மங்கோலியப் பேரரசு
மங்கோலியப் பேரரசு (1206 - 1368 ) (மங்கோலியன்: ஆங்சின்ட் குர்ரம்
மங்கோலியப் பேரரசு Mongol Empire Монголын Эзэнт Гүрэн Mongolyn Ezent Guren இக் மங்கோல் உல்சு | |||||
| |||||
![]() மங்கோலியப் பேரரசின் அமைவிடம் | |||||
தலைநகரம் | கரகோரம் (1220 – 1259)[1] | ||||
சமயம் | தெங்கிரீசம் (சாமனிசம்), பின்னர் பௌத்தம், கிறித்தவம் மற்றும் இசுலாம் | ||||
அரசாங்கம் | தெரிவு செய்யப்பட்ட அரசன் | ||||
Great Khan | |||||
- | 1206-1227 | செங்கிஸ் கான் | |||
- | 1229-1241 | ஒகோடி கான் | |||
- | 1246-1248 | குயுக் கான் | |||
- | 1251-1259 | மோங்கே கான் | |||
- | 1260-1294 | குபிளாய் கான் | |||
சட்டசபை | குறுல்த்தாய் | ||||
வரலாறு | |||||
- | செங்கிஸ் கான் பழங்குடியினரை இன்றிணைத்தல் | 1206 | |||
- | செங்கிஸ் கான் இறப்பு | 1227 | |||
- | பேரரசு பிரிதல் | 1260-1264 | |||
- | யுவான் மங்கோலியப் பேரரசின் வீழ்ச்சி | 1368 | |||
Warning: Value specified for "continent" does not comply |
மங்கோலிய பகுதியிலிருந்த நாடோடி பழங்குடிகளை ஒன்றிணைத்து செங்கிஸ் கான் தலைமையின் கீழ் மங்கோலிய அரசு உருவாக்கப்பட்டது. நாடோடி இனத்தின் அமைச்சர்கள்\மூத்தோர்கள் குழு செங்கிஸ்கானையும் அவர் வழித்தோன்றல்களையும் மங்கோல்களின் அரசனாக 1206 இல் தேர்ந்தெடுத்தது. செங்கிஸ் கான் பல இடங்களுக்கு மங்கோலியப் படைகளை அனுப்பி அரசை விரிவுபடுத்தினார்.[3][4] இரு கண்டங்களில் பரவியிருந்த இப்பேரரசு மேற்கு பண்பாட்டையும் கிழக்கு பண்பாட்டையும் இணைத்தது இது மங்கோலிய அமைதி எனப்பட்டது. இரு பண்பாடுகள் ஒன்றுடன் ஒன்று கலக்கவும் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்படவும் தொழில்நுட்பம் பரிமாறிக்கொள்ளப்படவும் வியாபாரம் செழிக்கவும் மங்கோலிய அமைதி பயன்பட்டது.[5][6]
மங்கோலியப் பேரரசுக்கு செங்கிஸ் கானின் மகன்களில் முதலில் செங்கிஸ் கானின் மரணத்துக்கு பின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஒகோடி கானுக்கும் செங்கிஸ் கானின் மற்ற மகன்கள் டொல்சிக்கும் செகடாய் கானுக்கும் டோச்சிக்கும் பிறந்த குழந்தைகளில் எவர் அரச பதவி ஏற்பது என்பது குறித்து கருத்து வேறுபாட்டதால் பேரரசு பிளவுபட அடிகோலியது. இம்மூவருக்குள் நடந்த சண்டையில் டோல்சி பிரிவு வேற்றி பெற்றது. ஆனால் டோல்சி பிரிவுக்குள்ளும் மோதல்கள் நடைபெற்றன. செங்கிஸ் கானுக்கு பின் ஒகோடி கானும் பின் அவர் மகன் கயுக் கானும் பின் டொல்சி பிரிவை சேர்ந்த டொல்சியின் மூத்த மகன் மாங்கி கானும் அரசாண்டார்கள். மாங்கி கானுக்கு பின் அவர் தம்பிகள் குப்லாய் கானுக்கும் ஆரிக் புகாவுக்கும் வாரிசு சண்டை ஏற்பட்டது. எதிர் எதிர் குறுல்தாய் அணிகள் இருவரையும் ஒரே சமயத்தில் மங்கோலிய பேரரசின் பேரரசனாக அறிவித்தன. இதனால் அரச பதவியை அடைய சகோதர சண்டை மூண்டது, அவர்கள் சண்டையுடன் செங்கிஸ் கானின் மற்ற மகன்களின் வழித்தோன்றல்களின் எதிர்ப்பையும் அவர்கள் முறியடிக்க வேண்டியிருந்தது.[7][8] இப்போரில் குப்லாய் வெற்றி பெற்றார். ஆனால் செகடாய் கான் & ஒகோடி கான் குடும்பங்களின் அதிகாரத்தை முற்றும் முறியடிக்க முடியவில்லை,
1260இல் கலிலேயாவில் நடந்த அயின் சாலுட் போர் மங்கோலிய ஆக்கிரமிப்பு போரில் திருப்பு முனையாக இருந்தது. அப்போரிலேயே முதன்முறையாக மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். இருந்தபோதிலும் மங்கோலியர்கள் கிழக்கு மத்திய கிழக்கு நிலப்பரப்பில் பல தாக்குத்தல்களை மேற்கொண்டனர், 1299இல் நடந்த மூன்றாம் ஓம்சு போரில் வெற்றி பெற்றபின் சிறிது காலம் காசாவையும் கட்டுக்குள் வைத்திருந்தனர். பல்வேறு நிலம்சார்ந்த அரசியல் காரணங்களால் அந்பகுதிகளை விட்டு விலகிச் சென்றனர். 1294இல் குப்லாய் கான மறையும் காலத்தில் மங்கோலியப் பேரரசு நான்கு பாகமாக பிளவுபட்டது.
வடமேற்கில் பொற் குழு கான் நாடும் நடு ஆசியாவில் செகடாய் கான் நாடும் தென் மேற்கில் இல்க் கான் நாடும் தற்போதுள்ள பெய்ஜிங் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பகுதியில் யுவான் அரசமரபும் தோன்றின.[9] 1304இல் மூன்று மேற்கு பகுதிகளில் உள்ள கான் நாடுகளும் யுவான் அரசமரபின் ஆளுமையை ஏற்றுக்கொண்டன.[10][11] ஆனால் 1368இல் ஆன் சீனர்களின் மிங் அரசமரபு மங்கோலியர்களின் தலைநகரை கைப்பற்றியது. மங்கோலிய இனத்தவர்களான யுவான் அரசர்கள் மங்கோலிய நாட்டுபகுதிக்கு பின்வாங்கி அப்பகுதியை ஆண்டார்கள். இது வடக்கு யுவான் அரசமரபு என அழைக்கப்படுகிறது. யுவான் அரசமரபு வீழ்ந்த பின் மற்ற கான் நாடுகள் சில நூற்றாண்டுகள் தாக்கிப்பிடித்து இறுதியில் 1335-1353 காலகட்டத்தில் முழுவதுமாக வீழ்ந்தன.
வரலாறு


10ஆம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியா, மஞ்சூரியா, வட சீனாவின் சில பகுதிகள் லிஓ அரசமரபு கட்டுப்பாட்டில் இருந்தது. 1125 இல் சுர்சென் பழங்குடிகளால் உருவாக்கப்பட்ட சின் அரசமரபு (1115-1234) லிஓ அரசமரபின் மங்கோலியா பகுதிகளை கைப்பற்றியது. 1130இல் பொன்வேந்தன் என அறியப்படும் சின் அரசமரபு ஆட்சியாளர்கள் கமங் மங்கோல் பழங்குடியினர் தாக்குதலை தாக்குப்பிடித்தார்கள், இந்த மங்கோல்களுக்கு செங்கிஸ் கானின் முப்பாட்டன் கபுல் கான் தலைமை வகித்தார்.[12]
மங்கோலிய மேட்டு நிலத்தில் ஐந்து ஆற்றல்மிக்க பழங்குடியினர் கூட்டமைப்பு இருந்தது. கமங் மங்கோல், டாட்டர், நைம்மன், கெராய்ட்டி, மெர்கிட் ஆகியவை அவை. சின் அரசர்கள் மங்கோல் பழங்குடிகள் இடையே மோதலை உருவாக்குது என்ற கொள்கை வைத்திருந்தார்கள், குறிப்பாக கமங் மங்கோல்களுக்கும் டாட்டர்களுக்கும் மோதலை மூட்டியிருந்தார்கள். இப்படி அவர்கள் ஒற்றுமையில்லாமல் மோதிக்கொண்டு இருந்தால் தான் தங்களுக்கு ஆபத்தில்லை என்று கருதினார்கள்.
கானுக்கு அடுத்து தலைமை பொருப்பை ஏற்ற அபகை கானை டார்ட்டர்கள் வஞ்சித்து சின்களிடம் ஒப்படைக்கிறார்கள். சின்கள் அபகை கானை கொலை செய்து விடுகிறார்கள். இதனால் கமங் மங்கோல்கள் சின் அரசின் பகுதிகளை தாக்குகிறார்கள், ஆனால் சின்களின் எதிர் தாக்குதலில் கமங் மங்கோல்கள் தோற்றுவிடுகிறார்கள்.[12]
1147இல் சின்கள் கொள்கையை மாற்றிக்கொண்டு கமங் மங்கோல்களுடன் அமைதி உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு பல கோட்டைகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்கிறார்கள். மங்கோல்கள் அபகை கானை வஞ்சித்தற்காக வஞ்சம் தீர்க்க டார்டர்களை தாக்குகிறார்கள். இரு பழங்குடிகளுக்கும் மோதல் முற்றுகிறது. டார்டர்கள் சின் படைகளின் துணையுடன் 1161இல் மங்கோல்களை வெற்றி கொள்கிறார்கள்..[12]
செங்கிஸ் கானின் வளர்ச்சி
மங்கோல் இனத்தலைவரின் மகனான தமுஜின் என்ற இயற்பெயர் கொண்ட செங்கிஸ் கான் சிறு வயதிலேயே தந்தையை இழந்து அனாதையானார். பின்பு கெராய்ட் இன தலைவனான தொகுருல் கானின் கீழ் பணிபுரிந்தார், தொகுருல் சின் அரசமரபு அளித்த வாங் கான் என்ற பட்டத்தால் அழைக்கப்படுகிறார், தமுஜினின் மனைவியை மெர்கிட் இனத்தவர்கள் கவர்ந்து சென்றபோது தொகுருல் பெரும் படையை கொடுத்து உதவியதுடன் சமுகாவை இணைந்துக்கொண்டு போரிட கூறினார்.சிறந்த நண்பனாக இருந்த சமுகாவுக்கும் இவருக்கும் பின்பு பகை ஏற்படுகிறது. தமுஜின் வளர்ச்சியால் அச்சம் கொண்ட வாங் கான், அவரது வளர்ச்சியை சமுகாவுடன் இணைந்து தடுக்க நினைத்த போது தமுஜின் சமுகாவையும் வாங் கானையும் தோற்கடிக்கிறார். அதன் பின் அவர் தன் பெயரை செங்கிஸ் கான் என்று வைத்துக்கொள்கிறார். கான் மற்ற மங்கோலிய பழங்குடியினரை தோற்கடித்து மங்கோல் நாட்டை விரிவாக்குகிறார். செங்கிஸ் கான் சட்ட முறை சிறந்த யாசாவை அறிமுகப்படுத்துகிறார். யாசா வரிவிதிப்பை முறைபடுத்துகிறது. அனைத்து திடகாத்திரமான மனித்தர்களும் குளிர் காலத்தில் வேட்டைக்கு செல்லலாம் என்கிறது. யாசா என்ற சொல்லே கானுக்கு கீழ் இருந்த அனைத்து மங்கோலியர்களையும் குறிக்க மங்கோலியர்களால் பயன்படுத்தப்பட்டது.
கொள்கையும் படையெடுப்பும்

கானின் படைப்பிரிவு அர்பன் (10 பேர்), சூனு (100), மின்ங்கன் (1000 பேர்), டுமன் (10,000 பேர்) என பிரிக்கப்பட்டிருந்தது. மெய்காவல் படை பகலுக்கு ஒன்று (கொர்ச்சின் டாகுத்) இரவுக்கு ஒன்று (கேசிங்) என பிரிக்கப்பட்டிருந்தது.[13] தாழ்ந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் விசுவாசிகளுக்கு உயர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.[14]
தனக்கு நெருக்கமான உறவுகளின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்களை விட மற்ற குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட படை வீரர்கள் குறைவு. யாசா சட்டம் அப்போதைய மங்கோலியர்களின் தினசரி அரசியல் குடும்ப வாழ்வில் பங்கு பெற்றிருந்தது. பெண்களை விற்பதையும் திருட்டையும் மங்கோலியர்களுக்குள் சண்டையிடுவதையும் விலங்குகள் கருவுறும் காலத்திலான வேட்டையையும் செங்கிஸ் கான் தடை செய்திருந்தார்[14]
கான் ஏழ்மை நிலையிலிருப்பவர்களுக்கும் மத குருமார்களுக்கும் வரி விலக்கு அளித்தார்.[15] இவர் கல்வியை ஆதரித்தார், உய்குர் வரி வடிவத்தை ஏற்றுக்கொண்டார் இது உய்குர்-மங்கோலிய வரிவடிவத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தது. முன்பு நைமன் கான்களுக்கு பணியாற்றிய உய்குர் டடங்குகாவை தன் மகன்களுக்கு படிப்பு சொல்லித்தர ஆசிரியராக நியமித்தார்.[16]

செங்கிஸ் கான் சர்சென்களின் சின் அரசமரபுடனும் வட சீனாவிலிருந்த மேற்கு சியா அரசமரபுடனும் மோதினார் பின்பு பலமிக்க அரசுகளான திபெத்துடனும் காரா கைடய் உடனும் மோதினார்[17] இவர்கள் அனைவரையும் வெற்றி கொண்ட பின்பு மேற்குலுள்ள நடு ஆசியாவை நோக்கி தன் படையெடுப்பை நகர்த்தினார். ஏரல் கடலில் பாயும் அமு தாரியா ஆற்று பகுதியிலுள்ள பண்டைய காலத்தில் டிராண்சுஓக்சினா என அழைக்கப்பட்ட பகுதியிலும் கிழக்கு பாரசீக பேரரசின் பகுதியிலும் பேரரழிவை ஏற்படுத்தினார். பின்பு கிவ்வன் ரசு எனப்பட்ட (உருசியா, பெலாரசு, உக்ரைன் நாடுகளுக்கு முன்பிருந்தது) நாட்டையும் காக்கேசியாவையும் தாக்கினார்.[18] இறப்பதற்கு முன்பே பேரரசை தன் மகன்களுக்கு பங்கு போட்டு கொடுத்து பேரரசானது அரசு குடும்ப சொத்து போல் ஆக்கினார்.[19]
செங்கிஸ் கானும் பின் வந்த யுவான் அரசமரபு பேரரசர்களும் இசுலாமிய முறைப்படியான அலால் முறைப்படி இறைச்சி வெட்டுவதை தடை செய்து முசுலிம்கள் மங்கோலிய முறைப்படியே இறைச்சியை வெட்ட வேண்டும் என்றார்கள். அதனால் முசுலிம்கள் யாருக்கும் தெரியாமல் ஆட்டை வெட்டினார்கள்.[20] முசுலிம்களையும் யூதர்களையும் செங்கிஸ் கான் அடிமைகள் என்றார். விருத்த சேதனம் தடை செய்யப்பட்டு இருந்தது. யூதர்கள் மத முறைப்படியான உணவான கசுருத்தை உண்ண தடை விதிக்கப்பட்டிருந்தது.[21]
செங்கிஸ் கான் மரணமும் ஒகோடி கானின் விரிவாக்கமும் (1227-1241)

செங்கிஸ் கான் ஆகத்து 18, 1227 அன்று இறக்கிறார் அப்போது மங்கோலியப் பேரரசு அமைதி (பசுபிக்) பெருங்கடலில் இருந்து காசுப்பியன் கடல் வரை பரவியிருத்தது. உரோமைப் பேரரசு & முசுலிம் காலிப்பத் அரசை விட இருமடங்கு பெரியதாக இருந்தது. செங்கிஸ் கான் தனது மூன்றாவது மகன் ஒகோடி கானை வாரிசாக நியமித்தார். மங்கோலிய வழக்கப்படி யாருக்கும் தெரியாத (இரகசிய) இடத்தில் கான் புதைக்கப்பட்டார். ஒகோடி கானை குறுதளாய் மூலம் முறையாக தேர்ந்தெடுக்கும் வரை பேரரசை 1229 வரை மற்றொரு மகன் தொல்சி கவனித்துக்கொண்டார்.[22]
பதவியேற்ற உடன் ஒகோடி கான் தன் படைகளை காசுப்பியேன் பகுதி புல்வெளிப்பகுதியில் உள்ள பாசுக்கிர் பல்கர் ஆகிய இனத்தவரை தன் கட்டுக்குள் கொண்டு வர அனுப்பினார்.[23] கிழக்கில் மங்கோயர்களின் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த மஞ்சூரியை ஆண்ட கிழக்கு சியா அரசையும் துங்குசிக் மொழி பேசும் இனத்தையும் முற்றாக தோற்கடித்தார். 1230இல் ஒகோடி கான் சின் அரசமரபுக்கு எதிரான படைகளுக்கு தலைமை ஏற்றார். ஒகோடியின் படைத் தளபதி சுபுடாய் சின் அரசமரபு அரசர் வான்யங் சோலி அவர்களின் தலைநகரை 1232இல் கைபெங் முற்றுகையின் போது கைப்பற்றினார்[24] வான்யங் சோலி தப்பிச்சென்ற கைசூ நகரை மங்கோலியர்கள் கைப்பற்றிய உடன் 1234இல் சின் அரசு முற்றாக ஒழிந்தது. 1234 இல் ஒகோடியின் மகன்கள் கோசு, கோடென் டான்குட் இன தளபதி சேகன் ஆகியோர் சொங் அரசமரபு உதவியுடன் தென் சீனத்தை கைப்பற்றினார்கள்.[25][26]
பல ஆன் சீனர்களும் கைடான் இன மக்களும் சின் அரசுக்கு எதிராக மங்கோலியர்களுடன் இணைந்துகொண்டனர். அதனால் அவர்கள் ஒகோடியின் நன்மதிப்பை பெற்று சிலர் 10,000 கொண்ட துமென் படைப்பிரிவை வழி நடத்தும் உரிமையை பெற்றார்கள்.[27][28][29] மேற்கு சியாக்களுக்கு எதிராக லியு எயிமா(ஆன் சீனர்), சி தியன்சியங் தலைமையில் மங்கோலியர்கள் போரிட்டனர்.[30]
மேற்கில் ஒகோடியின் படைத்தளபதி சோர்மாகுன், இக்வரிச்மிஅன் பேரரசின் கடைசி அரசர் சலால் அட்-டின் மின்ங்புநுவை தோற்கடித்தார். தென் பாரசீகத்தில் இருந்த சிறிய அரசுகள் மங்கோலியர்களின் செல்வாக்கை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு கீழ் நடந்தன.[31][32] கிழக்கில் பல முற்றுகைக்களுக்கு பின்னும் கொரிய மூவலந்தீவை ஒகோடியால் முழுவதும் கைப்பற்ற முடியவில்லை.[33] வடமேற்கு மங்கோலியாவில் உள்ள காரகோரத்தை பேரரசின் தலைநகராக ஒகோடி உருவாக்கினார்.[34]
மேற்கோள்கள்
- The actual foundation of this city did not occur until 1220. After the death of Möngke Khan in 1259, the empire was split, with Dadu being the capital of the Yuan Dynasty from 1272 to 1368.
- Morgan. The Mongols. p. 5.
- Diamond. Guns, Germs, and Steel. p. 367.
- The Mongols and Russia, by George Vernadsky
- Gregory G.Guzman "Were the barbarians a negative or positive factor in ancient and medieval history?", The Historian 50 (1988), 568-70.
- Allsen. Culture and Conquest. p. 211.
- "The Islamic World to 1600: The Golden Horde". University of Calgary (1998). மூல முகவரியிலிருந்து 13 November 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 December 2010.
- Michael Biran. Qaidu and the Rise of the Independent Mongol State in Central Asia. The Curzon Press, 1997, ISBN 0-7007-0631-3
- The Cambridge History of China: Alien Regimes and Border States. p. 413.
- Jackson. Mongols and the West. p. 127.
- Allsen. Culture and Conquest. pp. xiii, 235.
- Barfield. p. 184.
- Ratchnevsky. p. 191.
- Secret history. p. 203.
- Vladimortsov. p. 74.
- Weatherford. p. 70.
- Man, John (2004). Genghis Khan: Life, Death, and Resurrection. New York: Thomas Dunne Books. பக். 116.
- Morgan. pp. 99–101.
- Michael Dillon (1999). China's Muslim Hui community: migration, settlement and sects. Richmond: Curzon Press. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7007-1026-4. https://books.google.com/?id=hUEswLE4SWUC&pg=PA24. பார்த்த நாள்: 2010-06-28.
- Johan Elverskog (2010). Buddhism and Islam on the Silk Road (illustrated ). University of Pennsylvania Press. பக். 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8122-4237-8. https://books.google.com/?id=N7_4Gr9Q438C&pg=PA230. பார்த்த நாள்: 2010-06-28.
- Man. Genghis Khan. p. 288.
- Saunders. p. 81.
- Atwood. p. 277.
- Rossabi. p. 221.
- Atwood. p. 509.
- Collectif 2002, p. 147.
- May 2004, p. 50.
- Schram 1987, p. 130.
- eds. Seaman, Marks 1991, p. 175.
- May. Chormaqan. p. 29.
- Amitai. The Mamluk-Ilkhanid war
- Grousset. p. 259.
- Burgan. p. 22.