மாண்டலின்
மாண்டலின் (mandolin, இத்தாலியம்: mandolino) ஓர் இத்தாலி நாட்டு மீட்டுகின்ற நரம்பிசைக் கருவியாகும். இதில் பொதுவாக நான்கு இரட்டித்த நரம்புத் தொகுதிகள் இருக்கும். ஒவ்வொரு நரம்புத் தொகுதியில் உள்ள இரண்டு நரம்புகளும் ஒன்றாக மீட்டப்படும். நரம்புத்தொகுதிகள் அடுத்தடுத்த சுவரத்தானங்களுக்கு சுருதி கூட்டப்பட்டு மீட்டுக் கட்டையால் மீட்டப்படும்[1][2]. இது மாண்டோர் இசைக்கருவியிலிருந்து வந்ததாகும்.

![]() அமெரிக்க A-பாணி மாண்டலின், F-துளைகளுடன் அமெரிக்க A-பாணி மாண்டலின், F-துளைகளுடன் | |
நரம்பு | |
---|---|
வகைப்பாடு | நரம்பிசைக் கருவி மீட்டு நரம்பிசைக் கருவி |
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை | 321.321-6 (மீட்டுக் கட்டையுடன் கூடிய நரம்பும் துளையும் கொண்ட கருவி) |
கண்டுபிடிப்பு | மாண்டலினோவிலிருந்து 18வது நூற்றாண்டின் மத்தியில் |
வரிசை | |
(14 சுவரத்தானங்களுக்கு சுருதிகூட்டிய வழமையான மாண்டலின்)
| |
தொடர்புள்ள கருவிகள் | |
|
இந்தியாவில் கருநாடக இசைக் கருவியாக அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மின்னியல் மாண்டலினை உ. ஸ்ரீநிவாஸ் இந்திய இசை மரபுக்கேற்ப மாற்றியமைத்து பரவலாக்கி உள்ளார். இவரது இசை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேற்கத்திய இசையுடன் கருநாடக இசையைக் கலந்து கலவை இசையிலும் புகழ்பெற்றுள்ளார்.
மாண்டலின் இசை திரைப்படங்களில் 1940களிலிருந்தே ராஜ் கபூர் தயாரித்த பர்சாத் போன்றத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே (1995) திரைப்படத்தில் பல இடங்களில் மாண்டலின் வாசிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபி பண்பாட்டில் பரவலான நடன இசை பங்கராவிலும் மாண்டலின் பயன்படுத்தப்படுகிறது.
மேற்சான்றுகள்
- "Musical Instruments, A Comprehensive Dictionary," by Sibyl Marcuse (Corrected Edition 1975)
- "The New Grove Dictionary of Music and Musicians, Second Edition," edited by Stanley Sadie and others (2001)
வெளி இணைப்புகள்
- Accademia Mandolinistica Pugliese (Puglia-Italy)
- Mandolin திறந்த ஆவணத் திட்டத்தில்
- The Mandolin, The Serenade of Italy, podcast and slideshow
- The Mandolin Tools, Freeware Windows application with chords and scales
- Mandolin Cafe, a popular and eclectic website focusing on mandolin culture and community
- theMandolinTuner, a mandolin site focusing on mandolin tuning, chords and tabs
- List of mandolin method books from 1629 to present
- List of composers for the mandolin with more than 1900 names. Includes mandolin solos, ensembles, concertos, chamber music, and bluegrass. Japanese website, but needed parts are in English
- Works for orchestras that contain small parts for mandolin. Japanese website, but needed parts are in English.