மிதிவெடி

மிதிவெடிகள் அல்லது கண்ணிவெடிகள் (ஒலிப்பு ) ஒருபோதும் தூங்குவதில்லை மலிவானவை என்பதால் யுத்தத்தில் பெருமளவிற் பாவிக்கப்பட்டது. கிளைமோர் மிதிவெடிகள் நிலத்தில் மேல் வைக்கப்படுபவை. இவை தவிர ஏனையவை பொதுவாக நிலத்தில் ஒருசில செண்டிமீட்டர் ஆழத்திலேயே புதைக்கப்படுபவை. எனினும் மிதிவெடி அகற்றுபவர்கள் பெரும்பாலும் 15 சென்டிமீட்டர் (6 அங்குலம்) வரை நிலத்தைச் சோதனை செய்து மிதிவெடிகள் அற்றது என்பதை உறுதி செய்துகொள்வர். மிதிவெடிகள் மிதிப்பதால் வெடிப்பவை ஆகவேதான் அவை மிதிவெடிகள் என்று அழைக்கப்படுகின்றது. ஜெய்ஹிந்த்,கோ போன்ற திரைப்படங்களில் வருவது போல மிதித்து எடுக்கும் போது வெடிப்பவை அல்ல, அப்படியாயின் அவை மிதித்து எடுத்தால் வெடி என்றவாறு அல்லவா அழைக்கவேண்டும். கிளைமோரில் உருக்கு உருளைகள் பொருத்தப்பட்டு எதிரியின் பக்கம் எனக்குறிப்பிடப்பட்ட ஓர் திசையில் வெடிக்கும். இவை ஒரு தடவை வெடித்தால் நூறுதடவை வெடிப்பது போல் உருக்கு உருளைகள் சிதறிச் சேதத்தை உண்டுபண்ணும். சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப மிதிவெடிகள் நிலத்தில் புதைக்கப்படும்போது ஓர் தளக்கோலத்திற் புதைக்கப்பட்டு அவை உரியமுறையில் பதிவு செய்யப்படும். இவை பின்னர் மிதிவெடிகளை அகற்றுவதற்கு உதவியாக இருக்கும். இலங்கையில் இலங்கை இராணுவத்தினர் புரிந்துணர்வு ஒப்பந்ததின் பின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி நடவடிக்கைப் பிரிவிற்குக் மிதிவெடி புதைக்கப்பட்ட அறிக்கைகளைக் கையளித்தனர்.

மேலதிக வாசிப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.