லாவணி

இலாவணி (மராத்தி: लावणी) மத்திய இந்தியாவின் பழம்பெரும் கிராமிய இசைப் பாடல் கலை. மகாராட்டிரம், தெற்கு மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய பகுதிகளில் பிரபலமாக உள்ளது. அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கி.பி.1400-களில், தமிழகத்த்தின் தஞ்சாவூர் பகுதியை தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது, அவர்களோடு தஞ்சைக்கு இக்கலையை கொண்டு வந்ததாக, நாட்டுப்புற ஆய்வுகளிலிருந்து அறியமுடிகிறது. இது ஹோலித்திருவிழாவின்போதும்,குழந்தை பிறந்த 8நாட்கள் வரையில், தீய சக்திகள் அண்டாதிருக்கவும் பாடப்படுகிறது.[1]

லாவணிக் கலையில் புகழ்பெற்ற மராத்தியக் கலைஞர் சுரேக்கா புனேக்கர்

சங்ககாலத்திற்கு முன்னரே, வேறு பெயரில் இக்கலை தமிழகத்தில் வேர் ஊன்றி இருந்ததாகவும், ஒரு சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். லாவணி என்ற சொல்லுக்கு, மராட்டி மொழியில் நாற்று நடுதல் என்ற பொருள் உள்ளது. வயலில் வேளாண் பணி புரியும் பெண்கள், உழைப்பின் களைப்பு தெரியாமல் இருக்க,ஒருவருக்கு ஒருவர் கிண்டல்-கேலி செய்யும் விதமாக, இயல்பான கிராமிய இசைப் பாங்குடன் பாடத்தொடங்கியதே லாவணிக்கலையின் தொடக்கம் என ஆய்வுகள் நிறுவுகின்றன.

மராட்டியர்கள், தஞ்சையை ஆண்ட காலகட்டத்தில், இக்கலை வேகமாக தமிழகமெங்கும் பரவத்தொடங்கிற்று. இக்கலையில் மேடையில் இருவர் எதிர் எதிர் அமர்ந்து, ஒருவரை ஒருவர் ஏளனம் செய்து விவாதிப்பது போலப் பாடுவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த, தஞ்சை நஞ்சைக் கலைக்குழு என்னும் நாட்டுப்புறவியல் நிறுவனத்துடன் இணைந்து, சென்னையைச் சேர்ந்த தமிழ்க்கூடம் கலை-இலக்கிய இயக்கம், லாவணி கலை குறித்து ஒரு விரிவான ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளது .லாவணி கலை குறித்து பத்து ஆண்டுகாலம் ஆய்வு செய்து, முனைவர் பட்டம் பெற்ற, தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் விவேகானந்த கோபாலனின் வரலாற்று ஆய்வுகளை பின்புலமாகக் கொண்டு, எழுத்தாளர்-இயக்குநர் எஸ்.ராஜகுமாரன் இந்த ஆவணப் படத்தை இயக்கி உள்ளார்.

மேற்கோள்கள்

  1. தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.