கழுதைப் பால்

கழுதைப் பால் (Donkey milk அல்லது ass milk/jenny milk) என்பது வளர்ப்புக் கழுதை (ஈக்வஸ் அஸினஸ்) கொடுக்கும் பால் ஆகும். இது பழங்காலத்திலிருந்து அழகுக்கான நோக்கங்களுக்காகவும், குழந்தைப் பருவ ஊட்டச்சத்துகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

லாக்டிங் கழுதை [1]
ஈக்வஸ் அஸினஸ்

வரலாறு

எகிப்தில் பழங்காலத்தில் இருந்து உணவு மற்றும் ஒப்பனை நோக்கங்களுக்காக மனிதர்களால் கழுதைப் பால் உபயோகப்படுத்தப்படுகிறது.[2]

விற்பனை

கழுதைப்பால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது, மருத்துவ குணம் நிறைந்தது என்ற நம்பிக்கை தமிழகத்தில் நிலவுகிறது. அதாவது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, காய்ச்சல், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற நோய்கள் கழுதைப் பாலால் குணமாகும் என நம்பப்படுகிறது. இதனால் சிலர் கழுதைப்பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.30 வரை விற்கப்படுகிறது. ஒரு கழுதையிடமிருந்து ஒரு வேளைக்கு 150 மில்லி பால் கறக்க இயலும்.[3]

உற்பத்தி

ஆசினின் இனக் கழுதை பருவகால பாலிஸ்டிரோஸில் ஒன்றாக கருதப்படுகிறது, ஆனால்   அட்சரேகையில் பண்ணை அமைந்தால் அது பெரிதும் இனப்பெருக்கச் சுழற்சியை பாதிக்கும். பெண்கழுதை பொதுவாக 12 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும்.

[4]

கழுதை, குதிரை, மனிதர், பசு ஆகியவற்றின் பாலின் கலவை அளவு (g/100 g)[5]
கலவை கழுதை குதிரை மனிதர் மாடு
பிஎச் 7.0 – 7.2 7.18 7.0 – 7.5 6.6 – 6.8
புரதம் g/100g 1.5 – 1.8 1.5 – 2.8 0.9 – 1.7 3.1 – 3.8
கொழுப்பு g/100g 0.3 – 1.8 0.5 – 2.0 3.5 – 4.0 3.5 – 3.9
லாக்டோசு g/100g 5.8 – 7.4 5.8 – 7.0 6.3 – 7.0 4.4 – 4.9
மொத்த திடப்பொருள்கள் (TS) g/100 g 8.8-11.7 9.3-11.6 11.7-12.9 12.5-13.0
கேசீன் நைட்ரஜன் (CN) g/100 g 0.64-1.03 0.94-1.2 0.32-0.42 2.46-2.80
மோர் புரதம் g/100 g 0.49-0.80 0.74-0.91 0.68-0.83 0.55-0.70
என்பிஎன் g/100 g 0.18-0.41 0.17-0.35 0.26-0.32 0.1-0.19
கேசீன் நைட்ரஜன் (CN) % 47.28 50 26.06 77.23
மோர் புரதம் % 36.96 38.79 53.52 17.54
என்பிஎன் % 15.76 11.21 20.42 5.23

வகைகள்

  • பச்சை கழுதைப் பால் 
  • நீண்ட பதனிடப்பட்ட அல்லது உடனடி பதனிடப்பட்ட கழுதைப் பால்(HTST)

மேற்கோள்கள்

  1. MonrifNet. "Montebaducco, la capitale degli asini. "Ho realizzato il sogno della vita" - il Resto del Carlino - Reggio Emilia". பார்த்த நாள் 2016-03-05.
  2. Uniacke-Lowe, T., 2011.
  3. ஜி. ஞானவேல்முருகன் (2014 மே 4). "திருச்சியில் கழுதைப் பால் வியாபாரம் கனஜோர்: 50 கழுதைகளுடன் தொழுதூர் குழுவினர் முகாம்". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 3 ஆகத்து 2017.
  4. Sewell, Sybil E. "Foaling out the Donkey Jennet," Alberta Donkey and Mule.com.
  5. Guo, H.Y. (April 2007). "Composition, physiochemical properties, nitrogen fraction distribution, and amino acid profile of donkey milk.". Journal of Dairy Science (Journal of Dairy Science) 90 (4): 1635–43. doi:10.3168/jds.2006-600. பப்மெட்:17369203.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.