கனகசபாபதி சிறீபவன்

கனகசபாபதி சிறீபவன் (Kanagasabapathy J. Sripavan, பிறப்பு: 29 பெப்ரவரி 1952) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நீதிபதியும் ஆவார். இவர் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாகப் பதவியில் இருந்தவர்.[1][2] இவர் உச்ச நீதிமன்ற துணைநீதிபதியாகவும், பிரதி சட்டமா அதிபராகவும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராகவும்,[3] பதில் பிரதம நீதியரசராகவும்[4] பணியாற்றியிருந்தார்.[5][6]

நீதியரசர்
கனகசபாபதி சிறீபவன்
Kanagasabapathy Sripavan
இலங்கையின் 44வது தலைமை நீதிபதி
பதவியில்
30 சனவரி 2015  28 பெப்ரவரி 2017
நியமித்தவர் மைத்திரிபால சிறிசேன
முன்னவர் சிராணி பண்டாரநாயக்கா
பின்வந்தவர் பிரியசாத் டெப்
மீயுயர் நீதிமன்ற துணைநீதியரசர்
பதவியில்
27 மார்ச் 2008  30 சனவரி 2015
முன்னவர் நிகால் ஜயசிங்க
தனிநபர் தகவல்
பிறப்பு 29 பெப்ரவரி 1952 (1952-02-29)
படித்த கல்வி நிறுவனங்கள் இலங்கை சட்டக் கல்லூரி
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர்
இனம் இலங்கைத் தமிழர்

ஆரம்ப வாழ்க்கை

நடராஜா கனகசபாபதி என்பவரின் மகனான சிறீபவன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1962 முதல் 1972 வரை கல்வி பயின்றார்.[7] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் 1974 ஆம் ஆண்டில் இணைந்து 1976 ஆம் ஆண்டில் வழக்கறிஞராக வெளியேறினார்.[7] 1977 முதல் 1978 வரை வழக்கறிஞராகப் பணியாற்றிய சிறீபவன்,[7] 1978 இல் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியில் சேர்ந்தார்.[7]

1996 பெப்ரவரி 22 இல் பிரதி சட்டமாதிபராக நியமிக்கப்பட்டார்.[7] 1992 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்துறை சட்ட டிப்புளோமா பட்டமும், 1994 ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7]

2002 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.[7] 2007 ஆம் ஆண்டில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8] 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நியமனம் பெற்றார்.[9][10]

தலைமை நீதிபதி

2013 சனவரியில் தலைமை நீதிபதி சிராணி பண்டாரநாயக்கா சர்ச்சைக்குரிய முறையில் இலங்கை நாடாளுமன்றத்தினால் குற்றப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு,[11] அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.[12][13] அவருக்குப் பதிலாக சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[14][15] 2015 அரசுத்தலைவர் தேர்தலில் ராசபக்ச தோவியடைந்து மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார். சிராணி பண்டாரநாயக்கா சட்ட விதிகளுக்கு அமைய பதவியில் இருந்து அகற்றப்படவில்லை எனவும், அது சட்டத்துக்கு முரணானது என்றும் கூறி அவரது பதவியை 2015 சனவரி 28 அன்று மீள்வித்தார்.[16][17][18] பண்டாரநாயக்கா பதவியில் அமர்ந்து அடுத்த நாள் சனவரி 29 அன்று தனது பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றார்.[19][20][21] இதனை அடுத்து சிறீபவன் இலங்கையின் 44வது தலைமை நீதிபதியாக 2015 சனவரி 30 அன்று மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார்.[22][23][24]

மேற்கோள்கள்

  1. Bastians, Dharisha (31 சனவரி 2015). "Sripavan takes office". Daily FT. http://www.ft.lk/2015/01/31/sripavan-takes-office/.
  2. "Sri Lanka Appoints Minority Tamil as Top Judge". என்டிடிவி. ஏஎஃப்பி. 30 சனவரி 2015. http://www.ndtv.com/world-news/sri-lanka-appoints-minority-tamil-as-top-judge-735892.
  3. "Welcome to Supreme Court Sri Lanka". இலங்கை மீயுயர் நீதிமன்றம்.
  4. "Justice K. Sri Pavan took oaths as Acting C J.". பார்த்த நாள் 16 நவம்பர் 2013.
  5. "Senior Judge of the Supreme Court K. Sri Pavan is sworn-in as the Chief Justice before President". இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 30 சனவரி 2015. http://www.slbc.lk/index.php/component/content/article/1-latest-news/23511-senior-judge-of-the-supreme-court-k-sri-pavan-is-sworn-in-as-the-chief-justice-before-president-.html.
  6. "Justice K. Sripavan today took oaths as the 44th Chief Justice of Sri Lanka". ஏசியன் டிரிபியூன். 30 January 2015. http://www.asiantribune.com/node/86319.
  7. Maniccavasagar, Chelvatamby (16 மார்ச் 2005). "Justice Sripavan to be felicitated". டெய்லிநியூசு. http://www.dailynews.lk/2005/03/16/fea09.htm.
  8. Malalasekera, Sarath (23 மார்ச் 2007). "No Court can function without industrious Bar - Justice Salaam". டெய்லிநியூஸ். http://www.dailynews.lk/2007/03/23/news30.asp.
  9. Malalasekera, Sarath (13 மே 2008). "Bench, Bar welcome new Supreme Court Judge Justice K. Sripavan". டெய்லிநியூஸ். http://www.dailynews.lk/2008/05/13/news25.asp.
  10. Samarasinghe, Sonali (23 மார்ச் 2008). "President caught in a judicial bind". த சண்டே லீடர். http://www.thesundayleader.lk/archive/20080323/issues.htm.
  11. "Sri Lanka Chief Justice Shirani Bandaranayake is impeached". பிபிசி. 11 சனவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-20982990.
  12. "CJ receives order of removal". டெய்லிமிரர். 13 சனவரி 2013. http://www.dailymirror.lk/top-story/24956-cj-receives-order-of-removal.html.
  13. "President removes CJ". தெ நேசன். 13 சனவரி 2013. http://www.nation.lk/edition/breaking-news/item/14645-president-removes-cj.html.
  14. "New Sri Lanka chief justice Mohan Peiris sworn in amid opposition". பிபிசி. 15 சனவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21022854.
  15. Bulathsinghala, Frances (16 சனவரி 2013). "New CJ of Sri Lanka sworn in". டோன். http://dawn.com/2013/01/16/new-cj-of-sri-lanka-sworn-in/.
  16. March, Stephanie (29 சனவரி 2015). "Sri Lanka reinstates impeached chief justice Shirani Bandaranayake". ஏபிசி. http://www.abc.net.au/news/2015-01-29/sri-lanka-reinstates-impeached-chief-justice/6054176.
  17. "Sri Lanka's new president reverses 'revenge politics' of Rajapaksa regime". தி கார்டியன். அசோசியேட்டட் பிரெசு. 29 சனவரி 2015. http://www.theguardian.com/world/2015/jan/29/sri-lankas-new-president-reverses-revenge-politics-of-rajapaksa-regime.
  18. "Sri Lanka reinstates impeached chief justice". மெயில் ஒன்லைன். ஏஎஃப்பி. 28 சனவரி 2015. http://www.dailymail.co.uk/wires/afp/article-2929526/Sri-Lanka-reinstates-impeached-chief-justice.html.
  19. Balachandran, P. K. (28 சனவரி 2015). "Sirisena Sacks Chief Justice Peiris and Reinstates Bandaranayake". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Sirisena-Sacks-Chief-Justice-Peiris-and-Reinstates-Bandaranayake/2015/01/28/article2641056.ece.
  20. "Shirani retires; Sripavan to be appointed CJ today". தி ஐலண்டு. 30 சனவரி 2015. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=118588.
  21. "Sri Lanka reinstates Chief Justice Shirani Bandaranayake". பிபிசி. 28 சனவரி 2015. http://www.bbc.co.uk/news/world-asia-31021540.
  22. "Tamil Sripavan appointed Sri Lanka's top judge". பிபிசி. 30 சனவரி 2015. http://www.bbc.co.uk/news/world-asia-31068699.
  23. "Sripavan sworn in as CJ". டெய்லி மிரர். 30 சனவரி 2015. http://www.dailymirror.lk/62585/sripavan-sworn-in-as-cj.
  24. "ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்கியது செல்லுபடியற்றது". தினகரன். 31 சனவரி 2015. http://www.thinakaran.lk/2015/01/31/?fn=n1501311.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.