இலங்கை சட்டக் கல்லூரி

இலங்கை சட்டக் கல்லூரி (Sri Lanka Law College) 1874 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டக் கல்வித் தேவைப்பாடுகளுக்காக இலங்கை சட்டத்தரணி மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்லூரி கொழும்பில் அல்ஸ்டோர்ப் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இலங்கை சட்டக் கல்லூரி

நிறுவல்:1874
வகை:பொது
முதல்வர்:டபிள்யூ. டி. றொட்ரிகோ
அமைவிடம்:கொழும்பு, இலங்கை
இணையத்தளம்:

சட்டக் கல்வி

சட்டத்தரணிகள் சங்கத்தின் அங்கத்துவத்துனைப் பெறுவதற்கு சட்டக்கல்லூரியினால் நடத்தப்படும் பரீட்சையில் சட்டமாணவர்கள் தேர்ச்சியடைய வேண்டும்.

இங்கு படித்து புகழ் பெற்றவர்கள்

  1. ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா - இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி.
  2. மஹிந்த ராஜபக்ச - இலங்கையின் தற்போதய நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியும் முன்னாள் பிரதமருமாவர்.
  3. காமினி திசாநாயக்கா - முன்னாள் அமைச்சரவை அமைச்சர்.
  4. எம். எச். எம். அஷ்ரப் - முன்னாள் துறைமுக அபிவிருத்தி அமைச்சர்.
  5. நீதியரசர் பரிந்த ரன்சிங்க - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.
  6. நீதியரசர் கிறிஸ்தோபர் வீரமந்திரி
  7. நீதியரசர் சரத் என். சில்வா - இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர்.

பங்காளர் பல்கலைக்கழகங்கள்

# வேல்ஸ் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.