கஜாசுர சம்ஹாரர்
கஜாசுர சம்ஹாரர், அறுபத்து மூன்று சிவ திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகவும். கஜாசுரனுடன் எனும் அரக்கனை அழித்த சிவனின் திருவுருவத்திற்கு கஜாசுர சம்ஹாரர் என்று பெயர். இவரை யானை உரித்த பெருமான் என்று தமிழும் கூறுகின்றனர்.
கஜாசுர சம்ஹாரர் | |
---|---|
யானை உரித்த பெருமான் | |
தமிழ் எழுத்து முறை | கஜாசுர சம்ஹாரர் |
இடம் | கயிலை மலை |
மந்திரம் | ஓம் நமசிவாய |
ஆயுதம் | பாம்பு |
ஆனையவுணன்செற்றான்.
திருவுருவக் காரணம்
கயாசுரன் எனும் அசுரன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து வரத்தினை பெற்றவன். சிவனைத் தவிற மற்ற அனைவரையும் வெல்லும் வலிமை பெற்றான். அவனை அழித்திட சிவன் பிரம்மாண்ட உருவம் எடுத்தார். கயாசுரனை தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்த மடைந்தார். இந்த வடிவத்திற்கு கஜயுத்த மூர்த்தி என்றும் பெயர். [1]
வேறு பெயர்கள்
- கஜயுக்த மூர்த்தி
மேற்கோள்கள்
- http://temple.dinamalar.com/news_detail.php?id=807 கஜயுக்த மூர்த்தி - தினமலர் கோயில்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.