சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம் (Sathyamangalam Wildlife Sanctuary) இந்தியாவில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இடம் மற்றும் புலிகள் காப்பகம் ஆகும்.[1] இது 2008ல் ஆரம்பிக்கப்பட்டு 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பரப்பளவு 1,411.6 km2 (545.0 sq mi) ஆகும். இதுவே தமிழ்நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு உய்வகம் ஆகும். இது 2013ல் தமிழ்நாட்டில் புலிகள்_பாதுகாப்புத்_திட்டத்தின் மூலம் நான்காவதாக ஆரம்பிக்கப்பட்ட புலிகள் காப்பகம் ஆகும். இது வடமேற்கு தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் தாலுகா மற்றும் கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் உள்ளது.

சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம்
வனவிலங்கு உய்வகத்திலுள்ள ஒரு இந்திய யானை
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பகுதிகொங்கு நாடு
மாவட்டம்ஈரோடு
நிறுவப்பட்டதுநவம்பர் 3, 2008
பரப்பளவு
  மொத்தம்1,411.6
ஏற்றம்1,200
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அருகிலுள்ள நகரம்கோபிச்செட்டிபாளையம்
IUCN வகைIV
நிர்வாகக் குழுதமிழ்நாடு வனத்துறை
காலநிலைAm (Köppen)
கோடைக்கால சராசரி வெப்பநிலை34 °C (93 °F)
குளிர்கால சராசரி வெப்பநிலை28 °C (82 °F)

அமைவிடம்

இச்சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இச்சரணாலயத்தைச் சூழ்ந்து கொல்லேகால் வனக்கோட்டம், பிலகிரி ரங்கசாமி கோயில் காட்டுயிர் சரணாலயம், ஈரோடு வனக்கோட்டக் காட்டுயிர் பகுதிகள் உள்ளன.

காட்டுவகைகள்

புதர் காடு, வறண்ட இலையுதிர் காடு, காவிரிக் கரையோர நீர்மத்தி நிறைந்த ஆற்றோரக்காடு போன்ற காட்டுவகைகளைக் கொண்டது.[2]

உயிரினங்கள்

இங்கு நரை அணில், யானை, சிறுத்தை, ஆற்று நீர் நாய், செம்புல்லிப் பூனை, அலுங்கு, கள்ள மான், கடமான், காட்டெருமை, செந்நாய், கரடி உள்ளிட்ட 35 வகை பாலூட்டிகளும், மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.[3] மீன்பிடி கழுகு, மஞ்சள்திருடிக் கழுகு போன்ற 100க்கும் மேற்பட்ட பறவை வகைகளும், மலைப்பாம்பு, முதலை, போன்ற ஊர்வன இனங்களும் இங்கு காணப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு இந்த உய்விடத்தில் வனத்துறையினரால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இங்கு 241 வகைப் பறவைகள் 150 வகை வண்ணத்துப் பூச்சிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.[4]

இவற்றையும் காணவும்

  • பிற தமிழ்நாட்டு புலிகள் காப்பகங்கள்.
  1. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  2. முதுமலை தேசியப் பூங்கா
  3. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா

மேற்கோள்கள்

[5].[6]

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.