லாரன்சு வான் பில்

லாரன்சு வான் பில் (Laurens van Pyl, அண். 1634 - 17 செப்டம்பர் 1705) டச்சு குடியேற்றக் கால நிருவாகியாவார், இவர் ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆளுனராக 1680 டிசம்பர் 3 முதல் 1693 சூன் 19 வரை பதவியில் இருந்தார்.[1]

லாரன்சு வான் பில்
Laurens van Pyl
ஒல்லாந்தர் கால இலங்கையின் 12 வது ஆளுனர்
பதவியில்
3 டிசம்பர் 1680  19 சூன் 1693
முன்னவர் ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே
பின்வந்தவர் தோமசு வான் ரீ
தனிநபர் தகவல்
பிறப்பு அண். 1634
இறப்பு 17 செப்டம்பர் 1705

லாரன்சு வான் பில் இலங்கையின் ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் யாழ்ப்பாணத்தின் தளபதியாகப் பதவியில் இருந்தார்.[2] 1678 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டையில் டச்சுத் தேவாலயம் ஒன்றை அமைத்தார். இத்தேவாலயம் பின்னர் அமெரிக்க மிசனறிகளின் பயன்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்ட்டது. 1679 இல் இறந்த இவரது மகனின் கல்லறை இக்கோயிலில் உள்ளது.[2]

கண்டியில் 20 ஆண்டுகளாக கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனால் சிறை வைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயக் கப்பல் தலைவர் இராபர்ட் நொக்சு சிறையில் இருந்து தப்பி அரிப்புக் கோட்டையை வந்தடைந்த போது லாரன்சு வான் பில் அவரை வரவேற்று கொழும்புக்கு அழைத்துச் சென்றார்.[2] லாரன்சு வான் பில் கண்டி மன்னருடன் நல்லுறவைப் பேணி வந்தார். கண்டியில் சிறை வைக்கப்பட்டிருந்த பல வெளிநாட்டவர்கள் இவரது காலத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.[3]

மேற்கோள்கள்

  1. Cahoon, Ben. "Dutch Governors". Worldstatesmen. பார்த்த நாள் 1 மார்ச் 2013.
  2. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 145
  3. Humphry William Codrington. "A SHORT HISTORY OF LANKA, Chapter 9". பார்த்த நாள் 30 திசம்பர் 2015.
அரசு பதவிகள்
முன்னர்
ரிக்லாவ் வொன் கூன்சு டெ யொங்கே
இலங்கையின் ஒல்லாந்த ஆளுனர்கள்
1680-1693
பின்னர்
தோமசு வான் ரீ
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.