ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகம்

ஹோமி பாபா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (Homi Bhabha National Institute) இந்திய அரசு அங்கீகாரம் வழங்கிய ஒரு சிறப்பு மிகுந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் மனித வள மேம்பாடு அமைச்சகம் ஹோமி பாபா தேசிய நிறுவனத்தை, அந்த நிறுவனத்துடன் மேலும் பத்து கல்வி நிறுவனங்களையும் இணைத்து, அப்படி அமைந்த ஒரு அமைப்பை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவித்தது. இவற்றில் இந்தியாவில் செயல்படும் மிகவும் புகழ்பெற்றதும், தன்னிகரற்றதுமான நான்கு முதன்மை ஆராய்ச்சி மையங்களும், ஆறு முதன்மை தன்னாட்சி நிறுவனங்களும் அடங்கும்.

இந்தப் பல்கலைக்கழகம் புகழ் பெற்ற இந்திய அறிவியல் வல்லுனரும், அணு ஆராய்ச்சியில் பெயர் பெற்று விளங்கி இந்தியாவின் அணு சக்தி ஆராய்ச்சிகளுக்கு வித்திட்டவருமான ஹோமி பாபாவின் பெயரில், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் பெயரிடப் பெற்றுள்ளது. இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான அங்கீகாரத்தை இந்திய அரசு வழங்கியதை இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் 2005 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று அறிவித்தார். இந்தியப் பாராளுமன்றம் இந்த பல்கலைக்கழகத்தை மிகச்சிறப்பான அமைப்பாக அறிவித்தது. பொதுவாக மத்திய அரசின் கல்வி நிருவனங்களில் சேர்ந்து படிக்க அனுமதித்துள்ள இட ஒதுக்கீடு, அண்மையில் 49.5% ஆக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் ஹோமி பாபா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தை ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த அமைப்பாக இந்திய அரசு கருதுவதால், இந்த இட ஒதுக்கீட்டினை மறுக்கும் மசோதா ஒன்றை அரசு 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளது.[1]

இந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய இயக்குனராக டாக்டர் ரவி க்ரோவர் பொறுப்பேற்றுள்ளார். இப்பல்கலைக்கழகம் மகாராட்டிரத்தில் மும்பையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த நான்கு முதன்மை ஆராய்ச்சி மையங்கள் பின்வருமாறு:

இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆறு முதன்மை நிறுவனங்கள் பின்வருமாறு:

  • அணுக்கரு இயற்பியலுக்கான சாஃகா நிறுவனம் [2]
  • பிளாசுமா ஆராய்ச்சி நிலையம், காந்திநகர்
  • ஹரிச்சந்திர ஆராய்ச்சி மையம், அலகாபாத்
  • டாட்டா நினைவு மையம், மும்பை
  • கணித அறிவியல் நிலையம், சென்னை
  • இயற்பியல் நிலையம், புவனேஷ்வர்

மேற்கோள்கள்

  1. ^ Reservation bill passed in Lok Sabha
  2. மேகநாத சாஃகா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.