டாரென் சமி

டாரென் ஜுலியஸ் கேவி சமி (Darren Julius Garvey Sammy , பிறப்பு: திசம்பர் 20, 1983), இவர் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் தலைவர் (captain). இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சுசாளருமாவார். 2012 ஐசிசி உலக இருபது20 மற்றும் 2016 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் கோப்பைகளை இவரின் தலைமையிலான் அணி வென்றது.2004 ஆம் ஆண்டுன் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். செயிண்ட் லூசியாவில் இருந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்குத் தேர்வான முதல் வீரர் இவர் ஆவார். 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 66 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 7 இலக்குகளைக் கைப்பற்றினார். அறிமுகப் போட்டியில் ஒரு மேற்கிந்திய வீரர் எடுக்கும் சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன் 1950 ஆம் ஆண்டில் ஆல்ஃப் வேலண்டைன் எடுத்ததே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அக்டோபர் 2010 ஆம் ஆண்டில் சமி மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். மே, 2012 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல் நூறு ஓட்டங்கள் எடுத்தார்.

டாரென் சமி
மேற்கிந்தியத்தீவுகள்
இவரைப் பற்றி
முழுப்பெயர் டாரென் ஜுலியஸ் கேவி சமி
பிறப்பு 20 திசம்பர் 1983 (1983-12-20)
சென் லூசியா, மேற்கிந்தியத் தீவுகள்
உயரம் 6 ft 5 in (1.96 m)
வகை அணியின் தலைவர், சகலதுறை ஆட்டக்காரர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூன் 7, 2007:  இங்கிலாந்து
கடைசித் தேர்வு திசம்பர் 5, 2010:  இலங்கை
முதல் ஒருநாள் போட்டி சூலை 8, 2004:  நியூசிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி பெப்ரவரி 27, 2015:   தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 38 123 96 184
ஓட்டங்கள் 1,323 1,818 3,549 2,922
துடுப்பாட்ட சராசரி 21.69 21.68 23.81 24.55
100கள்/50கள் 1/5 0/9 2/21 0/11
அதிக ஓட்டங்கள் 106 89 121 84
பந்து வீச்சுகள் 6215 4,902 13,744 7,246
இலக்குகள் 84 81 217 154
பந்துவீச்சு சராசரி 35.80 44.25 28.81 37.40
சுற்றில் 5 இலக்குகள் 4 10
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 7/66 4/26 7/66 4/16
பிடிகள்/ஸ்டம்புகள் 65/ 66/ 137/ 101/

பெப்ரவரி 27, 2015 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

சமியின் தலைமையில் இரு பன்னாட்டு இருபது20 கோப்பைகளை வென்றுள்ளது. 2012 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கோப்பையை 8 ஆண்டுகள் கழித்து பெற்றனர். இதற்கு முன் 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றனர்.[1] பின் 2016 ஐசிசி உலக இருபது20 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.[2] பாக்கித்தான் சூப்பர் லீக் தொடரில் பெசாவர் ஷல்மி அணியின் தலைவராக உள்ளார்.

ஆகஸ்டு 5, 2016 இல் பன்னாட்டு இருபது20 போட்டிக்குத் தலைவராக நீடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.[3]

சர்வதேச போட்டிகள்

மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போட்டி துவங்கும் சில நாட்களுக்கு முன்பாக இவருக்கு காயம் ஏற்பட்டதானால் இவர் விலகினார். பின் மே,2007 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.[4][5] இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. இவர் அலஸ்டைர் குக்கை முதல் இலக்காக வீழ்த்தினார். இவர் 17 ஓவர்கள் வீசினார். ஓவருக்கு 1.88 ஓட்டங்கள் மட்டுமெ கொடுத்து சிறப்பாகப் பந்து வீசினார். இரண்டாவது பகுதியில் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கல் வோகன் இலக்கினை வீழ்த்தினார்.

தனது 17 ஆவது ஓவரில் இயன் பெல் இலக்கினை வீழ்த்தினார். இவரை ராம்தின் கேட்ச் பிடித்து வீழ்த்தினார். இதே முறையில் இவரின் அடுத்த பந்தில் மாட் பிரியர் இலக்கினை வீழ்த்தினர். அதற்கு அடுத்த இரண்டாவது பந்தில் லியம் பிளன்கட் இலக்கினை டுவைன் பிராவோ கேட்ச் பிடிக்க வீழ்த்தினர். பின் அதே போட்டியில் ஸ்டீவ் ஹர்மின்சன், மான்டி பனேசார் மற்றும் போல் கொலிங்வுட் இலக்கினை வீழ்த்தி 66 ஓட்டங்களுக்கு 7 இலக்குகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இதற்கு முன் 1950 ஆம் ஆண்டில் ஆல்ஃப் வேலண்டைன் எடுத்ததே சிறந்த பந்துவீச்சாக இருந்தது.[6]

சான்றுகள்

  1. "Samuels special the spur for epic West Indies win". Wisden India. 7 October 2012. http://www.wisdenindia.com/match-report/samuels-special-spur-epic-west-indies-win/29853.
  2. .
  3. Won't be West Indies' T20I captain anymore: Darren Sammy, Cricbuzz, 5 August 2016, retrieved 5 August 2016
  4. Sammy keen for Test debut, Cricinfo, 10 May 2007, retrieved 2011-07-12
  5. Bolton, Paul (14 May 2008), "West Indies bowlers rue washout", The Guardian, retrieved 2011-09-28
  6. "3rd Test: England v West Indies at Manchester, Jun 7–11, 2007". espncricinfo. பார்த்த நாள் 2011-12-13.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.