உரோமைப் பேரரசு

உரோமைப் பேரரசு (Roman Empire) ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.

உரோமைப் பேரரசு
Roman Empire

கிமு 27 – கிபி 476 (மேற்கு)
330–1453 (கிழக்கு)


அகஸ்டசின் ஆரெயூசு, 1வது உரோமைப் பேரரசர்.

அமைவிடம்
கிபி 117 இல் உரோமைப் பேரரசு எழுச்சியுற்றிருந்த காலத்தில்.[1]
தலைநகரம்
மொழி(கள்)
பிராந்திய / உள்ளூர் மொழிகள்
சமயம்
  • line-height:1.1em
  • கிபி 380 முதல்: கிறித்தவம்
அரசாங்கம் குடும்ப வல்லரசில் வல்லாட்சி
பேரரசர்
 -  27 BC – AD 14 அகஸ்ட்டஸ் (first)
 - 98–117 திராயான்
 - 284–305 தியோகிளாத்தியன்
 - 306–337 முதலாம் கான்ஸ்டன்டைன்
 - 379–395 தியோடோசியசு I
 - 475–476 உரொமூலசு அகுஸ்தசுa
 - 527–565 முதலாம் ஜஸ்டினியன்
 - 1449–1453 ஒன்பதாம் கான்ஸ்டன்டீன்b
சட்டசபை செனட்
வரலாற்றுக் காலம் Classical to late antiquity
 - உரோமைக் குடியரசின்
இறுதிப் போர்
கிமு 32–30
 - பேரரசு நிறுவல் கிமு 30–2
 - அதியுச்சத்தில்
பேரரசு
கிபி 117
 - பிரிவு 293
 - தலைநகராக
கான்சுடன்டினோப்பிள்
330
 - இறுதி கிழக்கு-மேற்குப்
பிரிவினை
395
 - கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி மே 29 1453
பரப்பளவு
 - கிமு 25[3][4] 27,50,000 km² (10,61,781 sq mi)
 - 117[3][5] 50,00,000 km² (19,30,511 sq mi)
 - 390[3] 44,00,000 km² (16,98,849 sq mi)
மக்கள்தொகை
 -  கிமு 25[3][6] est. 5,68,00,000 
     அடர்த்தி 20.7 /km²  (53.5 /sq mi)
நாணயம் செஸ்டெர்சியசுc
தற்போதைய பகுதிகள்
  • a Usually considered the final emperor of the Western empire.
  • b Last emperor of the Eastern (Byzantine) empire.
  • line-height:0.95em
Warning: Value not specified for "common_name" |- style="font-size: 85%;" Warning: Value specified for "continent" does not comply[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்|]]

குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.

ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.

ரோமக் குடியரசு, மற்றும் ரோமப் பேரரசின் நிலப்பரப்புகள்: கிமு 218 (கரும் சிவப்பு), கிமு 133 (இளம் சிவப்பு), கிமு 44 (செம்மஞ்சள்), கிபி 14 (மஞ்சள்), கிபி 14 இன் பின்னர் (பச்சை), கிபி 117 (இளம் பச்சை).

பேரரசர்கள்

உரோமைப் பேரரசை முதன் முறையாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் ஆவார்.[7] இவரது ஆட்சிக்காலமே உரோமைப் பேரரசின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. பின்பு யூலியஸ் சீசர், நீரோ மன்னன் மற்றும் குளோடியசு போன்ற பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.

வரலாறு

திருச்சபையுடன் அரசர் ஒருங்கிணைத்து உருவாக்கியதே உரோமைப் பேரரசு ஆகும். பண்டைய உரோமைப் பேரரசில் கிருத்துவ மதத்திற்கு இடமில்லை. ஆனால், நவீன உரோமைப் பேரரசில் கிருத்துவ சமயம் அரசின் சமயமாக அங்கீகாரம் பெற்றிருந்தது. அதிகாரத்தின் மையத் தலைமையிடமாக உரோம் விளங்கியது. கிருத்துவ அரசுக்களை சகோதரத்துவத்துடன் ஒருங்கிணைப்பதைப் புதிய உரோமைப் பேரரசின் தலையாயக் குறிக்கோளாக இருந்தது. பேரரசில் அரசர் முடிசூடப்படுதல் என்பது போப்பாண்டவரால் நிகழ்த்தப்பட்டு வந்தது. முந்தைய உரோமைப் பேரரசானது இத்தாலிய முறையில் இயங்கி வந்தது. புதிய பேரரசு இயல்பிலும் ஒழுக்கத்திலும் கிருத்துவ முறையினைக் கடைப்பிடித்தது. அரசரிடம் பரந்துபட்ட அதிகாரம் இருந்தது. அரசரின் கட்டுப்பாட்டில் போப்பாண்டவர் செயல்பட வேண்டும் என்றிருந்தது. பிறகு, போப்பாண்டவருக்கு, பேரரசர்களும் மற்ற உலகத்தாரும் உரித்தானவர்கள் என்கிற அதிகாரம் நடைமுறையில் இருந்தது. ஐரோப்பாவில் பல பகுதிகளாகப் பிளவுபட்டிருந்த அரசுகளை, போப்பாண்டவரும் பேரரசரும் ஒரே பேரரசாகக் கொண்டுவந்தனர். அதுபோல், குடியரசுத் தன்மையைப் பலவீனம் செய்து பரம்பரை ஆட்சிமுறையை இது வலுப்படுத்தியது. நவீன உரோமைப் பேரரசானது நிலமானிய முறையை முற்றாகப் புறந்தள்ளியது. குறிப்பாக, ஜெர்மனியில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்தியது. இதுதவிர, இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளையும் உரோமைப் பேரரசு தோற்றுவித்தது.[8]

நகரங்கள் உருவாக்கம்

உரோமைப் பேரரசில் புதிய நகரங்கள் உருவாகின. இந்நகரங்கள் இடைக்காலத்தில் கைவினைத் தொழில் மற்றும் வாணிபம் ஆகியவற்றிற்கு மையமாகத் திகழ்ந்தன. தொடக்கக் காலத்தில் இப்பேரரசில் தோற்றுவிக்கப்பட்ட நகரங்கள் சிறியனவாகக் காணப்பட்டன. கைவினைக் கலைஞர்களின் பெருக்கத்தால் நகரங்களில் வியாபாரம் பெருமளவில் வளர்ந்தது. மேற்கு ஐரோப்பியர்கள் கீழை நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ள, இத்தாலியின் அமைவிடம் ஏற்றதாக இருந்தபடியால் நகரங்கள் அதிகம் பயனடைந்து வளரக் காரணமாயின. ஜெனிவா, பிளாரன்ஸ், வியன்னா போன்ற நாடுகள் வர்த்தக மையங்களாக மாற்றம் பெற்றன. ஜெனிவா மற்றும் வெனிஸ் ஆகிய நகரங்கள் கடற்கரை நகரங்களாக அமைந்திருந்த காரணத்தால், மிலன், பிசா ஆகிய நகரங்கள் வாணிப வழித் தடங்களாக உருவாகின. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் முதலான நாடுகளிலுள்ள நகரங்கள் பலவும் துறைமுகங்களாகவும் வர்த்தக வாணிப மையங்களாகவும் வளர்ச்சிப் பெறத் தொடங்கின. இந்நகரங்கள் இடைக்கால ஐரோப்பிய நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் உகந்த இடங்களாகின.[8]

கல்வி வளர்ச்சி

முந்தைய இடைக்காலத்தில் மக்களுக்குக் கல்வியைத் திருச்சபை அளித்தது. இலக்கியம், கணிதம், வேதாந்தம், தருக்கவியல் உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டன. கல்வி கற்கும் மையங்களாக மடாலயங்கள் செயல்படத் தொடங்கின. பல பல்கலைக் கழகங்களும் தோற்றுவிக்கப்பட்டன. அப்பல்கலைக் கழகங்கள் துறவிகளின் ஆளுகையின்கீழ் இயங்கி வந்தன. வேதாந்தம் மற்றும் தத்துவம் ஆகியவை கற்பித்தலில் முக்கியத்துவம் பெற்றன. வரலாறு, அறிவியல் பாடங்கள் கற்பிப்பதிலிருந்து விலக்கப்பட்டன. நூல்கள் கைகளால் எழுதப்பட்டன. போலக்னோ பல்கலைக்கழகம் சட்டம் பயில்வதற்குப் புகழ்வாய்ந்ததாக அமைந்திருந்தது. ஸ்பெயின் பல்கலைக்கழகத்தில் அரேபியம், எபிரேயம் ஆகிய மொழிகள் கற்றுத்தரப்பட்டன. பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பல்கலைக்கழகம் போல் இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டது.[9]

உரோமைப் பேரரசின் வீழ்ச்சி

உரோமைப் பேரரசு வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. காலனி நாடுகளின் முதலீடுகள் தவறான வழிகளில் சுரண்டப்பட்டன. உரோமானியர்கள் கடின உழைப்பைக் கைவிட்டனர். மாறாக, அடிமைகளைக் கொண்டு வேலை வாங்குவதையும் அவர்களைப் போரில் ஈடுபடுத்துவதையும் பெரிதும் விரும்பினர். உரோமைப் பேரரசு, கொள்கையளவில் குடியரசு ஆட்சியைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டு, நடப்பில் முடியாட்சி முறையையே பின்பற்றி வந்தது. இதன் காரணமாக, மக்கள் பேச்சுரிமையை இழந்தனர். செனட் மற்றும் பொது அவையில் பிரபுக்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எதேச்சதிகார ஆட்சியில், செனட் உதவிகரமாக இருந்து செயல்பட்டதால் சமுதாயத்தில் குழப்பநிலை நிலவியது. மக்களிடையே தோன்றி வளர்ந்த, ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி எண்ணங்கள் உரோமைப் பேரரசுவின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டன.

அதுபோல், உரோமைப் பேரரசில் மன்னருக்குப் பிறகு அவருடைய வாரிசுகள் ஆட்சி அதிகாரத்தை மேற்கொள்ள சட்டத்தில் இடமில்லாதது ஒரு பெருங்குறையாகும். இதனால், நாட்டில் உருவான உள்நாட்டுக் குழப்பங்கள், பல குழுக்களின் தோற்றம், அலிசன் நடவடிக்கை ஆகியவை உரோமைப் பேரரசு பலவீனமடைய காரணங்களாகின. இதுதவிர, ஆடம்பர வாழ்க்கைமுறைகளும் வரிவிதிப்பு முறைகளும் அந்நியரின் படையெடுப்பு நடவடிக்கைகளும் பேரரசின் வீழ்ச்சிக்கு அடிகோலின.[10]

உரோமப் பேரரசர்கள் சிலரின் படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Bennett, J. Trajan: Optimus Princeps. 1997. Fig. 1. Regions east of the புராத்து ஆறு river were held only in the years 116–117.
  2. Constantine I (306–337 AD) by Hans A. Pohlsander. Written 2004-01-08. Retrieved 2007-03-20.
  3. Rein Taagepera (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 118. doi:10.2307/1170959. http://www.jstor.org/stable/1170959?seq=4.
  4. John D. Durand, Historical Estimates of World Population: An Evaluation, 1977, pp. 253–296.
  5. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems researc h 12 (2): 219–229. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://cliodynamics.info/PDF/Turchin_Adams_Hall_2006.pdf. பார்த்த நாள்: 12 August 2010.
  6. John D. Durand, Historical Estimates of World Population: An Evaluation, 1977, pp. 253–296.
  7. Galinsky, Karl (2005). The Cambridge companion to the Age of Augustus. பக். 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-80796-8. http://books.google.com/books?id=ftcx-5j7rjwC&pg=PA13. பார்த்த நாள்: 2011-08-03.
  8. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி ஒன்று. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6. 2017. பக். ப. 171..
  9. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி ஒன்று. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6. 2017. பக். பக். 171-172..
  10. சமூக அறிவியல் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி ஒன்று. பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை - 6. 2017. பக். ப. 168..

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.