சித்தியால அயிலம்மா
சித்தியால அயிலம்மா அல்லது சாக்கிலி அயிலம்மா (ஆங்கிலம்: Chityala Ailamma, தெலுங்கு: చకళి అనామ; 1919- 1985) என்பவர் இந்திய வீராங்கனை ஆவார். இவர் தெலுங்கானா புரட்சியின்போது நில உடைமையாளர் விசுணூர் தேசுமுக் என்கிற சமீன்தார் ராமச்சந்திர ரெட்டிக்கு எதிராகப் போர்க் கோடி உயர்த்திய மற்றும் துப்பாக்கி ஏந்தி போராடிய முதல் பெண்மணி ஆவார். [1][2]

வாழ்க்கைக் குறிப்புகள்
இந்தியா, தெலுங்கானா மாநிலத்தில், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கிருட்டிணாப்புரம் என்ற சிற்றூரில் பிறந்த சித்தியால அயிலம்மா ஆந்திர மகாசபையிலும் பொதுவுடைமைக் கட்சியிலும் இணைந்தார். நிசாம் அரசுக்கு எதிராகச் செயல்பட்டார். பெரும் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களையும் அவர்கள் செய்த வல்லாண்மைச் செயல்களையும் எதிர்த்துச் செயல்பட்டார். இவருக்குச் சொந்தமாக இருந்த 4 ஏக்கரா நிலத்தை ராமச்சந்திர ரெட்டி என்ற சமீந்தார் பிடுங்க முயன்றபோது அவரை எதிர்த்து வென்றார். இவருடைய துணிச்சல் மிக்க செயல் பிற விவசாயிகளையும் விழிப்படையச் செய்தது.
இதையும் காண்க
- தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்