1930கள்

1930கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1930ஆம் ஆண்டு துவங்கி 1939-இல் முடிவடைந்தது.

ஆயிரவாண்டுகள்: 2-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு - 21-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள்
ஆண்டுகள்: 1930 1931 1932 1933 1934
1935 1936 1937 1938 1939

1930களின் ஆரம்பம் பொருளாதார ரீதியில் நிலையற்றதாக இருந்தது. 1930இல் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியின் தாக்கத்தை மக்கள் 1931இல் உணரத் தொடங்கினர். இது மேலும் வீழ்ச்சியடைந்து 1933இல் மிகவும் கீழ் நிலையை அடைந்தது. இது மந்த காலம் (depression) என ஆழைக்கப்படுகிறது. 1933 க்குப் பின்னர் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி அடையத் தொடங்கினாலும் அக்காலத்தில் ஐரோப்பாவில் நாசிசம், பாசிசம், ஸ்டாலினிசம் போன்ற போர் சார்பான அரசியல் கொள்கைகளினால் பெருமளவு வளர்ச்சி அடையவில்லை. உதாரணமாக ஸ்டாலின் அறிவித்த ஐந்தாண்டுத் திட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். கிழக்காசியாவில் இராணுவ ஆட்சி ஏற்றம் பெற்று வந்தது. 1939இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமாகும் வரையில் பொருளாதார மந்த நிலை காணப்பட்டது.

நிகழ்வுகள்

நுட்பம்

  • மே 3, 1931 - உலகின் அதி உயர் கட்டிடம் "எம்பயர் ஸ்டேட் கட்டிடம்" நியூயார்க்கில் கட்டப்பட்டது.
  • 1930 - உலகின் முதலாவது பேசும் படமான Song of flameவார்ணர் பிறதேர்ஸ் வெளியிட்டனர்.
  • 1938 - ராடார் ரொபேர்ட் வாட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.