பளை தொடருந்து நிலையம்

பளை தொடருந்து நிலையம் (Pallai railway station, பளை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கிறது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகிறது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]

பளை
Pallai
இலங்கை தொடருந்து நிலையம்
இடம்பளை
இலங்கை
அமைவு9°36′28.80″N 80°19′46.70″E
உரிமம்இலங்கை ரெயில்வே
தடங்கள்வடக்குப் பாதை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
வரலாறு
மறுநிர்மாணம்4 மார்ச் 2014
சேவைகள்
முந்தைய நிலையம்   இலங்கை ரெயில்வே   அடுத்த நிலையம்
யானை இறவு
(கொழும்பு கோட்டையில் இருந்து)
  யாழ் தேவி   பரந்தன்
(காங்கேசன்துறை நோக்கி)
வடக்குப் பாதை
Legend
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறு கடல் நீரேரி
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறு குடா
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டி கோயில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரற்பெரியகுளம்
புணாவை
மன்னர் பாதை
தலைமன்னார் நோக்கி
மதவாச்சி சந்தி
மதவாச்சி
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
மிகிந்தளை நோக்கி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகரம்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பன்பொலை
ரந்தெனிகமை
மாகோ
மட்டக்களப்புப் பாதை மட்டக்களப்பு நோக்கி
மாகோ சந்தி
நாகொல்லாகமை
கணேவத்தை
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகலை
நாயிலிய
பொத்துஜெர
தளவத்தகெதர
கிராம்பே
பதுளை நோக்கி
பொல்காவளை சந்தி
கொழும்பு கோட்டை நோக்கி

2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றன.[3] பளை ஊடாக யாழ்ப்பாணம் வரையான சேவை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[4][5] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[6][7]

சேவைகள்

நாள்தோறும் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி) பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன. இதனை விட குளிரூட்டப்பட்ட சொகுசு சேவையும் பளை ஊடாக செல்கின்றது.[2]<[3]

மேற்கோள்கள்

  1. 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார், தினகரன், செப்டம்பர் 14, 2013
  2. "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை) (5 மார்ச் 2014). பார்த்த நாள் 5 மார்ச் 2014.
  3. "யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும்: குமார் வெல்கம". தமிழ்மிரர் (5 மார்ச் 2014). பார்த்த நாள் 5 மார்ச் 2014.
  4. Victor, Anucyia (13 அக்டோபர் 2014). "Back on track! The Queen of Jaffna train rides again along 250-mile route 24 years after it was suspended during Sri Lankan civil war". மெயில் ஒன்லைன். http://www.dailymail.co.uk/travel/travel_news/article-2790750/the-queen-jaffna-train-rides-24-years-suspended-sri-lankan-civil-war.html.
  5. Wamanan, Arthur (13 அக்டோபர் 2014). "Yal Devi recommences operations to Jaffna". த நேசன். http://www.nation.lk/edition/latest-top-stories/item/34203-yal-devi-recommences-operations-to-jaffna.html.
  6. "Jaffna-KKS railway track roars again". Daily FT. 3 சனவரி 2015. http://www.ft.lk/2015/01/03/jaffna-kks-railway-track-roars-again/.
  7. Balachandran, P. K. (3 சனவரி 2015). "Busy Rajapaksa Skips Maiden Run on India-built Jaffna Track". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/world/Busy-Rajapaksa-Skips-Maiden-Run-on-India-built-Jaffna-Track/2015/01/03/article2601276.ece.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.