இலங்கையின் சட்டமா அதிபர்

இலங்கையின் சட்டமா அதிபர் (Attorney General of Sri Lanka) என்பவர் இலங்கை அரசின் தலைமை சட்ட ஆலோசகரும், இலங்கை மீயுயர் நீதிமன்றத்தில் இலங்கை அரசின் முதன்மை வழக்கறிஞரும் ஆவார். இவரே சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைவர்ம் ஆவார். இப்பதவிக்குத் தகுந்தவரை ஆளும் கட்சியே நியமனம் செய்கிறது. இலங்கையின் தற்போதைய சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ ஆவார். இலங்கையின் அரசுத்தலைவருக்கு சட்டமா அதிபருக்கு ஆணைகள் வழங்க எந்த அதிகாரமும் இல்லை.

This article is part of a series on the
politics and government of
இலங்கை

சட்டமா அதிபருக்கு செயலாட்சி அதிகாரம் எதுவும் இல்லை. இவ்வதிகாரம் நீதி அமைச்சருக்கே உள்ளது. சட்டமா அதிபருக்குத் துணை புரிய அரசுத் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) மற்றும் கூடுதல் தலைமை வழக்குரைஞர் (Additional Solicitor Generals) பலர் உள்ளனர்.

சட்டமா அதிபர்களின் பட்டியல்

# சட்டமா அதிபர் பதவியில் பதவியில் இருந்து விலகல்
1பிரான்சிஸ் பிளெமிங்கு18841892
2சார்ல்சு சாமுவேல் கிரெனியர்18921892
3சார்ல்சு பீட்டர் லாயார்ட்18921902
4ஆல்பிரட் ஜோர்ஜ் லாசெலசு19021911
5அண்டன் பேட்ரம்19111918
6என்றி கோலன்19181925
7லான்சிலட் என்றி எல்பின்ஸ்டன்19251929
8எட்வர்ட் சென். ஜோன் ஜாக்சன்19291936
9ஜோன் வில்லியம் ரொனால்ட் இலங்கக்கூன்19361942
10மனிக்கு வதுமேஸ்திரி எண்ட்ரிக் டி சில்வா19421946
11செ. நாகலிங்கம்19461947
12எட்வர்ட் பெர்சிவல் ரோஸ்19471951
13ஏமா என்றி பஸ்நாயக்க19511956
14எட்வர்ட் பிரெட்ட்ரிக் நொயல் கிராட்டியன்19561957
15டக்லசு சென். கிளைவ் பட் ஜான்சி19571966
16அப்துல் கபூர் முகமது அமீர்19661972
17விக்டர் தென்னக்கூன்19721975
18சிவா பசுபதி19751988
19பண்டிகோரலலகே சுனில் சந்திரா டி சில்வா19881992
20திலக் ஜானக மாரப்பன19921995
21சிப்லி அசீஸ்19951996
22சரத் என். சில்வா19961999
23கே. சி. கமலசபேசன்19992007
24சி. ஆர். டி. சில்வா20072008
25மொகான் பீரிஸ்20082011
26சாந்தி ஈவா வனசுந்தர20112012
27பாலித பெர்னாண்டோ2012

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.