வண்ணார்

வண்ணார் (Vannar) எனப்படுவோர் இந்திய மாநிலமான, தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். இச்சமூகத்தினர் இந்தியாவின், வட மாநிலங்களில் டோபி என்ற பெயரில், இலங்கையில் ராஜாகா என்ற பெயரிலும் வசிக்கின்றனர்.

வண்ணார் / ராஜாகா /சூரியகுலத்தோர்
மொத்த மக்கள்தொகை
20,72,625
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, இலங்கை
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
டோபி, ராஜாகா

இவர்கள் தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.[1]

சொற்பிறப்பு

வண்ணார் என்ற சொல் வண்ணம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாக கருதப்படுகிறது. இதற்கு "அழகு" என்று பொருள்படும்.[2] இச்சமூகத்தினர் கட்டாடி என்னும் பெயரை முதன்மையாக பயன்படுத்துகின்றனர்,[3] இதற்கு பேயோட்டுபவர்கள் என்று பொருளாகும்.[4]

வண்ணார்கள் பாரம்பரியமாக தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றான, மருத நிலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.[5] வண்ணார்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் ஈடுபட்டனர்.[6] வண்ணார்கள் வீட்டு ஊழியர்களாகவும் பணியாற்றினர்.

வரலாறு

சலவைத் தொழில்

வண்ணார் மக்கள் தமிழ்நாட்டில் 5 விழுக்காடு உள்ளனர். அவர்கள் தங்களை தமிழக அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பலமுறை வற்புறுத்தியும், அரசாங்கம் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. இதன்முலம் அரசியல், வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு போன்றவற்றில் இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு முன்னுரிமையும் கிடைப்பதில்லை.[7]

தொழில்

இவர்கள் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவர்களை வண்ணார் அல்லது டோபி என்கிற பெயர்களிலும் அழைப்பர். இச்சாதியினர் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆடைகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர், சுத்தப்படுத்திய ஆடைகளைத் தாங்கள் எடுத்து வந்த வீடுகளுக்குச் சென்று கொடுக்கின்றனர். வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர்.[8][9]

பெயர்கள்

வண்ணார் சமூகம் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது அவை ஈரங்குலி வண்ணார், பாண்டிய வண்ணார், தீண்டு வண்ணார், தீண்டா வண்ணார், தொண்டைமான் வண்ணார்.[10]

மக்கள்தொகை

தமிழகத்தில் வண்ணார்கள் 20,72,625 பேர் வசிக்கின்றனர்.[11]

புதிரை வண்ணான்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சில சாதியினர் வீடுகளில் சலவைத் தொழிலாளர் பணியினைச் செய்யும் சாதியினர் புதிரை வண்ணான் என்று அழைக்கப்படுகின்றனர். புதிரை வண்ணான் எனும் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்

மேற்கோள்கள்

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  2. Fuchs, Stephen (1981) (in en). At the bottom of Indian society: the Harijan and other low castes. Munshiram Manoharlal. பக். 226. https://books.google.com/books?id=wZI9AAAAMAAJ.
  3. https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF
  4. David, Kenneth (2011-06-03) (in en). The New Wind: Changing Identities in South Asia. Walter de Gruyter. பக். 203. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783110807752. https://books.google.com/books?id=Vp_la9QMGIQC.
  5. Ramaswamy, Vijaya (2016-09-26) (in en). Women and Work in Precolonial India: A Reader. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789351507406. https://books.google.no/books?id=TzxwDQAAQBAJ&pg=PT103&dq=vannan&hl=en&sa=X&ved=0ahUKEwjx___gxObfAhXJAxAIHWCAB8oQ6AEISzAF#v=onepage&q=vannan&f=false.
  6. Cartman, James (1957). Hinduism in Ceylon. M.D. Gunesena. பக். 134. https://books.google.com/books?id=EnhAAAAAIAAJ.
  7. க.காமராசன். "தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் - கீற்று". keetru.com.
  8. http://www.kalachuvadu.com/archives/issue-158/வண்ணார்-கிளர்ச்சி
  9. "தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்". Panuval Book Store.
  10. http://tamil.thehindu.com/general/literature/பார்க்கத்-தகாதவர்களாக்கப்பட்ட-மனிதர்கள்/article6917501.ece
  11. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009 விகடன்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.