டிக் சேனி
ரிச்சர்ட் புரூஸ் "டிக்" சேனி (Richard Bruce "Dick" Cheney, பி. ஜனவரி 30, 1941) அமெரிக்காவின் 46ஆவது துணைத் தலைவர் ஆவார்.
Richard Bruce Cheney ரிச்சர்ட் புரூஸ் சேனி | |
---|---|
![]() | |
46வது ஐக்கிய அமெரிக்கத் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஜனவரி 20 2001 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் |
முன்னவர் | ஆல் கோர் |
17வது ஐக்கிய அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் | |
பதவியில் மார்ச் 20 1989 – ஜனவரி 20 1993 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் |
துணை | டானல்ட் ஆட்வுட் |
முன்னவர் | ஃபிராங்க் கார்லூச்சி |
பின்வந்தவர் | லெஸ் ஆஸ்பின் |
15வது அமெரிக்கக் கீழவை சிறுபான்மை விப் | |
பதவியில் ஜனவரி 3 – மார்ச் 20 1989 | |
தலைவர் | ராபர்ட் மிசெல் |
முன்னவர் | டிரென்ட் லாட் |
பின்வந்தவர் | நியூட் கிங்கிரிச் |
கீழவை உறுப்பினர் வயோமிங்கிலிருந்து | |
பதவியில் ஜனவரி 3 1979 – மார்ச் 20 1989 | |
முன்னவர் | டேனோ ரொங்காலியோ |
பின்வந்தவர் | கிரெக் தாமஸ் |
7வது [[வெள்ளை மாளிகை பணியாளர் தலைவர்]] | |
பதவியில் நவம்பர் 21 1975 – ஜனவரி 20 1977 | |
குடியரசுத் தலைவர் | ஜெரல்ட் ஃபோர்ட் |
முன்னவர் | டானல்ட் ரம்ஸ்ஃபெல்ட் |
பின்வந்தவர் | ஹாமில்ட்டன் ஜார்டன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 30 சனவரி 1941 லிங்கன், நெப்ராஸ்கா, அமெரிக்கா |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | லின் சேனி |
இருப்பிடம் | முதலாம் எண் வானாய்வக வட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வயோமிங் பல்கலைக்கழகம் |
சமயம் | ஐக்கிய மெத்தடித்த தேவாலயம் |
கையொப்பம் | ![]() |
இணையம் | ரிச்சர்ட் சேனி |
நெப்ராஸ்காவில் பிறந்து வயோமிங்கில் வளந்த சேனி ஜெரல்ட் ஃபோர்ட் அரசில் வெள்ளை மாளிகை பணியாளர் தலைவராக (White House Chief of Staff) (பொறுப்பு வகித்தார். 1978இல் வயோமிங் மாநிலத்திலிருந்து அமெரிக்கச் சட்டமன்றத்தின் கீழவையுக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு பிறகு மேலும் நான்கு முறை கீழவையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1988 முதல் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் அரசில் பாதுகாப்புச் செயலாளராக பணி புரிந்தார். இப்பதவியில் இருக்கும்பொழுது வளைகுடா போரை ஒழுங்குபடுத்தினார்.
1995 முதல் 2000 வரை ஹாலிபர்ட்டன் என்னும் பன்னாட்டு ஆற்றல் நிறுவனத்தின் தொழிலதிபராக பணி புரிந்தார். 2000இல் ஜார்ஜ் வாக்கர் புஷ் உடைய குடியரசுத் தலைவர் பிரச்சாரத்தை சேர்ந்து அவரின் துணைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புஷ்-சேனி பிரச்சாரம் 2000 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று சேனி துணைத் தலைவர் பதவியில் ஏறினார்.