சிரிக்கும் புத்தர்

சிரிக்கும் புத்தர் (Smiling Buddha) என்பது இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்த பொழுது, இந்தியா செயல்படுத்திய முதல் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகளை (பொதுவாக அணு குண்டு சோதனை என மக்களால் கருதப்படுவது) குறிப்பதற்கான குறிச்சொல் ஆகும். இந்த அணுக்கரு வெடிப்பு பரிசோதனைகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பொக்ரான் என்ற இடத்தில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18 அன்று நிகழ்ந்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது. சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் எட்டு கிலோ டன்கள் (டி.என். டி வெடிபொருள் வெடிப்புக்குச் சமம்) என கணிக்கப்பட்டுள்ளது.[1]

பின் விளைவுகள்

இச்சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதற்காக ஹோமி சேத்னாவுக்கும், ராஜா ராமண்ணாவுக்கும், டாக்டர் நாக சௌதுரி ஆகியோருக்கு பத்மவிபூசன் விருது வழங்கினார்கள். இதர ஐந்து உறுப்பினர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.[2] இந்தச் சோதனை நிகழ்த்தியதைக் கண்டித்து கனடா நாடு மிகவும் அதிர்ச்சியுற்று இந்தியாவுடன் ஆன உறவை முறித்துக் கொண்டது.[3]

மேற்கோள்கள்

  1. ^ a b "India's Nuclear Weapons Program - Smiling Buddha: 1974". Nuclear Weapon Archive. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html.
  2. http://nuclearweaponarchive.org/India/IndiaSmiling.html
  3. ^ Richelson, Jefferey T. (March 1999). Spying on the Bomb: American Nuclear Intelligence from Nazi Germany to Iran and North Korea. WW Norton. pp. 233. ISBN 978-0393053838

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.