நாசிசம்

நாசிசம் என்பது ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய இனமே உலகை ஆளத் தகுந்தது;மற்ற அனைத்து இனங்களும் அழகிலும், அறிவிலும் ஆரியர்களுக்குக் குறைந்தவை போன்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு ஜெர்மனியில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றி இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்ட இனவெறிக் கொள்கையைக் குறிக்கும். இதற்கு மூலமான ஆரிய உயர்வுக் கொள்கை(Aryan Supremacy Theory) பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கொள்கை, அன்பு, அருள், இரக்கம் போன்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவ நெறியை அடிமைகளின் நெறிகள் என்றும் வெள்ளை நிறமும், நீலக் கண்களும் கொண்ட ஆரியர்கள் இவற்றையும் இவற்றிற்கு அடிப்படையான யூத மறையையும், யூதர்களையும் உலகிலிருந்து ஒழிக்கும் மூலமே ஆரியர்களின் பழங்காலப் பெருமையை மீண்டும் நிலைநாட்ட முடியும் என பரப்புரை(propaganda) செய்தது.

அடொல்ப் ஹிட்லர் தனது சிறைவாசத்தின் போது எழுதிய மெயின் கேம்ப் (Mein Kampf-எனது தவிப்பு என மொழியாக்கம் செய்யப்படும்.) எனும் நூலில் நாசிசக் கொள்கைகள் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.