சிலிகான் டைசல்பைடு

சிலிக்கான் சல்பைடு (Silicon sulfide)  SiS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும்.   சிலிக்கான் டை ஆக்சைடைப் போல இந்தப் பொருளும் ஒரு பலபடித்தன்மை வாய்ந்ததாகும். ஆனால் இது மற்ற சிலிக்காவின் வடிவங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட 1-பரிமாண வடிவத்தைக் கொண்டுள்ளது.

சிலிகான் டைசல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சிலிக்கான்(IV) சல்பைடு
வேறு பெயர்கள்
சிலிக்கான் டைசல்பைடு
இனங்காட்டிகள்
13759-10-9 N
ChemSpider 75527 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83705
பண்புகள்
SiS2
வாய்ப்பாட்டு எடை 92.218 கி/மோல்
தோற்றம் வெண்மை நிற (மாதிரிகள் சில நேரங்களில் சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்டிருக்கலாம்) ஊசி வடிவம்.
ஈரக்காற்றில் அழுகிய முட்டை நாற்றமுடிடையது
அடர்த்தி 1.853 கி/செமீ3
உருகுநிலை
சிதைவுறுகிறது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oI12
புறவெளித் தொகுதி Ibam, No.72[1]
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி
தீங்குகள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சிலிக்கா
ஏனைய நேர் மின்அயனிகள் கார்பன் டைசல்பைடு
செர்மானியம் டைசல்பைடு
துத்தநாக(IV) சல்பைடு
காரீய(IV) சல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தொகுப்புமுறை, அமைப்பு, மற்றும் பண்புகள்

இச்சேர்மமானது கந்தகத்தையும், சிலிக்கானையும் வெப்பப்படுத்துவதன் மூலமாக அல்லது SiO2 மற்றும் Al2S3 இவற்றுக்கிடையேயான பரிமாற்ற வினையின் மூலமாகவோ தயாரிக்கப்படலாம். இந்தச் சேர்மமானது முனையங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நான்முகி, Si(μ-S)2Si(μS)2 ஆகியவற்றைக் கொண்ட சங்கிலியமைப்பைக் கொண்டுள்ளது.[2]

மற்ற சிலிக்கான் கந்தக சேர்மங்களைப் போல  (உ.ம்., பிஸ்(டிரைமெதில்சிலைல்)சல்பைடு) SiS2 எளிதில் நீராற்பகுக்கப்பட்டு  H2S ஐ வெளியிடுகிறது. திரவ அம்மோனியாவில் இச்சேர்மம் இமைடு Si(NH)2 மற்றும் NH4SH ஐத் தருகிறது.[3] ஆனால், தற்போதைய ஆய்வு முடிவு ஒன்று படிக நான்முகி வடிக தயோசிலிகேட்டு எதிரயனியைக் (SiS3(NH3)) கொண்டுள்ள  (NH4)2[SiS3(NH3)]·2NH3  விளைபொருளாகக் கிடைப்பதாகத் தெரிவிக்கிறது.SiS3(NH3).[4]

எத்தனால் உடனான வினையானது அல்காக்சைடு, டெட்ராஎதில்ஆர்த்தோசிலிகேட்டு மற்றும் ஐதரசன் சல்பைடைத் (H2S) தருகிறது. சோடியம் சல்பைடு, மக்னீசியம் சல்பைடு மற்றும் அலுமினியம் சல்பைடு உடனான வினைகளானவை தயோசிலிகேட்டுகளைத் தருகின்றன.

அண்டத்தில் குறிப்பிட்ட விண்மீன்களுக்கிடையேயுள்ள பொருட்களில் SiS2 காணப்படுவதாக அறியப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Weiss, A.; Weiss, A. (1954). "Über Siliciumchalkogenide. VI. Zur Kenntnis der faserigen Siliciumdioxyd-Modifikation". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 276 (1–2): 95–112. doi:10.1002/zaac.19542760110.
  2. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5.
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 359. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA.
  4. Meier, Martin; Korber, Nikolaus (2009). "The first thiosilicate from solution: synthesis and crystal structure of (NH4)2[SiS3(NH3)]·2NH3". Dalton Transactions (9): 1506. doi:10.1039/b818856d. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226.
  5. Goebel, J. H. (1993). "SiS2 in Circumstellar Shells". Astronomy and Astrophysics 278 (1): 226–230. Bibcode: 1993A&A...278..226G. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?1993A%26A...278..226G&data_type=PDF_HIGH&whole_paper=YES&type=PRINTER&filetype=.pdf.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.