அரியமங்கை

அரியமங்கை ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:அரியமங்கை ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஹரிமுக்தீஸ்வரர்
தாயார்:ஞானாம்பிகை

தல வரலாறு

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் இரண்டாவது தலம் அரியமங்கை ஆகும். இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை ரயில் நிலையத்திற்குத் தென்மேற்கில் 1 கிமீ தொலைவில் உள்ளது. போக்குவரத்து வசதி கிடையாது. இத்தலத்திற்குத் திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானப் பல்லக்கு முதல் நாள் பிற்பகல் வந்து சேரும். இவ்வூருக்குப் பல்லக்கு இல்லாததால், கும்பத்தில் ஆவாஹனம் செய்த அரியமங்கை நாதர் முதல் தலத்து இறைவனை எதிர்கொண்டு அழைத்துச் செல்வார். [1]

இறைவன், இறைவி

இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஹரிமுக்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஞானாம்பிகைஃ

கல்வெட்டு

சக்கராப்பள்ளி சோழர் கல்வெட்டால் இவ்வூரின் ஒரு பகுதியாக வளநகர் சக்கராப்பள்ளி இருந்ததாகக் குறிக்கப்படுவதால் இவ்வூரின் பெருமையையும் அறியமுடிகிறது. கல்வெட்டில் காணப்படும் அகழிமங்கலமே மருவி இன்று அரிமங்கை என்னும் மிகச்சிறிய குடியிருப்புப்பகுதியாக மாறியுள்ளது. [1]


மேற்கோள்கள்

  1. அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.