மொனாக்கோ

மொனாக்கோ (Monaco) என்பது ஐரோப்பாவில் பிரெஞ்சு ரிவியேராவில் (கோட் டாசூர்) பிரான்ஸ் நாட்டுக்கு தென்கிழக்கில் உள்ள ஒரு தன்னாட்சி கொண்ட நகர-நாடு ஆகும். வத்திக்கான் நகருக்கு அடுத்ததாக உலகின் மிகச்சிறிய நகர-நாடு இதுவாகும். இதன் எல்லையின் வடக்கு, மேற்கு, மற்றும் தெற்குப் பகுதிகளில் பிரான்சு நாடு உள்ளது. இதன் பரப்பளவு 1.98 சதுர கிமீ (0.76 சதுர மைல்) ஆகும், 2001 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 35,986 ஆகும். மொனாகோ உலகின் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP $215,163) கொண்டுள்ளது. அத்துடன் உலகின் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாக உள்ள நாடும், தனி நபர் வாழ்வுக் காலம் (90 ஆண்டுகள்) அதிகமான நாடும் இதுவே. அண்மையில் ஹேர்க்குலி துறைமுக விரிவாக்கத்தை அடுத்து மொனாக்கோவின் மொத்தப் பரப்பளவு 2.05 சதுர கிமீ ஆக அதிகரித்தது. நடுநிலக் கடலில் மேலும் நிலம் மீளக் கோரப்பட்டதை அடுத்து நாட்டின் பரப்பளவை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மொனாக்கோ நாட்டின் வரைபடம்

கொடி சின்னம்
குறிக்கோள்: "Deo Juvante" (இலத்தீன்)
"With God's Help"
நாட்டுப்பண்: Hymne Monégasque
English: Monégasque Anthem
அமைவிடம்: மொனாக்கோ  (green)

on the European continent  (dark grey)   [Legend]

அமைவிடம்: மொனாக்கோ  (green)

on the European continent  (dark grey)   [Legend]

தலைநகரம்Monaco[a][1][2]
43°43′N 7°25′E
பெரிய Quartier மான்டே கார்லோ
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு[3]
Common languages
இனக் குழு
மக்கள்
  • Monégasque
  • Monacan[c]
அரசாங்கம் Unitary நாடாளுமன்றம் முடியாட்சி principality
   இளவரசன் இரண்டாம் ஆல்பேர்ட்
   Minister of State Michel Roger
   President of the National Council Laurent Nouvion (REM)
சட்டமன்றம் தேசிய கவுன்சில்
Independence
   House of Grimaldi 1297 
   Franco-Monegasque Treaty 1861 
   Constitution of Monaco 1911 
   Franco-Monegasque Treaty 2002 
பரப்பு
   மொத்தம் 2.02 கிமீ2 (248th)
0.78 சதுர மைல்
   நீர் (%) negligible[4]
மக்கள் தொகை
   2011 கணக்கெடுப்பு 36,371[5] (217th)
   2008 கணக்கெடுப்பு 35,352[4]
   அடர்த்தி 18,005/km2 (1st)
49/sq mi
மொ.உ.உ (கொஆச) 2010[b] கணக்கெடுப்பு
   மொத்தம் $4.694 billion[6][7] (156th)
   தலைவிகிதம் $132,571[6][7] (1st)
மொ.உ.உ (பெயரளவு) 2010[b] கணக்கெடுப்பு
   மொத்தம் $5.424 billion[6] (148th)
   தலைவிகிதம் $153,177[6] (1st)
மமேசு (2008) 0.956[8]
அதியுயர் · 1st
நாணயம் யூரோ (€) (EUR)
நேர வலயம் மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.அ.நே+2)
வாகனம் செலுத்தல் right[9]
அழைப்புக்குறி +377
இணையக் குறி .mc
a. ^ Monaco is a நகர அரசு. However, government offices are located in the Quartier of Monaco-Ville.
b. ^ GDP per capita calculations include non-resident workers from France and Italy.
c. ^ Monacan is the term for residents.

மொனாக்கோ அரசமைப்புக்குட்பட்ட குடியரசாக ஆளப்பட்டு வருகிறது. இதன் தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் என்பவராவார். 1297 ஆம் ஆண்டில் இருந்து மொனாக்கோ கிரிமால்டி குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. 1861 ஆம் ஆண்டில் பிரான்சுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து இது சுயாட்சி கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கிரிமால்டி வம்சத்தினரே இதனை ஆண்டு வருகின்றனர். மொனாக்கோ தனி நாடாக இருந்தாலும், இதன் தேசியப் பாதுகாப்பு பிரான்சின் பொறுப்பில் உள்ளது. வெளிநாட்டுக் கொள்கையை மொனாக்கோவே கவனித்துக் கொள்கிறது.

சுற்றுலா இந்நாட்டின் முக்கிய தொழில் ஆகும். இங்கு பரவலாக பிரெஞ்சு மொழியே பேசப்படுகிறது.

வரலாறு


மொனோக்கொவின் பெயர் கி.மு 6ம் நூற்றாண்டில் போகயா பண்டைக் கிரேக்கத்தில் இருந்து வந்தது. லிகுரியான்களால் மொனிக்கொஸ் எனக் குறிப்பிடப்படுகிறது, கிரேக்க மொழியில் "μόνοικος", "single house", from "μόνος" (monos) "alone, single".[10] + "οἶκος" (oikos) "house",[11] மற்ற வகையில் மக்கள் உணர்ச்சிகள் ஒரு வாழ்விடம் அல்லது ஒரு பகுதியில் வாழ்தல் என்பவற்றில் தங்கியுள்ளது. ஒரு பண்டைய தொன்மம் படி, ஹெர்குலஸ் மொனாக்கோ பகுதி வழியாக தாண்டி முந்தைய தேவர்களை திரும்பி பார்க்கச்சென்றார்.[12] இதன் விளைவாக, அங்கு ஹெர்குலசுக்காக ஒரு கோவில் கட்டப்பட்டது. அக்கோயில் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியில் மட்டுமே ஹெர்குலசுக்காக கோயில் கட்டப்பட்டதால் இக் கோயிலை ஹெர்குலசின் "மாளிகை" என அழைக்கப்பட்டது, இதனால் இந்நகரமும் மொனிக்கொஸ் என அழைக்கப்பட்டது.[13][14]

காலநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், Monaco
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 12.3
(54.1)
12.5
(54.5)
14.0
(57.2)
16.1
(61)
19.4
(66.9)
23.0
(73.4)
25.8
(78.4)
25.9
(78.6)
23.8
(74.8)
19.9
(67.8)
16.1
(61)
13.4
(56.1)
18.5
(65.3)
தினசரி சராசரி °C (°F) 10.2
(50.4)
10.4
(50.7)
11.8
(53.2)
13.9
(57)
17.1
(62.8)
20.8
(69.4)
23.5
(74.3)
23.7
(74.7)
21.6
(70.9)
17.8
(64)
14.0
(57.2)
11.4
(52.5)
16.4
(61.5)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
8.2
(46.8)
9.6
(49.3)
11.6
(52.9)
14.8
(58.6)
18.5
(65.3)
21.2
(70.2)
21.5
(70.7)
19.3
(66.7)
15.6
(60.1)
11.9
(53.4)
9.3
(48.7)
14.1
(57.4)
பொழிவு mm (inches) 82.7
(3.256)
76.4
(3.008)
70.5
(2.776)
62.2
(2.449)
48.6
(1.913)
36.9
(1.453)
15.6
(0.614)
31.3
(1.232)
54.4
(2.142)
108.2
(4.26)
104.2
(4.102)
77.5
(3.051)
768.5
(30.256)
சராசரி பொழிவு நாட்கள் 6.8 6.4 6.1 6.3 5.2 4.1 1.9 3.1 4.0 5.8 7.0 6.0 62.7
சூரியஒளி நேரம் 148.8 152.6 201.5 228.0 269.7 297.0 341.0 306.9 240.0 204.6 156.0 142.6 2,668.7
ஆதாரம்: Monaco website[15]

மேற்கோள்கள்

  1. "United-Nations data, country profile". பார்த்த நாள் 29 October 2013.
  2. "Constitution of Monaco (art. 78): The territory of the Principality forms a single commune.". பார்த்த நாள் 29 October 2013.
  3. "Constitution de la Principauté". Council of Government (Monaco). மூல முகவரியிலிருந்து 22 July 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 May 2008.
  4. Monaco en Chiffres at the Wayback Machine (archived நவம்பர் 15, 2009)., Principauté de Monaco. Retrieved 7 June 2010.
  5. "Population et emploi / IMSEE — Monaco IMSEE" ((பிரெஞ்சு)). Imsee.mc. பார்த்த நாள் 6 September 2012.
  6. "National Accounts Main Aggregates Database". United Nations Statistics Division. பார்த்த நாள் 8 October 2012.
  7. "World Development Indicators". உலக வங்கி. பார்த்த நாள் 8 October 2012. Note: "PPP conversion factor, GDP (LCU per international $)" for France (0.8724) was used.
  8. Filling Gaps in the Human Development Index, United Nations ESCAP, February 2009
  9. "What side of the road do people drive on?". Whatsideoftheroad.com. பார்த்த நாள் 28 May 2012.
  10. μόνος at the Wayback Machine (archived சூன் 29, 2011)., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  11. οἶκος at the Wayback Machine (archived சூன் 29, 2011)., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  12. "History of Monaco". Monaco-montecarlo.com. பார்த்த நாள் 28 May 2012.
  13. Strabo, Geography, Gaul, 4.6.3 at LacusCurtious
  14. μόνοικος at the Wayback Machine (archived சூன் 29, 2011)., Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus Digital Library
  15. "Climatological information for Monaco" – Monaco website
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.