கடற்கரை கைப்பந்தாட்டம்

கடற்கரை கைப்பந்தாட்டம் (Beach volleyball, அல்லது Sand volleyball), என்பது இரண்டு அணிகளுக்கிடையே மணற்தரையில் நடைபெறுகின்ற ஒரு குழு விளையாட்டு ஆகும். பொதுவாகக் கடற்கரைகளில் ஓரணிக்கு இரண்டு விளையாட்டு வீரர்கள் வீதம் இரண்டு அணிகளுக்கிடையே இவ்விளையாட்டு விளையாடப்படும். அளவிடப்பட்ட மணல் அரங்கின் குறுக்கே வலை ஒன்று போடப்பட்டிருக்கும். 1996 ஆம் ஆண்டு முதல் இவ்விளையாட்டு ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்கப்பட்டு விளையாடப்படுகிறது.

கடற்கரை கைப்பந்தாட்டம்
ஆண்களுக்கான கடற்கரை கைப்பந்தாட்டம்.
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்புபன்னாட்டு கைப்பந்தாட்டக் கூட்டமைப்பு (FIVB)
முதலில் விளையாடியதுஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியாவில் 1915 ஆம் ஆண்டு
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்புNo contact
அணி உறுப்பினர்கள்2
இருபாலரும்தனி அல்லது கூட்டு
பகுப்பு/வகைவெளிப்புறம்
கருவிகள்கைப்பந்து
தற்போதைய நிலை
ஒலிம்பிக்1996 முதல்

உள்ளக கைப்பந்தாட்ட விளையாட்டுப் போலவே கைப்பந்தை எதிராளியின் ஆடுகளத்தினுள் விழத்தக்கவாறு வலையின் மேலாக செலுத்த வேண்டும். அது போலவே எதிராளி போடும் பந்து தனது ஆடுகளத்தினுள் விழாதவாறு பாதுகாக்க வேண்டும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, இந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.[1]


மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.