யாழ் தேவி

யாழ் தேவி (Yal Devi) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும்.

யாழ் தேவி Yal Devi යාල් දේවී
இலங்கையின் வடக்கு தொடருந்துப் பாதை
கண்ணோட்டம்
வகைநகரங்களுக்கிடையான தொடருந்து சேவை
நிகழ்வு இயலிடம்இலங்கை
முதல் சேவைஏப்ரல் 23, 1956[1]
கடைசி சேவைஇன்று
நடத்துனர்(கள்)இலங்கை புகையிரதம்
முந்தைய நடத்துனர்(கள்)இலங்கை அரசு புகையிரதம்
வழி
தொடக்கம்கோட்டை (கொழும்பு)
முடிவுகாங்கேசன்துறை (இடைநிறுத்தம்); தற்காலிகமாக யாழ்ப்பாணம் வரை
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்4001 (கொழும்பு கோட்டை-யாழ்ப்பாணம்)
4002 (யாழ்ப்பாணம்-கொழும்பு கோட்டை)[2]
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை66
வழிகாட்டுக் குறிப்புப் படம்
வடக்குப் பாதை
Legend
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறு கடல் நீரேரி
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறு குடா
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டி கோயில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரற்பெரியகுளம்
புணாவை
மன்னர் பாதை
தலைமன்னார் நோக்கி
மதவாச்சி சந்தி
மதவாச்சி
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
மிகிந்தளை நோக்கி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகரம்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பன்பொலை
ரந்தெனிகமை
மாகோ
மட்டக்களப்புப் பாதை மட்டக்களப்பு நோக்கி
மாகோ சந்தி
நாகொல்லாகமை
கணேவத்தை
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகலை
நாயிலிய
பொத்துஜெர
தளவத்தகெதர
கிராம்பே
பதுளை நோக்கி
பொல்காவளை சந்தி
கொழும்பு கோட்டை நோக்கி

இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ சந்தி, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, பிற்பகல் 1.15 இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி பிற்பகல் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.

தற்போது இச்சேவை யாழ்ப்பாணம் வரை இடம்பெறுகின்றது. 1990 சூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.

2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியாவின் ரயில்வே அமைச்சின் கீழுள்ள இர்க்கொன் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்தது.

இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி 2011 மே 27 அன்று ஓமந்தையை சென்றடைந்தது.

பின்னர் கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[3] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[4] 2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றது.[5]

2014ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாளன்று இதன் சேவை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பளை முதல் யாழ்ப்பாணம் வரை தொடங்கி வைக்கப்பட்டது.[6] யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 18 கிமீ தூரப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.