மாக்கடோனியக் குடியரசு

மாக்கடோனியக் குடியரசு (மாக்கடோனிய மொழி: Република Македонија, Republika Makedonija [1] Republic of Macedonia கேட்க , பொதுவாக மாக்கடோனியா என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் குடாவில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக வடக்கே செர்பியா, மேற்கே அல்பேனியா, தெற்கே கிரேக்கம், கிழக்கே பல்கேரியாவும் அமைந்துள்ளன. ஐநா அவையில் இது 1993இல் இணைந்தது.

மாக்கடோனியக் குடியரசு
வடக்கு மாசிடோனியா குடியரசு

Република Македонија
Republika Makedonija
கொடி சின்னம்
நாட்டுப்பண்: Денес над Македонија  (மாக்கடோனிய மொழி)
"மாக்கடோனியாவின் மேல் இன்று"
தலைநகரம்ஸ்கோப்ஜி
42°0′N 21°26′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) மாக்கடோனிய மொழி,1
மக்கள் மாக்கடோனியன்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சிக் குடியரசு
   குடியரசுத் தலைவர் பிரான்கோ செர்வென்கோவ்ஸ்கி
   தலைமை அமைச்சர் நிக்கொலா க்ருயேவ்ஸ்கி
விடுதலை யுகோசுலாவியாவிடம் இருந்து
   பிரகடனம் செப்டம்பர் 8, 1991 
பரப்பு
   மொத்தம் 25,333 கிமீ2 (148வது)
9,779 சதுர மைல்
   நீர் (%) 1.9
மக்கள் தொகை
   2006 கணக்கெடுப்பு 2,038,514 (143வது)
   2002 கணக்கெடுப்பு 2,022,547
மொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு
   மொத்தம் $16.94 பில்லியன் (121வது)
   தலைவிகிதம் $7,645 (80வது)
மமேசு (2004) 0.796
Error: Invalid HDI value · 66வது
நாணயம் மாக்கடோனியன் டெனார் (MKD)
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) ம.ஐ.கோ.நேரம் (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 389
இணையக் குறி .mk
1 மாக்கடோனிய மொழி இங்கு முதலாவது ஆட்சி மொழியாக உள்ளது. ஜூன், 2002 இலிருந்து, 20%க்கும் அதிகமாகப் பேசப்படும் எந்த மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும். இன்று அல்பேனிய மொழியும் உத்தியோகபூர்வ மொழியாக உள்ளது.

இதன் தலைநகரம் ஸ்கோப்ஜி ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.

மாசிடோனியா பெயர் சர்ச்சை

மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு), கிரீஸ் நாட்டின் மாசிடோனியா (கரும் பச்சை நிறம்) பிரதேசங்களின் புவியியலைக் காட்டும் வரைபடம்
  கிரீஸ் நாட்டின் வடக்கில் மாசிடோனியா பிரதேசம் (கரும் பச்சை நிறம்)
  மாசிடோனியா குடியரசு (இளம் சிவப்பு நிறம்)

1992ல் யூகோஸ்லாவியா உடைந்த பிறகு மாசிடோனியா சுதந்திரம் பெற்றது முதல், மாசிடோனியா பெயர் தொடர்பான பிணக்கு, கிரீஸ் நாட்டுடன் இருந்து வருகிறது.

பேரரசர் அலெக்சாந்தர் ஆண்ட, கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதி மாசிடோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மாசிடோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரீஸ், மாசிடோனியா நாட்டுடன் பிணக்கு கொண்டிருந்தது.[2]. இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.

30 வருட சர்ச்சைக்கு பிறகு, கிரீசின் அண்டை நாடான மாசிடோனியா, வடக்கு மாசிடோனியா என பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் சூன், 2018ல் ஒப்பந்தம் செய்துள்ளது.[3][4] இதனால் மாசிடோனியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக சேரும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.