பால் பண்ணை

பால் பண்ணை (Dairy) என்பது பெரும்பாலும் மாடுகள் அல்லது ஆடுகள், எருமை , செம்மறி ஆடுகள், குதிரைகள் அல்லது ஒட்டகங்கள் போன்ற விலங்குகளில் இருந்து மனித நுகர்வுக்காக பண்ணையில் விலங்கின் பால் அறுவடை செய்ய நிறுவப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும் .இது பொதுவாக பால் அறுவடை தொடர்புடைய ஒரு பல்நோக்கு பண்ணை யாகும். பால் பண்ணை அதற்கு உரிய தனிப் பால் பண்ணையிலோ அல்லது பல்நோக்குப் பால் அறுவடைக்கான பண்ணையிலோ அமைந்திருக்கும்.

ஆத்திரியா, பெரென்கெஞ்சுக் காட்டில் சு ச்ரோக்கன் எனும் இடத்தில் உள்ள மலை மேய்ய்ச்சற் பண்ணை

பால் பண்ணை எனும் சொல் நாடுகளுக்கும் இடையே வேறுபடுகிறது . எடுத்துகாட்டாக, அமெரிக்காவில், முழுப்பால் பண்ணையும் உள்ள வளாகம் பொதுவாக "பால் பண்ணை" என்று அழைக்கப்படுகிறது. பால் மாட்டில் இருந்து பால் அறுவடை செய்யும் கட்டிடம் "பாலகம் " (ஆங்கிலம்:milk parlor) எனப்படுகிறது . பேரளவு பால் பல தொட்டிகளில் பால் தேக்கியுள்ள இடம் "பால் இல்லம்"(Milk House) எனப்படுகிறது. பிறகு பால் வண்டிகளில் பால் கொள்கலத்திலேற்றிப் "பால் நிலையத்துக்குக்" கொண்டுசெல்லப்படுகிறது. பால் நிலையத்தில் இப்பால் வணிகப் பயன்பாட்டுக்கான பாற்பொருட்களாக மாற்றப்படுகிறது.. நியூசிலாந்தில் பால் அறுவடை செய்யும் பண்ணையில் உள்ள இடம் "பாலகம்" எனப்படுகிறது. முன்பு இது பால் கொட்டகை எனவும் வழங்கியது. சிலவேளைகளில் இவை கொட்டகையின் வடிவம் சார்ந்து "விலாவெலும்புக் கொட்டகை" அல்லது குழிப் பாலகம்" எனவும் அழைக்கப்படும். பாலகங்கள் எளிய கொட்டில் அல்லது கொட்டகையில் இருந்து பணிப்பாய்வை எளிமையாக கையாளும் சுழல் கட்டமைப்புகள் வரை மாற்றம் அடைந்துள்ளன. சில விலங்குகளைல் இருந்து மட்டுமே பால் அறுவடை செய்யும் சில நாடுகளில், பண்ணை மோர், வெண்ணெய், இன்தயிர் போன்ற பாற்பொருள் நிலையப் பணிகளையும் உள்ளடக்குவதுண்டு. இவ்வகைக் களப் பாற்பொருளாக்கம் ஐரோப்பாவில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் பால்பண்னை என்பது வெண்னெய், நெய் போன்ற பாற்பொருட்களைச் செய்யும் நிலையத்துக்கும விற்கும் இடத்துக்கும் தேக்கும் இடத்துக்கும் கூட வழங்குகிறது. நியூசிலாந்தில் பால் அங்காடி என்பது பொதுமக்கள் பால்வாங்கும் தெருமனைக் கடைக்கும் பால் பேரங்காடிக்கும் வழங்குகிறதுபணியாளர் ஆகியவற்றுக்கும் வழங்குகிறது. பால் பண்ணை, பால் நிலையம் ஆகியன பால் தொழில். துறையின் உறுப்புகளாகும். பால் தொழில்துறை உணவுத் தொழில்துறையின் ஓர் உறுப்ப்பாகும்.

வரலாறு

பல்லாயிரம் ஆண்டுக்களாக கறவைக்கான விலங்குகள் வீட்டில் பழக்கி வளர்க்கப்பட்டு வருகின்றன. முதலில் அவை வாழ்தகு வேளாண்மையின் உறுதுணைகளாக விளங்கின. அன்றைய நாடோடி வேளாண்மையில் உழவர் தாம் புலம்பெயரும் இடங்களுக்குத் தம் கால்நடைகளையுமோட்டிச் சென்றனர். விலங்குகளைக் காப்பாற்றுதலும் உணவளித்தலும் அந்நாடோடி மேய்ச்சலாளர்களின் இணைவாழ்வுறவாக அமைந்தது.

மிக அண்மிய கடந்த காலத்தில், வேளாண்மையில் ஈடுபாட்ட மக்கள் கறவை விலங்குகளை வீட்டுப் பால்பயனுக்கும் தம் ஊர்ப் பால்நுகர்வுக்கும் வளர்த்தனர். அப்போது இது குடிசைத் தொழிலாக விளங்கியது. இந்த கறவை விலங்குகள் பாலுக்கு மட்டுமன்றி, இளமையில் ஏருழவுக்கும் முதுமையில் இறைச்சிக்கும் பயன்பட்டது. இந்நிலையில் விலங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், பது மாட்டுக்கு ஒருவர் வீதம் பாலை ஒருமணி நேரத்துக்குக்குள் கையாலேயே கறந்தனர். இந்த வேளையைப் பால்காரரோ பால்காரியோ செய்தனர்.

தொழில்புரட்சிக்கும் நகர்மயமாக்கலுக்கும் பிறகு, பால்வழங்கல் வணிகமயமானது. அப்போது பால் பண்ணைத்தொழிலுக்காகவே பல கறவை வளர்ப்பினங்கள் செயற்கைத் தேர்வு வாயிலாக உருவாக்க பட்டன. இவை இழுவை விலங்குகளின் பான்மையில் இருந்து வேறுபட்டன. பல்காரகலாக பலருக்கு வேலை கிடைத்தது. என்றாலும், விரைவில் பால்கறத்தல் எந்திரமயமாக்கப்பட்டது. பால்கறக்கும் எந்திரங்கள் வடிவமைக்கப்பட்டன.

உழவர் கையால் பால்கறத்தல்

வரலாற்றியலாக, பால் கறத்தலும் பாலுணவாக்கமும் பால் பண்ணையில் நெருக்கமான கால, இடவெளியிலேயே அமைந்தன. பால் பண்ணையில் கறவைகள் குறைவாக இருந்தபோது மக்கள் கையால் பாலைக் கறந்தனர். பால்காம்புகளைக் கைவிரலிடையில் பற்றி அடிமடியில் இருந்து காம்பு வரை அழுத்தி இழுத்துப் பல்லைக் கறப்பர். முலைக்காம்பு கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் அமையும். அப்போது அவ்விரல்களை பால்மடியில் இருந்து முலைக்காம்பு வரை அழுத்தியபடி நகர்ந்தவண்ணம் பாலைக் கறப்பர். கையும் விரலும் மடியடி பால்தூம்பை அழுத்துவதால் மூடி விரலின் கீழ்நோக்கிய நகர்வால் தூம்பு வழியாக முன்னேறி முலக்காம்பு வரை வந்து பாலைக் கீழே வைக்கப்பட்டுள்ள வாளியில் அல்லது குவளையில் பீய்ச்சுவர். மடியின் ஒவ்வொரு அரைப்பகுதியிலும் உள்ள பால்தூம்பும் அதன் முழு அளவுக்கு மாறிமாறி கறக்கப்படும்.

மேற்கோள்கள்

    மேலும் படிக்க

    • Jay, J. M. (1992). Modern Food Microbiology; 4th edition. New York: Chapman & Hall. pp. 237–9.
    • Potter, N. N. & J. H. Hotchkiss. (1995). Food Science; 5th Edition. New York: Chapman & Hall. pp. 279–315.
    • Swasigood, H. E. (1985). "Characteristics of Edible Fluids of Animal Origin: Milk." In Food Chemistry; 2nd edition. Revised and Expanded. O. R. Fennema, Ed. New York: Marcel Dekker, Inc. pp. 791–827.
    • David J. Wolfson (1996). "Beyond the law: Agribusiness and the systemic abuse of animals raised for food or food production". Animal Law 2: 123.
    •  Fream, William (1911). "Dairy and Dairy-farming". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. 737–761.
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.