பாபர் மசூதி


பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது[1]. இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 150,000 இந்துக்களால் டிசம்பர் 6, 1992 இல் இந்திய மேல்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முற்றாக உடைத்து நொறுக்கப்பட்டது.[2][3] [4]

இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் ஓர் அவதாரமாகக் கருதப்பட்டவரும் அயோத்தி மன்னரென இராமாயணம் மற்றும் புராணங்களில் கூறப்படும் குழந்தை ராமனின் கோயில் ஒன்றை பாபர் மன்னனின் தளபதியான மீர் பக்கி என்பவர் உடைத்து அது இருந்த இடத்தில் மசூதியைக் கட்டியதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில் இம்மசூதியும் ராமர் கோயிலும் ஒரே சுவரால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அயோத்தியில் இம்மசூதியே மிகப் பெரியதாகும்[5].

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Sayyid Shahabuddin Abdur Rahman, Babri Masjid, 3rd print, Azamgarh: Darul Musannifin Shibli Academy, 1987, pp. 29-30.
  2. பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்று
  3. பிபிசி செய்தி
  4. பாப்ரி மசூதி இடிப்பு 10 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.