உ. ஸ்ரீநிவாஸ்

யு. ஸ்ரீநிவாஸ்
2009இல் ஒரு நிகழ்ச்சியின் போது
பின்னணித் தகவல்கள்
பிறப்புபெப்ரவரி 28, 1969(1969-02-28)
பிறப்பிடம்பலகோல் , மேற்கு கோதாவரி மாவட்டம் , ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு19 செப்டம்பர் 2014(2014-09-19) (அகவை 45)
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசைக் கலைஞர்
இணையதளம்Official website

உப்பலப்பு ஸ்ரீநிவாஸ் (Uppalapu Shrinivas, பிப்ரவரி 28, 1969 - செப்டம்பர் 19, 2014)[1] தென் இந்தியாவைச் சேர்ந்த மேண்டலின் இசைக் கலைஞர் ஆவார். இவரது இசையின் மூலாதாரம் கருநாடக இசை ஆகும். இவர் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் (ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக்) இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். சத்திய சாயி பாபாவின் பக்தரான இவர் அவரது முன்னிலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[2]

வாழ்க்கை

இவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தவர். தனது ஆறாவது வயதில் தந்தை சத்தியநாராயணாவின் மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கியதைக் கண்டு இவரது தந்தை இவருக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ சுப்பாராஜூ இவருக்கும் பயிற்சியளித்தார். இவரது சகோதரரான உப்பலப்பு ராஜேஸ் இவரைப்போலவே மாண்டலின் இசைக்கலைஞர் ஆவார்.

மறைவு

உடல்நலக் குறைவு காரணமாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தியதி சென்னையில் காலமானார்[3].

பெற்ற விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.