சலந்தராகரர்

சிவ வடிவங்களில் ஒன்றான
சலந்தராகரர்
மூர்த்த வகை:மகேசுவர மூர்த்தம்,
உருவத்திருமேனி
விளக்கம்:காளையை வாகனமாக
கொண்டவர்
இடம்:கைலாயம்
வாகனம்:நந்தி தேவர்

சலந்தராகரர் அல்லது சலந்தரவத மூர்த்தி சிவபெருமான் அரக்கனான சலந்தரனை அழிக்க எடுத்த உருவமாகும். இத்திருவுருவம் 64 சிவத் திருமேனிகளுள் ஒன்றாகக் கருதப்பெறுகிறது.

திருவுருவ கதை

கையிலாயத்தில் சிவதரிசனத்திற்கு சென்ற இந்திரனை, வழியில் இடைமறித்து நின்றார் மாறுஉருவம் கொண்ட சிவபெருமான். அவரை அறியாத இந்திரன் பல கேள்விகள் கேட்டு கோபமடைந்து இறுதியில் வஜ்ஜிராயுதத்தினால் தாக்கினார். வஜ்ஜிராயுதம் அழிந்து போனது. அந்நேரம் சிவபெருமான் கோபம் கொண்டார், இந்திரன் தன் தவறினை உணர்ந்ததமையால் சிவனின் கோபம் தனிந்தது. எனினும் கோபத்தினால் உண்டான வியர்வைத்துளிகள் கடலில் விழுந்தன. அவை ஒன்றினைந்து அரக்கனான சலந்தரன் என்பவர் தோன்றினார்.

சலந்திரன் மிகவும் வலிமைமிக்கவராக இருந்தமையினால் திருமாலிடம் இரண்டாயிரம் ஆண்டுகள் சண்டையிட்டு பாராட்டு பெற்றார். இறுதியில் சிவபெருமான் முதியவர் வேடமிட்டு சலந்திரனை சந்தித்தார். சலந்திரனுடன் பேசி தந்திரமாக புதியதாக உருவாக்கிய சக்கரத்தை அவன் தலையில் வைக்கச் செய்தார். அந்த சக்கரம் சலந்திரனை இரண்டாகப் பிளந்தது. [1]

ஆதாரம்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=1863

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.