உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளரும் ஆவர்.[1] இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[2]

உதயநிதி ஸ்டாலின்
60ஆம் தென் இந்திய பிலிம்பேர் விருதுகள் 2013இல் உதயநிதி ஸ்டாலின்
பிறப்புஉதயநிதி ஸ்டாலின்
நவம்பர் 27, 1977 (1977-11-27)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், வழங்குநர், அரசியல்வாதி திமுக இளைஞர் அணி செயலாளர்.
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
கிருத்திகா உதயநிதி
பிள்ளைகள்இன்பநிதி, தன்மய
வலைத்தளம்
www.redgiantmovies.com

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.[3] இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.[4]

விசய், திரிசா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.[5] உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

அரசியல் பிரவேசம்

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுடாலின், மார்ச்சு மாதம் 2018 இல்

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; இசுடாலின் மகனாக, அவரின் அரசியல்வாரிசாக அரசியலுக்கு வரவில்லை. தொண்டர்களோடு தொண்டர்களாகவே இருக்க விரும்புகிறேன்; எந்த ஒரு கட்சி பதவியும் தேவையில்லை. பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. திமுக வின் கடைக்கோடி தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.[6]2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழக சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு ஆண்டாக முழு நேர அரசியலில் ஈடுபட்டார். 04.07.2019 அன்று திமுக இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார். இந்தச் செய்தி இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்ட உதயநிதி இசுடாலினுக்கு அதிகாரபூர்வமாக 04.07.2019 அன்று காலை 11:00 மணி்க்கு மேல் தெரிவிக்கப்பட்டது.[7]முதலில் பதவிவேண்டாம் என மறுத்த உதயநிதி இசுடாலின், தொண்டர்களின் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

திரைத் துறை வரலாறு

நடிகராக

ஆண்டுதலைப்புகதைமாந்தர்இயக்குநர்குறிப்புகள்
2009ஆதவன்பணியாள் உதவியாளர்கே. எசு. இரவிக்குமார்சிறப்புத் தோற்றம்[8]
2012ஒரு கல் ஒரு கண்ணாடிசரவணன்எம். இராசேசுமுதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்[9]
2014இது கதிர்வேலன் காதல்கதிர்வேல்எஸ். ஆர். பிரபாகரன்
2015நண்பேன்டாசத்யாஜகதீஷ்
2016கெத்துசேதுதிருக்குமரன்
2016மனிதன்சக்திவேல்அகமது
2017சரவணன் இருக்க பயமேன்சரவணன்எழில்
2017பொதுவாக எம்மனசு தங்கம்கணேஷ்தளபதி பிரபு
2017இப்படை வெல்லும்மது சூதனன்கவுரவ் நாராயணன்
2018நிமிர்செல்வம்பிரியதர்சன்

தயாரிப்பாளராக

ஆண்டுதலைப்புநடிகர்கள்இயக்குநர்
2008குருவிவிசய், திரிசாதரணி
2009ஆதவன்சூர்யா, நயன்தாராகே. எசு. இரவிக்குமார்
2010மன்மதன் அம்புகமல் ஆசன், திரிசா, மாதவன்கே. எசு. இரவிக்குமார்
2011ஏழாம் அறிவுசூர்யா, சுருதி ஆசன்ஏ. ஆர். முருகதாசு
2012ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி இசுட்டாலின், அன்சிக்கா மோட்வானி, சந்தானம்எம். இராசேசு
2012நீர் பறவைகள்விட்டுணு விசால், பிந்து மாதவிசீனு இராமசாமி

வழங்குநராக

ஆண்டுதலைப்புநடிகர்கள்இயக்குநர்
2010விண்ணைத்தாண்டி வருவாயாசிலம்பரசன், திரிசாகௌதம் மேனன்
2010மதராசபட்டினம்ஆர்யா, ஏமி சாக்சன், நாசர்ஏ. எல். விசய்
2010பாஸ் என்கிற பாஸ்கரன்ஆர்யா, நயன்தாராஎம். இராசேசு
2010மைனாவிதார்த்து, அமலா பால்பிரபு சாலமன்
2011கோசீவா, கார்த்திக்கா நாயர், அச்மல் அமீர்கே. வி. ஆனந்து

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.