இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1921

பிரித்தானிய இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்கான மூன்றாவது தேர்தல் (election to the Legislative Council of Ceylon) 1921 ஆம் ஆண்டில் இடம்பெற்றது.

பிரித்தானிய இலங்கையின் 3வது சட்டவாக்கப் பேரவைத் தேர்தல்

1921

இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு 19 இடங்கள்

பின்னணி

இலங்கையின் சட்டவாக்கப் பேரவை 1833 ஆம் ஆண்டில் கோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிருந்த்தானிய ஆளுநர் உட்பட 16 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இவர்களில் இலங்கை நிறைவேற்றுப் பேரவையின் ஐவர், நான்கு அரசாங்க அதிகாரிகள், மேலும் ஆறு பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் (மூன்று ஐரோப்பியர், ஒரு சிங்களவர், ஒரு தமிழர், ஒரு பரங்கியர்) நியமிக்கப்பட்டனர்.

1889 இல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டது (மூன்று ஐரோப்பியர், ஒரு கீழைத்தேய சிங்களவர், ஒரு கண்டியச் சிங்களவர், ஒரு தமிழர், ஒரு சோனகர், ஒரு பரங்கியர்)[1].

1910 ஆம் ஆண்டில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டது. இவர்களில் 11 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்களும் 10 அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களும் (இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பரங்கியர், ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கைக் கல்விமான், இரண்டு நியமனம் பெற்ற கீழைத்தேய சிங்களவர், இரண்டு நியமனம் பெற்ற தமிழர், ஒரு நியமனம் பெற்ற கண்டிச் சிங்களவர், ஒரு நியமனம் பெற்ற சோனகர்) ஆவர்[2] மூவாயிரத்துக்கும் குறைவான இலங்கையர்கள் நான்கு அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களுக்காக வாக்களிக்கத் தகுதி பெற்றனர்[2].

1920 ஆம் ஆண்டில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிக்கப்பட்டது. 14 பேர் அதிகாரபூர்வ உறுப்பினர்கள், 23 பேர் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள். இவர்களில் பிரதேசவாரியாக 11 பேர், ஐந்து ஐரோப்பியர்கள், இரண்டு பரங்கிகள், வணிகர் சங்கத்துக்காக ஒருவர் ஆக 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனையோர் நியமன உறுப்பினர்கள் (2 கண்டிச் சிங்களவர், ஒரு முஸ்லிம், ஒரு இந்தியத் தமிழர்)[3].

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்கள் சிலர்

மேற்கோள்கள்

  1. Wijesinghe, Sam (25 டிசம்பர் 2005). "People and State Power". சண்டே ஒப்சேர்வர். http://www.sundayobserver.lk/2005/12/25/fea104.html. பார்த்த நாள்: 7 பெப்ரவரி 2010.
  2. கே. ரி. ராஜசிங்கம் (18 ஆகத்து 2001). "Chapter 2: Beginning of British Rule". SRI LANKA: THE UNTOLD STORY. ஏசியா டைம்ஸ். பார்த்த நாள் 7 பெப்ரவரி 2010.
  3. K T Rajasingham (1 செப்டம்பர் 2001). "Chapter 4: The Ceylon National Congress and its intrigues". SRI LANKA: THE UNTOLD STORY. Asia Times. பார்த்த நாள் 7 பெப்ரவரி 2010.
  4. Shantha K. Hennayake (5 April 2004). "Geography is thicker than blood: Prabhakaran (North) - Karuna (East) feud in context". The Island, Sri Lanka. http://www.island.lk/2004/04/05/featur03.html. பார்த்த நாள்: 7 February 2010.
  5. M. Sarath K. Munasinghe (31 March 2004). "Political clergymen of the past". The Island, Sri Lanka. பார்த்த நாள் 6 February 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.