அக்காதியம்

அக்காதியம் ஒரு செமித்திய மொழியாகும். இது பெரிய மொழிக் குடும்பமான ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு செமிடிக் மொழியாகும். பண்டைய மெசொப்பொத்தேமியாவில் பேசப்பட்ட மொழியாகும்.[1] சுமேரிய மொழியிலிருந்து பெறப்பட்ட எழுத்து முறைமை பயன்படுத்தப்பட்டது. மொழியின் பெயரானது, அது பேசப்பட்ட ஒரு நகரான, அக்காத் நகரின் காரணமாக ஏற்பட்டதாகும். இம்மொழி கிமு மூவாயிரத்திலிருந்து, கிமு 1000 முடிய பேசப்பட்டது.

அக்காதியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-2akk
ISO 639-3akk

வகைகள்

அக்காது மொழி புவியியல் மற்றும் காலம் சார்பாகப் பின்வருமாறு பிரித்து நோக்கப்படுகிறது.

  1. பழைய அக்காத்திய மொழி கிமு 2500 – 1950
  2. பழைய பபிலோனிய/பழைய அசிரியன் கிமு 1950 – 1530
  3. மத்திய பபிலோனிய/மத்திய அசிரியன் கிமு 1530 – 1000
  4. புதிய-பாபிலோனிய/புதிய-அசிரியன் கிமு 1000 – 600
  5. பிந்திய பபிலோனிய கிமு 600 - கிபி 100

குறிப்பு 1: தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தல் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. முதன்மையான இரண்டு வகைகளும், சிவப்பு கோடுகளால் காட்டப்பட்டுள்ளன. பின்வரும் படிமம், தெற்கு செமிடிக் மொழிகளின் வகைப்படுத்தலைக் காட்டுகின்றன. பிற விபரங்களுக்கு, அத்தலைப்புகளில் உள்ள கட்டுரைகளைக் காணவும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Akkadian language
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.