உப்பாறு

உப்பாறு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்ட தமிழக கேரள எல்லைப்பகுதியான மதுக்கரை, ஓழலபதி, கும்மிட்டிபதி போன்ற பாகுதிகளிள் கிழக்கு நோக்கி பாயும் வெள்ளம்,கும்மிட்டிபதிஓடை, ஈச்சனாரி,மலூமிச்சம்பட்டி, ஒத்தகால்மண்டபம், கிணத்துக்கடவு பகுதி மழைநீர் அனைத்தும் தேகானி, காரச்சேரி, பனப்பட்டி, வடசித்தூர் பகுதிகளிள் ஒன்றிணைந்து அப்பநாய்கன்பாளையம் வடவள்ளி,பூரண்டாம்பாளையம் வழியோடி,அரசூர் பகுதியில் பரம்பிக்குளம் ஆழியார் பாசனகால்வாய் உபரிநீர் சேர்ந்து கொசவன்பாளையம் ஆமந்தகடவு, பெரியபட்டி, பூளவாடி உட்பட பல்வேறு கிராமங்கள் வழியாக தாராபுரம் உப்பாறு அணையில் சேரும்.

உப்பாறு அணையானது பனமரத்துப்பாளையம் கிராமம், கெத்தல்ரேவ் பகுதியில், 1,100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் 500 கிலோ முதல் 800 கிலோ வரை தினமும் மீன் பிடிக்கப்படுகிறது.

உப்பாறு அணை

தாராபுரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் - கெத்தல்ரேவ் - பனமரத்துப்பாளையம் கிராமத்தில் உள்ளதுதான் உப்பாறு அணை. முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் உப்பாற்றின் குறுக்கே 1100 ஏக்கரில்,இந்த அணை கட்டப்பட்டது. 1965 -ல் தொடங்கி 1968 -ல் கட்டி முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 30 அடி. நீளம் 2,300 மீ . நீர்பிடிப்பு பகுதி 350 ச.மைல்கல் ஆகும். அணையின் மூலம் நேரடியாக 6100 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இரண்டு கால்வாய்கள் உண்டு.

இந்த அணை நிறைந்து வெளியேறும் நீர் - அமராவதி ஆற்றுடன் இணைந்து, காவரி ஆற்றுடன் வங்கக்கடலில் கலக்கும். P.A.P பாசன திட்டத்தில் முதலில் போடப்பட்ட திட்டத்தின்படி அரசூர் பகுதியில் முடிவடைந்து உப்பாற்றில்ஓடி இந்த அணையில் சேர்வதாக இருந்தது பின்திட்டம் நீட்டிக்கப்பட்டதால் P.A.P கால்வாய் பொங்கலூர் வரை நீட்டிக்கப்பட்டது மேலும் இந்த பாசனப்பகுதிகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பயன்பட்டில் உள்ளது. எனவே உப்பாறு அணைக்கு வரும் உபரி நீர் நின்று போனது.

தற்பொழுது மழைநீர் மட்டுமே நம்பி உள்ளது. ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் அணையின் நீர்வரத்து பெறும்

இன்னும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் இந்த அணையில் விளையும் மீன் தனி சுவை கொண்டது. அணையில் நீர் இருந்தால் தினமும் 500 கி.மீன் பிடிக்கப்படும்.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.