இம்மானுவேல் மாக்ரோன்

இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன் (Emmanuel Jean-Michel Frédéric Macron, French: [ɛmanɥɛl makʁɔ̃]; பிறப்பு: 21 டிசம்பர் 1977) பிரெஞ்சு அரசியல்வாதியும் மூத்த குடியியல் பணியாளரும் முன்னாள் முதலீட்டு வங்கியாளரும் பிரான்சின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் ஆவார். கொள்கையளவில் இவர் நடுநிலையாளராகவும் தாராளமயக் கொள்கையராகவும் கருதப்படுகிறார்.

இம்மானுவேல் மாக்ரோன்
Emmanuel Macron
பிரான்சின் அரசுத்தலைவர்
தெரிவு
பதவியேற்பு
14 மே 2017
பிரதமர் பெர்னார்ட் காசினோவ்
முன்னவர் பிரான்சுவா ஆலந்து
அந்தோராவின் துணை-இளவரசர்
பதவியேற்பு
14 மே 2017
பிரதமர் அந்தோனி மார்ட்டி
முன்னவர் பிரான்சுவா ஆலந்து
பொருளாதா, தொழிற்துறை, எண்ணிம அமைச்சர்
பதவியில்
26 ஆகத்து 2014  30 ஆகத்து 2016
பிரதமர் மனெவேல் வால்சு
முன்னவர் ஆர்னாடு மொன்டெபூர்க்
பின்வந்தவர் மிக்கேல் சாப்பின்
தனிநபர் தகவல்
பிறப்பு இம்மானுவேல் ழீன்-மிக்கேல் பிரெடெரிக் மாக்ரோன்
21 திசம்பர் 1977 (1977-12-21)
அமீன்சு, பிரான்சு
அரசியல் கட்சி முன்னோக்கி! (2016–இன்று)
பிற அரசியல்
சார்புகள்
சுயேட்சை (2009–2016)
சோசலிசக் கட்சி (2006–2009)
வாழ்க்கை துணைவர்(கள்) பிரிஜிட் துரோணோ (2007–இன்று)
படித்த கல்வி நிறுவனங்கள் பாரிசு மேற்கு பல்கலைக்கழகம்
அரசியல் கல்விக்கான பாரிசுக் கல்விக்கழகம்
கையொப்பம்

வடமேற்கு பிரான்சிலுள்ள அமியின் நகரில் பிறந்த இவர் பாரிசிலுள்ள நான்ட்ரே பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் பட்டம் பெற்றார் பின்பு முதுகலை பட்டத்தை மக்கள் தொடர்பில் அறிவியல் போ என்னும் நிறுவனத்தில் பெற்றார். குடியியல் நிருவாக்கத்தில் 2004இல் பட்டம் பெற்றார். பின்பு இவர் வணிக ஆய்வாளராக வணிக ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார், பின்பு ரோத்சைல்டு வங்கியில் முதலீட்டு வங்கியாளராக பணி புரிந்தார்.

சோசலிசுடு கட்சியின் உறுப்பினராக 2004 முதல் 2009 வரை இருந்தார். 2012இல் பிரான்சுவா ஆலந்து அமைச்சரவையில் துணை பொதுச்செயலாளராக இருந்தார், பின்பு 2014இல் இரண்டாம் வால் அமைச்சரவையில் தொழில், வணிக, மின்னிமம் விவகாரம் போன்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தார், அப்போது வணிகத்து ஏதுவாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 2016 ஆகத்து அன்று 2017இல் அதிபர் தேர்தலில் போட்டியிட வசதியாக அமைச்சரவையில் இருந்து விலகினார். நவம்பர் 2016 இல் அதிபர் பதவிக்கு நடுநிலையாளராக போட்டியிடப்போவதாக அறிவித்தார். நடுநிலையாளர் என்ற அரசியல் இயக்கத்தை ஏப்ரல் 2016 அன்று தோற்றுவித்தார்.[1]

மேற்கோள்கள்

  1. "France's Macron joins presidential race to 'unblock France'". BBC. 16 November 2016. http://www.bbc.com/news/world-europe-37994372. பார்த்த நாள்: 26 April 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.