கங்கா உரோவா

கங்கா உரோவா (Hanga Roa) சிலியின் மாநிலங்களில் ஒன்றான ஈஸ்டர் தீவின் முதன்மை நகரமும், துறைமுகமும் தலைநகரமும் ஆகும். இது தீவின் மேற்கு கடலோரத்தில் தென் பகதியில் அமைந்துள்ளது. செயற்பாட்டில் இல்லாத டெரெவாக்கா, உரானோ கவ்வு எரிமலைகளுக்கிடையேயான தாழ்நிலப் பகுதியில் உள்ளது.

கங்கா உரோவா
கங்கா உரோவா துறைமுகம்

ஈஸ்டர் தீவு நிலப்படத்தில் கங்கா உரோவா காட்டப்பட்டுள்ளது; டெரெவாக்கா, உரானோ கவ்வு, மாதாவெரி பன்னாட்டு விமானத்தாவளம், மற்றும் சுற்றுலாத் தலங்களான ஒரோங்கோ, உரானோ இராரக்கு, அஃகு டோங்கரிகி, அனகேனா ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.
நாடு சிலி
மண்டலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Valparaíso
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Isla de Pascua
மாவட்டம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Isla de Pascua
நிறுவப்பட்டது9 செப்டம்பர் 1888
மக்கள்தொகை 3
கங்கா உராவா மரச்சிலைகள் (மோய்)
கங்கா உரோவாவிலுள்ள உரோமை கத்தோலிக்கத் தேவாலயம்

2002ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 3,304 ஆகும்; இது தீவின் மொத்த மக்கள்தொகையில் 87 விழுக்காடு ஆகும். இருபதாம் நூற்றாண்டின் பெரும்பகுதிக்கும் தீவின் இதர பகுதிகள் வில்லியம்சன்-பால்போர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டு உள்ளூர் பழங்குடியினருக்கு விலக்கப்பட்டிருந்தது. 1914இல் கங்கா உரோவாவின் மக்கள்தொகை 250தான். தீவின் பெரும்பகுதியிலும் செம்மறி ஆடுகள் வாழ்ந்திருந்தன.

அவெனிடா அடாமு டெகேனா என்ற முதன்மைச் சாலை நகரின் உயிர்த்துடிப்பாக விளங்குகின்றது. பல உணவகங்களும் தங்குவிடுதிகளும் பலசரக்குக் கடைகளும் மருந்தகங்களும் இச்சாலையில் நிறைந்துள்ளதைக் காணலாம். 1998இல் இந்தச் சாலை உள்நாட்டு பழங்குடி நாயகன் அடாமு டெ கேனா நினைவாகப் பெயரிடப்பட்டது. முன்னதாக இது 1888இல் ஈஸ்டர் தீவை சிலிக்காக கைப்பற்றிய சிலியின் கடற்தளபதி பொலிகார்ப்போ டோரோ பெயரில் இருந்தது.[1] தீவிலுள்ள அருங்காட்சியகமும் கத்தோலிக்கத் தேவாலயமும் நகரின் மையத்தில் உள்ளன. இணையப் பரவலாலும் தொலைத்தொடர்பு சேவைகளாலும் பல இணையசேவை மையங்களும் [தன்னியக்க வங்கி இயந்திரங்களும் (ATM) அண்மைக்காலத்தில் தோன்றியுள்ளன.

இங்குள்ள கங்கா உரோவா விளையாட்டரங்கம் பல விதப் பயன்பாடுகளுக்கானது; ஈஸ்டர் தீவின் காற்பந்து அணியின் தாயக அரங்கமாகவும் உள்ளது.

மேற்சான்றுகள்

  1. Steven R Fischer The island at the end of the world. Reaktion Books 2005 ISBN 1-86189-282-9 page 248
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.