ஈக்காட்டுத்தாங்கல்

ஈக்காடுத்தாங்கல் (Ekkaduthangal) சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒன்றாகும். கிண்டி தொழிற்பேட்டையை ஒட்டி புதிய பொருளியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பல வணிக வளாகங்களை உள்ளடக்கி எழுந்த புதிய நகர்ப்பகுதியாகும். இப்பகுதி கணினிசார் எண்ம இயந்திரங்களின் தொழிற்பேட்டை என செல்லமாக வழங்கப்படுகிறது. எஸ்.ஏ.ஜே சிஎன்சி மேசினிங் சென்டர், ஹாரிசன்சு ஆட்டோமேசன் அண்ட் மோல்ட்சு நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒலிம்பியா டெக் பார்க் என்ற பல்மாடி வளாகம் மென்பொருள் நிறுவனங்கள் பலவற்றினைக் கொண்டுள்ளது. ஜெயா தொலைக்காட்சியின் படப்பிடிப்புத் தளம் இங்குள்ளது. ஈக்காடுத்தாங்கல் சென்னை மெட்ரோ ரயில் நிலையம் 29 ஜூன் 2015 அன்று செயல்படத் தொடங்கியது [1].


பெயர்க் காரணம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஈக்காட்டுத்தாங்கல் விளங்குகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இப்பகுதி உள்ளது.

தொல்காப்பியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ஊரும் பெயரும் உடைத் தொழிற் கருவியும் யாருஞ் சார்த்தி அவைஅவை பெறுமே’ (மரபியல் 75)

இதன் பொருள், 'ஊர், பெயர், தொழிற் கருவி ஆகியவை அவரவருக்கு ஏற்ப அனைவருக்கும் உரிமையுடையவையே' என்பதாகும். மனிதன் ஆரம்ப காலங்களில் மரங்களைத் தங்கும் இடங்களுக்குப் பெயர் வைத்து அழைக்கத் தொடங்கினர். பாலைவனங்களில் இருக்கக்கூடிய ஈச்சம் மரங்கள் அபூர்வமாகத் தமிழகத்திலும் அதிகமாகக் காணப்பட்டு உள்ளன. தங்கல் என்ற குறில், நெடில் தாங்கலாக மாறி பல இடங்களில் வந்து உள்ளது. ஈச்சம் மரங்கள் அடர்ந்த பகுதிகளில் வாழ்ந்த மனிதன் தான் வாழ்கின்ற இடத்திற்கு ஈச்சந்தங்கல் என்ற பெயரிட்டு ஈச்சந்தங்கல் காலப்போக்கில் ஈக்காட்டுத்தாங்கலாக மாறி உள்ளது.

குறிப்புகள்

மேற்கோள்கள்



This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.