ஹான் சீனர்

ஹான் சீனர் எனப்படுவோர் சீனாவில் வாழுகின்ற ஒரு இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவின் பெரும்பான்மை இனத்தவர். உலக மக்களில் மிகப் பெரிய தனி இனக்குழுவினரும் இவர்களே. சீனாவின் மக்கள்தொகையில் இவர்கள் 92% ஆகவும், உலக மக்கள் தொகையில் 20% ஆகவும் இவர்கள் உள்ளனர். இவர்களுக்குள் உள்ள துணைக் குழுக்களிடையே குறிப்பிடத்தக்க மரபியல், மொழி, பண்பாட்டு மற்றும் சமூக வேறுபாடுகள் காணப்படுகின்றன.[1] இதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்ற, பல்வேறு இனக்குழுவினரதும், பழங்குடிகளினதும், புலப்பெயர்வு, இனக்கலப்பு என்பன காரணங்களாகக் காட்டப்படுகின்றன.

ஹான்
Han
(漢族 or 汉族)
மொத்த மக்கள்தொகை
1,310,000,000
உலக மக்கள் தொகையில் 19.73%
(அண்ணளவாக)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 சீனா1,207,541,842
--  ஆங்காங்6,593,410
--  மக்காவு433,641
 சீனக் குடியரசு (தாய்வான்)22,575,365
 சிங்கப்பூர்2,684,936
      இந்தோனேசியா7,566,200
      தாய்லாந்து7,053,240
      மலேசியா6,590,500
      ஐக்கிய அமெரிக்கா3,376,031
      கனடா1,612,173
      பெரு1,300,000
      வியட்நாம்1,263,570
      பிலிப்பீன்சு1,146,250
      மியான்மர்1,101,314
      உருசியா998,000
      ஆத்திரேலியா614,694
      சப்பான்519,561
      கம்போடியா343,855
      ஐக்கிய இராச்சியம்296,623
      பிரான்சு230,515
      இந்தியா189,470
      லாவோஸ்185,765
      பிரேசில்151,649
      இத்தாலி145,000
      நெதர்லாந்து144,928
      தென் கொரியா137,790
      நியூசிலாந்து147,570
      செர்பியாover 100,000
      அயர்லாந்து11,218
மொழி(கள்)
சீன மொழிகள்
சமயங்கள்
பெரும்பான்மையோர் மகாயான பௌத்தம் மற்றும் டாவோயிசம். சிறு தொகை கிறிஸ்தவர்கள், கன்பூசியம் மற்றும் Chinese folk religion ஆகியவற்றின் பின்புலத்தோர்.
ஹான் சீனர்

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.