த சண்டே லீடர்

த சண்டே லீடர் (The Sunday Leader) என்பது இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து ஞாயிறு தோறும் வெளிவரும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆகும். இப்பத்திரிகை தனியாரினால் வெளியிடப்படுகிறது. புதன்கிழமைகளில் வெளிவரும் மோர்னிங் லீடர், மற்றும் சிங்களப் பத்திரிகையான "இருதின' என்பன இதன் சகோதரப் பத்திரிகைகளாகும். செய்திகளை விவரமாகவும், வெளிப்படையாகும் தெரிவிக்கும் பத்திரிகை என இவை கருதப்படுவதால், இலங்கை அரசின் பலத்த தணிக்கைக்குள்ளாக்கப்பட்டுள்ளன[1]. இப்பத்திரிகையில் கோத்தபாய ராஜபக்ச தொடர்பான செய்திகள் எவையும் வெளியிடக்கூடாதென நீதிமன்ற ஆணை மூலம் தடை செய்யப்பட்டுள்ளது.

சண்டே லீடர்
The Sunday Leader
வகைவாரப் பத்திரிகை
உரிமையாளர்(கள்)லீடர் பப்ளிகேசன்சு தனியார் நிறுவனம்
நிறுவியது1994
மொழிஆங்கிலம்
தலைமையகம்இல. 24 கட்டுக்குருந்துவத்தை வீதி, இரத்மலானை, இலங்கை
இணையத்தளம்thesundayleader.lk

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இனந்தெரியாதோரினால் ஜனவரி 8, 2009 இல் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக இவருக்கு கொலை அச்சுறுத்தல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தார்[2].

நவம்பர் 21, 2008 இல் முகமூடி அணிந்த நபர்கள் சண்டே லீடர் பத்திரிகாலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்த அச்சியந்திரங்களைத் தீக்கிரையாக்கி, வெளியீட்டுக்கு தயாராக இருந்த பத்திரிகைகளையும் எரித்து விட்டுச் சென்றனர். முன்னர் 2005ஆம் ஆண்டிலும் இப்பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.