குதிரை மனிதன்

குதிரை மனிதன் அல்லது சென்டார் (ஆங்கிலத்தில் : centaur (/ˈsɛntɔːr/; கிரேக்கம்: Κένταυρος, Kéntauros, லத்தின்: centaurus) என்பது மனிதத் தலையும், கைகளும், குதிரையின் உடலையும் கொண்ட கற்பனை உயிரினம் ஆகும்.[1] இது கிரேக்கத் தொன்மவியல் கதைகளில் வரும் ஒரு மனிதவிலங்கு, காலங்காலமாக ஐரோப்பிய ஓவியங்களில் இது இடம்பெற்று வருகிறது. நவீன கால ஓவியங்களிலும் குதிரை மனிதர்கள் இடம்பிடித்து வருகின்றன. ஹாரிபாட்டரின் மந்திரக் கதைகளிலும், நார்னியாவின் கதைகளிலும் குதிரை மனிதர்கள் இடம்பெறுகிறனர்.

குதிரை மனிதன்
(Kentaur, Κένταυρος, Centaurus)
குழுLegendary creature
உப குழுகலப்பு
ஒத்த உயிரினம்Minotaur, satyr, harpy
தொன்மவியல்கிரேக்கத் தொன்மம்
பிரதேசம்கிரேக்கம்
வாழ்விடம்நிலம்
புரூக்ளின் அருங்காட்சியகத்தில் ஜோன் லா பர்ஜ் வரைந்த குதிரை மனிதனின் ஓவியம்.

மேற்கோள்கள்

  1. "Definition of centaur". Oxford Dictionaries. Oxford University Press. பார்த்த நாள் 19 April 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.