குழந்தை இராமர் கோயில்
குழந்தை இராமர் கோயில் (Ram Lalla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி மாநகரத்தில் இராமர் பிறந்த இடத்தில், விஷ்ணுவின் அவதாரமான குழந்தை இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். [1] இக்கோயிலை கிபி எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் பேரரசர் விக்ரமாதித்தியன் நிறுவினார்.[2][3][4] [2][5][3]
குழந்தை இராமர் கோயில் | |
---|---|
வெள்ளை முத்துமாலையுடன் குழந்தை இராமர் சிலை | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம்: | பைசாபாத் |
அமைவு: | அயோத்தி |
ஆள்கூறுகள்: | 26.7956°N 82.1943°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தற்காலிக அமைப்பில் உள்ளது |
வரலாறு | |
அமைத்தவர்: | விக்ரமாதித்தியன் |
பெயர் காரணம்
இராம் லல்லா (Rama lalla) என்பதற்கு குழந்தை இராமர் என்பர். இராம் லல்லா விரஜ்மான் என்பதற்கு குழந்தை இராமரின் விக்கிரகம் எனப்பொருளாகும். ராம ஜென்மபூமியில் உள்ள இக்கோயிலின் மூலவர் குழந்தை இராமர் ஆவார்.[6][7] இக்கோயில் பூசை நடைமுறைகள் தற்போது ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வகிக்கிறது.
வரலாறு
இந்துக்கள் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாக ராம ஜென்மபூமியான அயோத்தியை கருதுகின்றனர். [8]கிபி எட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் பல இந்து மன்னர்கள் இராம ஜென்ம பூமியில் உள்ள இராமர் கோயிலை பலமுறை மறுசீரமைப்பு செய்து கட்டியுள்ளனர்.[9][10][11]
1528-இல் இராம ஜென்மபூமியில் இருந்த கோயிலை பாபரின் படைத்தலைவர் இடித்து, அச்சிதிலங்கள் மீது பாபர் மசூதி கட்டினார். இராம ஜென்மபூமியில் மீண்டும் இராமர் கோயிலைக் கட்ட இந்துக்கள் பலமுறை முயன்றனர். [7]
1992-இல் பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் மீண்டும் ராம ஜென்மபூமியில் தற்காலிகமாக குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபடப்படுகிறது.[3][12]
நீதிமன்றங்களில் குழந்தை இராமர்
இராம ஜென்மபூமியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் குறித்தான வழக்கில், குழந்தை இராமரையும் சட்டப்படி ஒரு தரப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. தற்போது குழந்தை இராமர் கோயிலின் பூசைகளை நடத்தும் ராம ஜென்மபூமி அறக்கட்டளையை, குழந்தை இராமரின் பிரதிநிதியாக வழக்குகளில் வாதாட அலகாபாத் உயர் நீதிமன்றமும், இந்திய உச்ச நீதிமன்றமும் அனுமதித்துள்ளது.[3] இந்திய நீதித்துறை, கோயில் மூலவரை கோயில் வழக்குகளில் சட்டப்படி ஒரு தனிநபராக எடுத்துக்கொள்கிறது. எனவே கோயில் பராமரிக்கும் நிறுவனங்கள், மூலவரின் சார்பாக வழக்குகளில் வாதாட அனுமதி வழங்குகிறது.[3][13] [14]
அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கில் இராம் லல்லாவின் (கடவுள் இராமரின் குழந்தை வடிவம்) பிரதிநிதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கே. பராசரன் மற்றும் சி. எஸ். வைத்தியநாதன் வாதாடினர். [15][16] 9 நவம்பர் 2019 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராம ஜென்மபூமிக்குரியது என்றும், அவ்விடத்தில் குழந்தை இராமர் கோயில் கட்ட, மூன்று மாதங்களில் ஒரு அறக்கட்டளையை நிறுவ இந்திய அரசுக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.[17]
இலக்கியங்களில்
துளசிதாசர் இந்தி மொழியில் எழுதிய இராமாயணத்தில் குழந்தை இராமரின் அழகை கவிநயத்துடன் எடுத்துரைக்கிறார்.[18] [19]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "क्यों मर्यादापुरुषोत्तम है श्रीराम? - why lord shriram called MARYADA PURUSHOTTAM?". religion.bhaskar.com (2010-12-22). பார்த்த நாள் 2012-03-27.
- "Ayodhya dispute: claims and counter-claims - Thaindian News". Thaindian.com. பார்த்த நாள் 2012-03-27.
- ayodhyafiles
- "Valmiki Ramayana". Valmikiramayan.net. பார்த்த நாள் 2012-03-27.
- ayodhyafiles
- http://elegalix.allahabadhighcourt.in/elegalix/ayodhyafiles/hondvsj-gist-vol1.pdf
- "Ayodhya and the Research on the Temple of Lord Rama". Stephen-knapp.com. பார்த்த நாள் 2012-03-27.
- Tomar, Gaurav (2009-08-17). "Suryavanshi: Ayodhya and suryavanshis". Suryavansha.blogspot.com. பார்த்த நாள் 2012-03-27.
- "Narsinghgarh". Narsinghgarhprincelystate.com (1947-08-15). பார்த்த நாள் 2012-03-27.
- "Disputed Ayodhya site to be divided into 3 parts- TIMESNOW.tv - Latest Breaking News, Big News Stories, News Videos". Timesnow.Tv. பார்த்த நாள் 2012-03-27.
- "The Telegraph - Calcutta (Kolkata) | Frontpage | Ram Lalla guardian faces parivar push". Telegraphindia.com (2010-10-02). பார்த்த நாள் 2012-03-27.
- "Front Page : Suits on behalf of deities can't be treated as time-barred". The Hindu (2010-10-03). பார்த்த நாள் 2012-03-27.
- அயோத்தி வழக்கில் ராமருக்காக வாதாடிய 93 வயது தமிழர் கே.பராசரன்
- அயோத்தி வழக்கு: 'முஸ்லிம் தரப்பு வாதம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது' - ராம் லல்லாவின் வழக்கறிஞர்
- அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்
- "Goswami Tulsidas (1532 — 1623)". Hinduism.about.com (2011-03-10). பார்த்த நாள் 2012-03-27.
- Courtney, David. "Biography of Tulsidas". Chandrakantha.com. பார்த்த நாள் 2012-03-27.
மேலும் படிக்க
- Ram Lalla guardian faces parivar push, The Telegraph, 2 October 2010.
- Devotees back in Ram Lalla temple after verdict, SIFY News, 1 October 2010.
- Status quo in Ayodhya to be maintained: Chidambaram, SIFY News, 1 October 2010.
- Ram Lalla, the litigant in the Ayodhya case, Zee News, 1 October 2010.