை ஆடைக்குள் இருக்கும் நூலினைக் கொண்டு திறக்கவோ அல்லது மூடவோ இயலும். இதனைப் போன்றே காளை ஆட்டம், கரடி ஆட்டம், அரக்கன் போன்று அடை அணிந்து ஆடும் ஆலி ஆட்டம் போன்ற நடனங்களும் ஊர்களில் நடக்கும் திருவிழா கேளிக்கைகளுக்காக ஆடப்படுகிறது. மயிலாட்டம் என்பது மயில்கள் முருகனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆடப்படுகிறது.

மேலும் சில ஆடற்கலைகள் பின்வருமாறு

  • பறையாட்டம்
  • காமன் பண்டிகை ஆட்டம்
  • கை சிலம்பு ஆட்டம்
  • கோலாட்டம்
  • தேவராட்டம்
  • கரகாட்டம்
  • காவடி ஆட்டம்
  • கழைக் கூத்து
  • பொய் கால் ஆட்டம்
  • கும்மி

தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்

பார்க்க: தமிழர் ஆடற்கலைகள் பட்டியல்

மேற்கோள்கள்

  1. "Breathing life into tribal dance forms". The Hindu (Madurai, India). 1 July 2005. http://www.hindu.com/2005/07/01/stories/2005070116910300.htm.
  2. ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம். பக்கம் 276.
  3. Bharata-natyam Encyclopædia Britannica. 2007
  4. Williams, Drid (2004). "In the Shadow of Hollywood Orientalism: Authentic East Indian Dancing". Visual Anthropology (Routledge) 17 (1): 83-84. doi:10.1080/08949460490274013. http://jashm.press.illinois.edu/12.3/12-3IntheShadow_Williams78-99.pdf.
  5. Banerjee, tProjesh (1983). Indian Ballet Dancing. New Jersey: Abhinav Publications. பக். 43.
  6. Peter J. Claus; Sarah Diamond; Margaret Ann Mills (2003). South Asian Folklore: An Encyclopedia. Routledge. பக். 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-93919-5. https://books.google.com/books?id=ienxrTPHzzwC.
  7. Khokar, Mohan (1984). Traditions of Indian Classical Dance. India: Clarion Books. பக். 73–76.
  8. Richard Schechner (2010). Between Theater and Anthropology. University of Pennsylvania Press. பக். 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8122-0092-6. https://books.google.com/books?id=DoEaulAxbu8C&pg=PA65.
  9. T Balasaraswati (1976), Bharata Natyam, NCPA Quarterly Journal, Volume 4, Issue 4, pages 1-8
  10. Richard Schechner (2010). Between Theater and Anthropology. University of Pennsylvania Press. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0812279290. https://books.google.com/books?id=DoEaulAxbu8C.
  11. Mills et al., p383384

மேலும் வாசிக்க

  • தமிழக நாட்டார் நிகழ்த்தும் கலைகள் களஞ்சியம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.