நியூ கலிடோனியா

நியூ கலிடோனியா (New Caledonia, French: Nouvelle-Calédonie)[கு 1] என்பது பிரான்சின் கடல்கடந்த மண்டலமாகும். இம்மண்டலம் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில், ஆத்திரேலியாவின் கிழக்கில் இருந்து 1,210 கிமீ தூரத்திலும், பிரான்சில் இருந்து 20,000 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.[3] மெலனீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் கிராண்ட் டெரே, லோயல்டீ தீவுகள், செசுட்டர்பீல்டு தீவுகள், பெலெப் தீவுக்கூட்டம், மற்றும் பல சிறிய தீவுகளும் உள்ளன.[4] செசுட்டர்பீல்டு தீவுகள் பவளக் கடலில் அமைந்துள்ளது.[5]

நியூ கலிடோனியா
கொடி
குறிக்கோள்: "Terre de parole, terre de partage"[1]
"பேச்சின் நிலம், பங்கீட்டின் நிலம்"
நாட்டுப்பண்: Soyons unis, devenons frères[1]

சின்னம்
Location of நியூ கலிடோனியா
Status Sui generis சிறப்புக் கூட்டமைப்பு
தலைநகரம்நூமியா
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்
  • நெங்கோன்
  • பாய்ச்சி
  • அஜியோ
  • திரேகு
  • சாவகம்
, மேலும் 35 உள்ளூர் மொழிகள்
மக்கள் நியூ கலிடோனியன்
சுயாட்சி  பிரான்சு
அரசாங்கம் சார்பு மண்டலம்
   தலைவர் இம்மானுவேல் மாக்ரோன்
   அரசுத்தலைவர் பிலிப் கெர்மைன்
   உயர் ஆணையர் தியெரி லட்டாஸ்டே
சட்டமன்றம் பிராந்திய காங்கிரசு
உருவாக்கம்
   பிரான்சுடன் இணைப்பு 1853 
   கடல்கடந்த மண்டலம் 1946 
   சிறப்பு கூட்டு 1999 
பரப்பு
   மொத்தம் 18 கிமீ2
. சதுர மைல்
மக்கள் தொகை
   2017 கணக்கெடுப்பு 278,500 (182-வது)
   அடர்த்தி 14.5/km2 (200-வது)
37.6/sq mi
மொ.உ.உ (பெயரளவு) 2011 கணக்கெடுப்பு
   மொத்தம் US$9.89 பில்.[2]
   தலைவிகிதம் US$38,921[2]
நாணயம் CFP franc (XPF)
நேர வலயம் ஒசநே+11
வாகனம் செலுத்தல் வலது
அழைப்புக்குறி +687
இணையக் குறி .nc

நியூ கலிடோனியாவின் நிலப்பரப்பு 18,576 சதுரகிமீ ஆகும். மக்கள்தொகை 268,767 ஆகும் (ஆகத்து 2014 கணக்கெடுப்பு)[6] இவர்களில் நியூகலிடோனியாவின் பழங்குடியினர் கனாக்கு மக்கள் எனப்படுவோர், ஐரோப்பியக் குடியேறிகள், பொலினீசிய மக்கள் (குறிப்பாக வலிசியர்), மற்றும் தென்கிழக்காசியர், சிறிய அளவு வடக்கு ஆப்பிரிக்க வம்சாவழியினரும் அடங்குவர்.. இதன் தலைநகரம் நூமியா ஆகும்.[3]

1986 ஆம் ஆண்டு முதல் குடியேற்றங்களை இல்லாதொழிப்பதற்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் நியுகலிடோனியாவை சுயாட்சியற்ற மண்டலமாகப் பட்டியலிட்டு வருகிறது.[7] 1987 இல் இங்கு மக்கள் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பான்மையான மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர். இரண்டாவது தடவையாக 2018 நவம்பர் 4 இல் இடம்பெற்ற மக்கள் கருத்துக் கணிப்பில்[8][9] 56.9% மக்கள் பிரான்சுடன் இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தனர்.[10]

வரலாறு

நியூகலிடோனியாவில் ஆரம்பகால மனிதக் குடியேற்றங்கள் கிமு 1600 முதல் கிபி 500 (லப்பித்தா காலத்தில்) இடம்பெற்றது.[11] லப்பித்தா மக்கள் பசிபிக் பிராந்தியத்தில் மிகவும் திறமை வாய்ந்த மாலுமிகளாகவும் வேளாண்மையில் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.[12]

இரண்டு கனாக்கு வீரர்கள் ஆண்குறிக் கவசங்களுடனும் ஈட்டிகளுடனும், 1880களில்

பிரித்தானிய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் முதன்முறையாக நியூகலிடோனியாவை 1774 செப்டம்பர் 4 இல் தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது கண்ணுற்றார்.[13] இசுக்காட்லாந்தின் நினைவாக இதற்கு "புதிய கலிடோனியா" என அவர் பெயரிட்டார்.[13] கிராண்ட் டெரே தீவின் மேற்குக் கரையை 1788 இல் கொம்டே டி லப்பேரோசு என்பவர் கண்டுபிடித்தார். லோயால்ட்டி தீவுகளுக்கு வில்லியம் ராவென் என்பவர் 1793-96 இல் பயணம் செய்தார்.[14]

குறிப்புகள்

  1. முன்னர் அதிகாரபூர்வமாக "நியூ கலிடோனியா பிராந்தியமும் சார்புகளும்" (Territory of New Caledonia and Dependencies, French: Territoire de la Nouvelle-Calédonie et dépendances), சுருக்கமாக "நியூ கலிடோனியா பிராந்தியம்", இப்போது அதிகாரபூர்வமான பிரெஞ்சுப் பெயர் Nouvelle-Calédonie (Organic Law of 19 March 1999, article 222 IV – பார்க்க: ).

மேற்கோள்கள்

  1. "La Nouvelle-Calédonie se dote d'un hymne et d'une devise" (in French). Le Monde.fr. 2010-08-18. http://www.lemonde.fr/politique/article/2010/08/18/la-nouvelle-caledonie-se-dote-d-un-hymne-et-d-une-devise_1399996_823448.html. பார்த்த நாள்: 2013-01-30.
  2. "PIB GRANDS AGRÉGATS". ISEE. மூல முகவரியிலிருந்து 7 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-08-01.
  3. "Présentation" (French). மூல முகவரியிலிருந்து 30 October 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-30.
  4. "Présentation – L'Outre-Mer". பார்த்த நாள் 2013-01-30.
  5. David Stanley (1989). South Pacific Handbook. David Stanley. பக். 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-918373-29-8. https://books.google.com/books?id=unz2v_HT5q0C&pg=PA549.
  6. "268 767 habitants en 2014.". ISEE. பார்த்த நாள் 2014-11-16.
  7. Trust and Non-Self-Governing Territories (1945–1999) United Nations
  8. Willsher, Kim (19 March 2018). "New Caledonia sets date for independence referendum".
  9. "Paris meeting to prepare New Caledonia independence vote" (2016-02-02).
  10. Reuters (2018-11-04). "New Caledonia votes 'non' to independence from France" (en).
  11. "Histoire / La Nouvelle-Calédonie" (French) (2012-11-20). மூல முகவரியிலிருந்து 30-10-2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-30.
  12. Leanne Logan; Geert Cole (2001). New Caledonia. Lonely Planet. பக். 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86450-202-2. https://books.google.com/books?id=lly95WF8n-cC&pg=PA13.
  13. "Rapport annuel 2010" (PDF). IEOM Nouvelle-Calédonie. பார்த்த நாள் 2013-01-30.
  14. Quanchi, Max; Robson, John (2005). Historical Dictionary of the Discovery and Exploration of the Pacific Islands. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810865280. https://books.google.com.au/books?id=FUwDzM94jGUC&lpg=RA1-PA15.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.