சோமாசுகந்தர்

சிவ வடிவங்களில் ஒன்றான
சோமாசுகந்தர்

சோமாசுகந்தர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
64 சிவவடிவங்கள்
அடையாளம்:உமை சிவன் நடுவே
குழந்தையாகிய கந்தர்
துணை:உமையம்மை
இடம்:கயிலை
ஆயுதம்:மான் மழு
வாகனம்:நந்தி தேவர்

சோமாஸ்கந்தர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

மகேசுவர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறப்பான வடிவமாகும்.

பஞ்சகுண சிவமூர்த்திகளில் சோமாசுகந்தர் கருணா மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.

சொல்லிலக்கணம்

சோமாசுகந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும், உமையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சக உமா ஸ்கந்தர் என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியது.

வேறு பெயர்கள்

  • குழந்தை நாயகர்
  • இளமுருகு உடனுறையும் அம்மையப்பர்
  • சச்சிதானந்தம்
  • சிவனுமைமுருகு

தோற்றம்

உருவக் காரணம்

சூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க ஆறு முகங்களிலிருக்கும் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள்.

ஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சோமாஸ்கந்தர் என்று அழைக்கின்றார்கள்.

கோயில்கள்

  • திருநெல்வேலி நெல்லயப்பர் கோவில்
  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்,
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • இலங்கை, திருக்கேதீஸ்வரம் [1]

மேலும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.