கைகா அணுமின் நிலையம்

கைகா அணு மின் நிலையம் இந்தியாவில் கர்நாடக ‎மாநிலத்தில் அமைந்த உத்தர கன்னடம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள ‎கைகா என்ற இடத்தில், மார்ச் மாதம் 2000 ஆம் ஆண்டு முதல் செயல் பட்டு ‎வருகிறது. இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India) வழிநடத்தும் அணு மின் நிலையங்களில் இந்த ஆலையும் ஒன்றாகும்.[1]‎ இத்திட்டத்தை இந்திய அணுமின் கழகம் 1989 ஆம் ‎ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது. முதல் இரு உலைப்பணிகள் ‎நடக்கும் பொழுது, இந்த ஆலையின் ஈயத்தால் ஆன சுவர் இடிந்து விழுந்ததால் ‎சர்ச்சைகள் எழுந்தன, அதனால் ஆலையின் முதல் கட்டப்பணிகள் 2000 ‎ஆண்டில் தான் முடிவு பெற்றது. ‎

கைகா அணுமின் நிலையம்
அமைவிடம்:கைகா அணுமின் நிலையம்
நாடுஇந்தியா
அமைவு14°51′55.16″N 74°26′22.71″E
அமைப்பு துவங்கிய தேதி1989
இயங்கத் துவங்கிய தேதிநவம்பர் 16, 2000
இயக்குபவர்இந்திய அணுமின் கழகம்
உலை விவரம்
செயல்படும் உலைகள்4 x 220 MW
மின் உற்பத்தி விவரம்
ஆண்டு உற்பத்தி2,231 GW·h
மொத்த உற்பத்தி17,389 GW·h
இணையதளம்
இந்திய அணுமின் கழகம்
நிலவரம்:சூலை 22, 2007

‎2009 ஆம் ஆண்டில் அதிக அளவில் கதிரியக்கம் ஏற்பட்டதால் பல ‎பணியாளர்கள் பாதிப்புக்கு ஆளாயினர்.[2] குடிக்கும் தண்ணீரில் அணு ‎உலைகளில் செலுத்தும் கனமான தண்ணீர் கலந்ததாகவும் ஒரு சர்ச்சை ‎எழுந்தது.[3] இதன் காரணமாக முதலில் ரூபாய் ‎‎750 கோடி அளவில் திட்டமிட்ட பணிகள் காலதாமதம் காரணமாக ரூபாய் 2275 ‎கோடி அளவிற்கு உயர்ந்தது. ‎

இந்த ஆலையில் தற்பொழுது நான்கு அணு சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அணு மின் உலைகள் ‎உள்ளன, அவற்றில் மூன்று நடைமுறையில் உள்ளது மேலும் ஒரு உலையின் ‎கட்டிடப் பணிகள் நடந்து வந்தன. இவை நான்கும் சிறிய ‎அளவிலான 220 மெகாவாட் திறன் கொண்ட காண்டு (CANDU) வகை ‎உலைகள் ஆகும், இவற்றில் இரு பழைய உலைகள் ஆலையின் மேற்கு பாகத்திலும், ‎புதிய உலைகள் கிழக்கு பாகத்திலும் உள்ளன.

மேற்கோள்கள்

  1. http://www.npcil.nic.in/PlantsInOperation.asp
  2. "Radiation leak in Kaiga could be ‎sabotage, probe ordered". Hindustan Times. http://www.hindustantimes.com/News-‎Feed/india/Radiation-leak-in-Kaiga-could-be-sabotage-probe-ordered/Article1-‎‎481304.aspx. Retrieved 29 November 2009
  3. http://lokayatpune.wordpress.com/2009/12/03/on-the-kaiga-‎incident-statement-by-naam-maharashtra
  4. http://www.hindu.com/2010/11/28/stories/2010112862781300.htm

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.